செய்திகள் :

Serial update: அபிதா வெளியேறிய பின்னணி... போரட்டத்துக்குத் தயாராகும் சீரியல் ஆர்ட்டிஸ்ட்டுகள்!

post image

'சந்தியா ராகம்' தொடரிலிருந்து நடிகர் ராஜ்கமலும் 'சின்னஞ்சிறு கிளியே' தொடரிலிருந்து நடிகை அபிதாவும் வெளியெறி இருக்கிறார்கள்.

இரண்டு பேருமே அவரவர் நடித்து வந்த தொடர்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வந்தவர்கள்.

ராஜ்கமல் வெளியேற்றத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆயிரம் எபிசோடுகள் வரை நெருங்கி விட்ட நிலையில் திடீரென அவர் வெளியேறியதன் பின்னணியில் குறிப்பிட்ட காரணம் எதுவுமில்லை என அவரே வீடியோ வெளியிட்டிருக்கிறார். தவிர்க்க இயலாத சில காரணங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

rajkamal

அபிதா விஷயம் தொடர்பாக சீரியல் தொடர்புடைய வட்டாரத்தில் விசாரித்த போது,

'நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீரியலுக்கு திரும்பிய நிலையில் அவரது கேரக்டருக்கு தொடக்கத்திலிருந்த முக்கியத்துவம் போகப் போகக் குறைந்ததாகக் கருதியே வெளியேறினார் என்றனர் சிலர்.

அபிதாவையே தொடர்பு கொண்டு நாம் கேட்ட போது,

'என்னுடைய அம்மா உடல்நலனில் கொஞ்சம் பிரச்னை.. பக்கத்துல இருந்து கவனிக்க வேண்டியதிருந்தது. ஷூட்டிங்குக்காக பதினைஞ்சு நாள் சென்னையில இருந்தா அவங்களைக் கவனிக்க‌ முடியாது. அதனால நானே விஷயத்தைச் சொல்லிட்டு வெளியேறிட்டேன்' என்கிறார்.

சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில்

'பெயரளவில் தான் நாம இருக்கோம், மத்தபடி அங்க நமக்கு வேலையே கிடையாது' என புலம்புகிறார்கள் தமிழ் சீரியல் ஆர்ட்டிஸ்டுகள் சிலர்.

என்ன விவகாரமென காது கொடுத்தோம்.

'இப்ப சமீபத்துல முடிஞ்ச சீரியலுங்க அது. தயாரிப்பாளர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அதனாலாயே ஷூட்டிங்கை பெங்களூருவுல வச்சார். லைட் மேன் உள்ளிட்ட டெக்னீஷியன்கள் பெங்களூரு. கேமரா மேன் சென்னையில இருந்து போனப்ப, 'அப்படின்னா நாங்க ஒர்க் பண்ண மாட்டோம்'ம்னு லைட் மேன் உள்ளிட்ட அங்க ஒர்க் பண்ணிட்டிருந்த மத்த தொழில் நுட்ப ஆட்கள் பிரச்னை செஞ்சாங்க.

இதெல்லாம் கூட பரவால்ல, ஒரு கட்டத்துல நாலு முக்கியக் கேரக்டர்கள் தவிர மத்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லாருமே அந்த ஊரைச் சேர்ந்தவங்களா கமிட் ஆகிற ஒரு சூழலும் உருவாச்சு. அந்த ஆர்ட்டிஸ்டுகளுக்கு எந்த பிரச்னையும் வராது. ஆனா சென்னையில இருந்து போற ஆர்ட்டிஸ்டுகளை எப்ப வெளியேத்தலாம்னுதான் யோசிட்டிட்டிருப்பாங்க.

நம்மூர் நடிகை ஒருவர் கன்வேயன்ஸ் கேட்க, கேரக்டரை முடிச்சு விட்டுட்டங்க. விஷயம் சீரியல் நடிகர் சங்கம் வரை போய் நடிகைக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிக் கொடுக்க வேண்டியதாப் போச்சு.

இப்ப அதே புரடியுசருக்கு சேனலில் திரும்பவும் ஸ்லாட் கிடைச்சிருக்கு. அடுத்த சீரியல்லயும் இதே அலப்பறைகள் தொடர்ந்தா போராட்டத்தை நடத்தவும் தயாரா இருக்கோம்'' என்கிறார்கள்.

ராஜ்மோகன் எங்க உறுப்பினர்; ஆனாலும் முதல்வரை பார்க்க‌ அப்பாயின்ட்மென்ட் கிடைக்கல!- டிவி நடிகர் சங்கம்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் முதலமைச்சரைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கிறார்கள், சின்னத்திரை சங்க நிர்வாகிகள்.நடந்து முடிந்த சட்டசபைத... மேலும் பார்க்க

Serial update: மூணு பேருக்காக முடிச்சு விட்டாங்க! - வருத்ததில் ‘ஆடுகளம்’ சீரியல் ஆர்ட்டிஸ்டுகள்?

விஜய் டிவியில் நாளை மறுதினம் நிறைவடைகிறது மகாநதி சீரியல். ’சரவணன் மீனாட்சி’, பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – கதிர் ஜோடிகளுக்குப் பிறகு ஜோடிக்காகவே பார்க்கப்பட்ட சீரியல் என இந்த சீரியலைச் சொல்லலாம். விஜய் ... மேலும் பார்க்க

மும்பையில் செட், 2 ஹோஸ்ட்! களமிறங்கும் பிக்பாஸ் வின்னர்.! விஜய் டிவியில் விரைவில் 'செகண்ட் லவ்' ஷோ!

விஜய் டிவியில் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கவிருக்கிறது புத்தம் புதிய ரியாலிட்டி ஷோவான 'செகன்ட் லவ்' என்கிற பேச்சு தான் இப்போது டெலிவிஷன் உலகில் வைரல்.'பிக்பாஸ்' நிகழ்ச்சியை முதன்முதலாக தமிழுக்குக் ... மேலும் பார்க்க

`பத்துக்கு பத்து வீட்ல மொத்த குடும்பமும் வசிச்ச‌தை நினைச்சா..' - புதுமனை புகுந்த‌ பழைய ஜோக் தங்கதுரை

சென்னையில் புது வீடு வாங்கிக் குடியேறி இருக்கிறார் `பழைய ஜோக்' தங்கதுரை.விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தங்கதுரை. டிவியிலிருந்து சினிமா பக்கமும் வந்தவர் 'டிடி ரிட்டர்ன்... மேலும் பார்க்க

"'Heart Beat 3'ல நான் இருக்கேனா?!" - 'கனா கண்டேனடி' சஞ்சனா ஷேரிங்ஸ்

'ஹார்ட் பீட்' சீரிஸிலும், 'பொன்னி' சீரியலில் வில்லியாக நடித்து மக்களுக்குப் பரிச்சயமான சஞ்சனா, இப்போது 'கனா கண்டேனடி' தொடரில் நடித்து வருகிறார். இத்தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.Kana Ka... மேலும் பார்க்க

"சாண்ட்ரா இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா எங்கிட்ட டைவர்ஸ் வாங்கியிருப்பாங்க" - பிரஜின் பேட்டி

''தமிழில் இதுவரை 16 படங்கள் வந்திடுச்சு. நாலு படம் ரிலீஸ்க்கு வெயிட்டிங். மலையாளத்துல 4. கன்னடம், தெலுங்கில் தலா 1. ஆனாலும் எனக்குப் பிறகு டிவியில இருந்து சினிமாவுக்குப் போன விஜய் சேதுபதி, சிவ கார்த்த... மேலும் பார்க்க