செய்திகள் :

`எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு செயல்படும் அரசு' - த.வெ.க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

post image

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும் அரசாக தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை சந்தித்த பிறகு பேசிய அவர், தமிழக நீர்வளத் துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு பரிந்துரைகள் மற்றும் திட்டங்களை அரசிடம் வழங்கியுள்ளதாக கூறினார்.

அன்புமணி
அன்புமணி

“தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய நீர்த்திட்டங்கள், அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் மற்றும் நீர்வள மேலாண்மை தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை நாங்கள் அரசிடம் வழங்கியுள்ளோம். ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுத்து வருகிறோம்,” என்றார்.

மேலும், “இது மிகப்பெரிய மாற்றமாக நான் பார்க்கிறேன். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், எதிர்க்கட்சிகளையும் அழைத்து அவர்களது ஆலோசனைகள் மற்றும் யோசனைகளைக் கேட்டு, அதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக தமிழக வெற்றிக்கழக அரசு உள்ளது. இதற்காக அந்த அரசை பாராட்டுகிறேன்,” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

`அதிமுக-வில் டிடிவி தினகரன் ரீ-என்ட்ரி?' - எடப்பாடியிடமே வைக்கப்பட்ட கோரிக்கை! - நடந்தது என்ன?

அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தமிழக வெற்றிக்கழகத்தை நோக்கி நகர்ந்து வரும் அரசியல் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தஞ்சாவ... மேலும் பார்க்க

”குடிக்க நல்ல தண்ணி இல்ல; சுவாசிக்க நல்ல காற்று இல்ல” - குப்பைக் கிடங்கால் புலம்பும் மக்கள்

தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூரி பெரியகோயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் இந்தக் குப்பைக... மேலும் பார்க்க

த.வெ.க. MLA-க்கள் பேர விவகாரம்: செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆஜராகவில்லை! - FIRல் அதிர்ச்சி தகவல்?

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அரசைக் கவிழ்க்க முயற்சித்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகவில... மேலும் பார்க்க

'ஏவுகணைகளை தாருங்கள்; கிடங்குகளில் இருப்பதால் பயன் இல்லை' - உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி கோரிக்கை

ரஷ்யா, உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இன்று (ஜூலை 6, 2026) காலை ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி, அந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்திரு... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்! - விரைவில் டெண்டர்

தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 2,000 மின்சார ஏசி பேருந்துகளை வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இ... மேலும் பார்க்க