யாசகம் கேட்ட கை, இன்று கம்பீரமாய் ஸ்டியரிங் பிடிக்குது... திருநங்கை ஸ்ரீதேவியின்...
இன்று நீட் மறுதேர்வு: 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்; தர்மேந்திர பிரதான் வாழ்த்து!
கடந்த மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.
ஆனால், டெலிகிராமில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால், மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று (ஜூன் 21) நீட் மறுதேர்வு நடத்தப்படுகிறது.
3 மணிநேரம் 15 நிமிடங்கள் நடக்கும் இந்தத் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.15 வரை நடக்க இருக்கிறது.
தரவுகளின் படி, இன்று 22 லட்சம் மாணவர்கள் நீட் மறுதேர்வு கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்தத் தேர்வு குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இன்று நீட்-யுஜி மறுதேர்வு நடைபெறவிருக்கிறது. தேசிய தேர்வு முகமை (NTA), அனைத்து மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், இந்தியக் கல்வித் துறை மற்றும் குறிப்பாக இந்தியாவின் மாணவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதவுள்ளனர். எந்தவொரு பயமும் கவலையும் இன்றி தைரியமாகத் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.
நீங்கள் நிச்சயம் சிறப்பாகச் செய்வீர்கள். மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களுக்கு இந்தியாவின் கட்டமைப்பு மீது நம்பிக்கை இருக்கிறது. அது எப்போதும் தொடரும்; இந்த அசைக்க முடியாத நம்பிக்கை இப்படியே நீடிக்கட்டும்.
இந்தத் தருணத்தில், ஒரு பெற்றோராகவும் ஒரு சமூக ஆர்வலராகவும் உங்களிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்: தயவுசெய்து இந்தியாவின் புதிய தலைமுறையின் எதிர்காலத்தைப் பணயம் வைக்காதீர்கள். யாரும் அதை ஒரு வேடிக்கைப் பொருளாக மாற்றிவிட வேண்டாம்." என்று பேசியுள்ளார்.


















