செய்திகள் :

மும்பையில் செட், 2 ஹோஸ்ட்! களமிறங்கும் பிக்பாஸ் வின்னர்.! விஜய் டிவியில் விரைவில் 'செகண்ட் லவ்' ஷோ!

post image

விஜய் டிவியில் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கவிருக்கிறது புத்தம் புதிய ரியாலிட்டி ஷோவான 'செகன்ட் லவ்' என்கிற பேச்சு தான் இப்போது டெலிவிஷன் உலகில் வைரல்.

'பிக்பாஸ்' நிகழ்ச்சியை முதன்முதலாக தமிழுக்குக் கொண்டு வந்த என்டமால் ஷைன் நிறுவனத்தின் துணை நிறுவனமான பானிஜெய் என்டர்டெய்ன்மென்ட்' நிறுவனமே இந்த நிகழ்ச்சியையும் தமிழில் அறிமுகப் படுத்துகிறது. தென்னிந்தியாவிலும் இதுவே முதல்முறையாம்.

அது என்ன 'செகன்ட் லவ்' ?

காதலில் தோல்வியடைந்தவர்கள், திருமண பந்தத்தில் பிரச்னை உண்டாகி தனித்தனியே பிரிந்து வாழ்கிறவர்கள் முதலானோர் அந்த சூழலில் இருந்து வெளிவந்து அடுத்த காதல் அல்லது ரிலேஷன்ஷிப்பை நோக்கி நகர்வதுதான் கான்செப்ட் என்கிறார்கள்.

அப்படி நகர்வதற்கான களமாக இந்நிகழ்ச்சி இருக்குமென்கிறார்கள்.

இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமெனில், நிகழ்ச்சிக்குள் செல்கிற லவ் ஃபெயிலியர் நபர்கள், நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது தங்களது அடுத்த பார்ட்னரைக் கண்டுபிடித்து விடலாமாம்.

தமிழில் பிரமாண்டமாக வெளிவர இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரப் பணிகள் தொடங்கி விட்டன. இந்த மாத இறுதியில் புரொமோ வெளியாகலமென எதிர்பார்க்கப் படுகிறது.

கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஹோர்டிங்குள் நகரின் முக்கியப் பகுதிகள் இடம் பெறுமென்கிறார்கள்

Ramya Krishnan
Ramya Krishnan

சரி இந்த நிகழ்ச்சிகளின் போட்டியாளர்கள் மற்றும் தொகுப்பாளர்?

அந்த தகவலையும் திரட்டினோம்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி வருவது போல் வார இறுதி எபிசோடில் மட்டும் இவர் வருவார். அதேநேரம் தினமும் போட்டியாளர்களுடன் கலந்து பேசும் இன்னொரு ஹோஸ்டும் உண்டு. அவர் இந்தி பிக்பாஸ் வரை சென்று வந்த நம்மூஉர் ஸ்ருதிகா அர்ஜுன் என்கிறார்கள்.

போட்டியாளர்களாக சினிமா, சின்னத்திரை, மாடலிங் ஏரியாவிலிருந்து போட்டியாளர்கள் இடம் பெற இருக்கின்றனர். ஆறு ஆண்கள் ஆறு பெண்கள் என மொத்தம் 12 பேர் வரவிருக்கிறார்கள்.

டாஸ்குகள் உண்டு. ஆனால் சண்டை வம்பு தும்பு என அதிகம் இருக்காமல் ரொமாண்டிக்காக இருக்குமென்கிறார்கள்.

aseem

தொடர்ந்து 35 நாட்கள் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சியின் மொத்த ஷூட்டிங்கும் மும்பையில் நடந்து முடிந்து விட்டதாகச் சொல்கிறார்கள்.

சேனலில் தினமும் இரவு ஒரு மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவிருக்கும் அதேவேளை ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் பகலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 ன் டைட்டில் வின்னர் அசீம், சிந்தூரி, வீனா என்கிற இரு மாடல்கள், கேரளாவைச் சேர்ந்த ஒரு நடிகை, அமெரிக்க வாழ் தமிழர் ஒருவர் என கலந்து கொள்ளும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் நமக்கு பிரத்யேகமாகக் கிடைத்தன.

கவின், ரியோ வரிசையில் விஜய் டிவி தயாரிப்பு என்கிற கேட்டகிரியில் நிகழ்ச்சிக்குள் செல்லும் அசீமைத் தவிர‌ மற்ற போட்டியாளர்கள் அனைவருமே தமிழுக்குப் புது முகங்கள் தானாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற பிறகு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய அசீம் நடித்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கிற சூழலில் இந்த நிகழ்ச்சிக்குள் செல்கிறார் அவர் என்கிறது டிவி வட்டாரம்.!

`பத்துக்கு பத்து வீட்ல மொத்த குடும்பமும் வசிச்ச‌தை நினைச்சா..' - புதுமனை புகுந்த‌ பழைய ஜோக் தங்கதுரை

சென்னையில் புது வீடு வாங்கிக் குடியேறி இருக்கிறார் `பழைய ஜோக்' தங்கதுரை.விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தங்கதுரை. டிவியிலிருந்து சினிமா பக்கமும் வந்தவர் 'டிடி ரிட்டர்ன்... மேலும் பார்க்க

"'Heart Beat 3'ல நான் இருக்கேனா?!" - 'கனா கண்டேனடி' சஞ்சனா ஷேரிங்ஸ்

'ஹார்ட் பீட்' சீரிஸிலும், 'பொன்னி' சீரியலில் வில்லியாக நடித்து மக்களுக்குப் பரிச்சயமான சஞ்சனா, இப்போது 'கனா கண்டேனடி' தொடரில் நடித்து வருகிறார். இத்தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.Kana Ka... மேலும் பார்க்க

"சாண்ட்ரா இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா எங்கிட்ட டைவர்ஸ் வாங்கியிருப்பாங்க" - பிரஜின் பேட்டி

''தமிழில் இதுவரை 16 படங்கள் வந்திடுச்சு. நாலு படம் ரிலீஸ்க்கு வெயிட்டிங். மலையாளத்துல 4. கன்னடம், தெலுங்கில் தலா 1. ஆனாலும் எனக்குப் பிறகு டிவியில இருந்து சினிமாவுக்குப் போன விஜய் சேதுபதி, சிவ கார்த்த... மேலும் பார்க்க

நீங்களும் ஆகலாம் பிக்பாஸ் போட்டியாளர்! 'பிக்பாஸ் தி காமன் மேன்' எதற்கு தெரியுமா?

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 10 அடுத்த சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. வழக்கம் போல் இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவிருக்கிறார்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட... மேலும் பார்க்க

Kana Kandenadi: "சீரியல்ல நடிக்கணும்னு ஐ.டி வேலையை விட்டுட்டேன்" - 'கனா கண்டேனடி' டீம் பேட்டி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'கனா கண்டேனடி' சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களான ஜாய்சன் மற்றும் சைத்ராவிடம் பேசினோம். 'கனா கண்டேனடி' சீரியலில் அறிமுகமாகியிருக்கும் ஜாய்சன் அவரது முத... மேலும் பார்க்க

"ஆடிட்டருடன் திருமணம்... பத்து பேருக்கு மேல கூப்பிடலை; ஏன்னா..." - 'வாணி ராணி' ஜெனிப்ரியா

'வாணி ராணி', 'அழகு' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஜெனிப்ரியா என்ற சாராவுக்கு மோகன் சுந்தர் என்பவருடன் சென்னை அம்பத்தூரிலுள்ள அம்மன் கோவில் ஒன்றில் வைத்து கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது.திருமணத்தில... மேலும் பார்க்க