செய்திகள் :

``விஜய் அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது: போர்க் கவசமாக இருந்து பாதுகாப்போம்" - வைகோ ஆவேசம்!

post image

விஜய் அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது. நாங்கள் காவல் அரணாக, போர்க் கவசமாக இருந்து பாதுகாப்பு அளிப்போம் என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்திருக்கிறார். பல்லடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தின் 25 மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்காமல் போகும். இதற்குப் பின்னணியில் இருக்கும் முக்கிய வில்லன் மத்திய பா.ஜ.க அரசுதான். அவர்கள் வெளிப்படையாக அனுமதி தராமல், மறைமுகமாக நிதி ஒதுக்கி அணை கட்ட ஊக்குவிக்கிறார்கள். மேகதாது அணை விவகாரத்திற்காக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தும் நடைப்பயணத்தை வரவேற்கிறேன்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தற்போதைய த.வெ.க ஆட்சியை தி.மு.க-வினர் 'குதிரை பேரம்' என்று விமர்சிக்கின்றனர். முன்னாள் தி.மு.க ஆட்சியில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. கம்ப ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தீர்களே, அந்தப் பேரத்திற்குப் பெயர் 'பெருச்சாளி பேரமா'? குதிரை பேரத்திற்கு வழிகாட்டியதே தி.மு.க-தான். இப்போது ஆட்சி கைவிட்டுப் போனதால் அதைத் தாங்க முடியாமல், இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

கடந்த தி.மு.க ஆட்சியில் ஒரு அனுமதி பெற வேண்டுமானால் பல லட்சங்கள் முதல் கோடிகள் வரை கப்பம் கட்ட வேண்டியிருந்தது. ஆனால், தற்போதைய த.வெ.க அரசு ஊழலை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. பத்து காசு லஞ்சம் இல்லாமல் இங்கே அனுமதிகள் வழங்கப்படுகின்றன. எனவே, இந்த நேர்மையான அரசை வீழ்த்த எதிரிகள் எத்தனை பகீரத முயற்சிகளை மேற்கொண்டாலும், நானும் என் தோழர்களும் தவெக அரசுக்கு அரணாக நின்று பாதுகாப்போம்.

கூட்டணியில் இருந்துகொண்டே விமர்சிப்பது கூட்டணி தர்மத்திற்கு உகந்தது அல்ல என்பதாலேயே கடந்த காலத்தில் அமைதி காத்திருந்தேன். வரவிருக்கும் இடைத்தேர்தலில் த.வெ.க அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு ம.தி.மு.க-வின் முழு ஆதரவு இருக்கும். தவெக - மதிமுக இடையே மிகச் சிறந்த, இணக்கமான உறவு நீடிக்கிறது." என்றார்.

`அதிமுக-வை நிர்மூலமாக்க சிலர் முயற்சிக்கின்றனர்' - எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்க... மேலும் பார்க்க

கொலம்பஸுக்கு பின்னும், சுதந்திரத்திற்கு முன்னும்.! 250 வயது சுதந்திர அமெரிக்காவின் வரலாறு என்ன?

1492-ம் ஆண்டு ஆசியாவிற்கான மேற்கு வர்த்தகப் பாதையைத் தேடி ஸ்பெயினில் இருந்து புறப்பட்டார் கடற்பயணியும், ஆய்வாளருமான கிறிஸ்டோபர் கொலம்பஸ். ஆனால், அவர் அடைந்ததோ அமெரிக்காவை. கொலம்பஸ் என்ன நினைத்து கிளம்... மேலும் பார்க்க

”விஜய், உதயநிதியைச் சமாளிக்க டி.டி.வி.தினகரனைச் சேர்க்க வேண்டும்” - அதிமுக நிர்வாகி ஆலோசனை

சட்டமன்றத் தேர்தல் தோல்வி, அதிமுக எம்.எல்.ஏக்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் ஐக்கியமாகி வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோ... மேலும் பார்க்க

`Last Bench'சர்ச்சை: அமைச்சர் கீர்த்தனாவுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பள்ளி வளாகத்தில் உள்ள சமை... மேலும் பார்க்க

`அதிமுக-வில் டிடிவி தினகரன் ரீ-என்ட்ரி?' - எடப்பாடியிடமே வைக்கப்பட்ட கோரிக்கை! - நடந்தது என்ன?

அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தமிழக வெற்றிக்கழகத்தை நோக்கி நகர்ந்து வரும் அரசியல் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தஞ்சாவ... மேலும் பார்க்க

`எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு செயல்படும் அரசு' - த.வெ.க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும் அரசாக தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.சென்னை தலை... மேலும் பார்க்க