செய்திகள் :

கடினமான Physics வினாத்தாள், காத்திருந்த மோடி, மீண்டும் வினாத்தாள் கசிவு? - நீட் மறுதேர்வு நிகழ்வுகள்

post image

நேற்று (ஜூன் 21, 2026) நீட் மறுதேர்வு நடைபெற்றது.

தேர்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ...

> நேற்று நடந்த நீட் மறுதேர்வில் கிட்டத்தட்ட 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கின்றனர். ஆனால், கடந்த மே 3-ம் தேதி நடந்த தேர்வில், 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

> ரத்து செய்யப்பட்ட தேர்வை விட, நேற்றைய நீட் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக இயற்பியல் வினாக்கள் மிக நீளமாகவும், சற்று கடினமாகவும் இருந்ததாம். சில வேதியியல் வினாக்களும் நீளமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

நீட்
நீட்

> நேற்று நீட் மறுதேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5.15 வரை நடைபெற்றது. இரண்டு நாள் மேற்கு வங்கப் பயணம் முடித்து, இந்தியப் பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்திற்குக் கிட்டத்தட்ட மதியம் 1.15 மணிக்கு வந்திருக்கிறார்.

ஆனால், அந்த நேரத்தில் தான் பயணம் மேற்கொண்டால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படலாம் என்று கருதி, சிறிது நேரம் விமான நிலையத்திலேயே காத்திருந்திருக்கிறார் மோடி.

> நேற்றைய நீட் மறுதேர்வு வினாத்தாளும் டெலிகிராமில் கசிந்தது என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அந்தச் செய்தி போலியானது என்று தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது.

> நீட் மறுதேர்வு எழுதுவதில் ஆள் மாறாட்டம் செய்ததாக 24 பேர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

> ஐதராபாத்தில் மொபைல் போன் பயன்படுத்தியதாக ஒரு மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேர்வு நடக்கும் மையத்தில் உள்ள கழிவறையின் பிளஷ் டேங்கில் ஜிப் லாக் கவரில் மொபைல் போனை ஒளித்து வைத்திருக்கிறார் அந்த மாணவர்.

தேர்வின் இடையில் தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறி, கழிவறையைப் பயன்படுத்தி இருக்கிறார். அப்போதுதான், அவர் பிடிப்பட்டிருக்கிறார்.

இப்படி பல மாணவர்கள் பல்வேறு விஷயங்கள் நேற்றைய தேர்வில் பிடிபட்டிருக்கின்றனர்.

நீட் மறுதேர்வு: கடுமையான சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்! | Photo Album

புதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் மறு தேர்வுபுதுச்சேரியில் நீட் ... மேலும் பார்க்க

இன்று நீட் மறுதேர்வு: 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்; தர்மேந்திர பிரதான் வாழ்த்து!

கடந்த மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், டெலிகிராமில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால், மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று (ஜூன் 21) நீட... மேலும் பார்க்க

AI யுகம் - சீனாவில் 12,000 பட்டப்படிப்புகள் நீக்கம்: மறுசீரமைக்கப்படும் கல்விமுறை!

செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில், சீனப் பல்கலைக்கழகங்கள் தங்களின் கல்வி முறையில் மிகப்பெரிய மறுசீரமைப்பைச் செய்து வருகின்றன. பழைய பாடத்திட்டங்களை நீக்கிவிட்ட... மேலும் பார்க்க

நெல்லை பள்ளிகள் திறப்பு: 'மலர் மாலைகள், கிரீடங்கள், இனிப்புகள்' - மாணவர்களுக்கு வரவேற்பு | Photos

திருநெல்வேலி: பள்ளிகள் திறப்பு! மலர் மாலைகள்! கிரீடங்கள்! இனிப்புகள் வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு.!பெரம்பலூரில் விதைக்கப்பட்ட 'ஆர்வம்' - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய கற்றல் உலகம் மேலும் பார்க்க