செய்திகள் :

கூடலூர்: காப்பி தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த ஆண் யானை; தீவிர விசாரணையில் வனத்துறை!

post image

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில், தொடரும் ஆக்கிரமிப்புகளால் யானைகளின் வழித்தடங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நீர்நிலைகளுக்கு இடம்பெயர முடியாமல் யானைகள் தவித்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரும் யானைகளால் அப்பாவி பழங்குடிகளும் தோட்ட தொழிலாளர்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். அதேவேளையில் மனித தவறுகளால் யானைகளும் உயிரிழந்து வருகின்றன.

யானை இறப்பு

இந்த நிலையில் கூடலூர் அருகில் உள்ள இருவயல் தனியார் காப்பி தோட்டத்தில் ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை உள்ளூர் மக்கள் இன்று காலை பார்த்திருக்கிறார்கள். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். யானையின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் இறப்புக்கான காரணம் குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " யானை இறந்து கிடக்கும் இடத்திற்கு அருகில் கிணறு இருக்கிறது. பக்கத்திலேயே சோலார் மின் வேலியும் இருக்கிறது. மேட்டாருக்கான மின்சார ஒயரும் இருக்கிறது. இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய உடற்கூறாய்வு செய்யப்படுகிறது. விரைவில் காரணம் தெரியவரும்" என்றனர்.

திருச்சி கலெக்டர் சேரில் அமர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட வடமாநில இளைஞர் - உலா வரும் பரபர வீடியோ!

திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் அறையில் வடமாநில இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா அல... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பயின்று 440 மதிப்பெண்கள்; நீட் மறுதேர்வு பயத்தில் விபரீத முடிவெடுத்த சேலம் மாணவி

சேலம் மாவட்டம் எருமபாளையத்தைச் சேர்ந்த சேகர் - புவனேஸ்வரி தம்பதியரின் மகள்19 வயது கோபிகா. சேலம் கோட்டை அரசு பள்ளியில் பயின்ற இவர், 12- ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 440 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்... மேலும் பார்க்க

பீகார்: கூட்டுப் பாலியல் கொடுமை; இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் தோட்டா... கும்பல் அட்டூழியம்!

பீகார் மாநிலம், பெகுசராய் என்ற இடத்தில் தனது கணவருடன் வசித்து வசித்து வந்த 26 வயது பெண்ணின் வீட்டிற்குள் 6 பேர் கொண்ட கும்பல் இரவு 11மணிக்கு திடீரென அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் வீட்டில் இருந்த அ... மேலும் பார்க்க

திருச்சி: 'மாணவர்களுக்கு இடைஞ்சல்; பெண்களுக்குப் பயம்' - டாஸ்மாக் பாரை மூட கோரி போராட்டம்

திருச்சி மாநகரம், டி.வி.எஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறு ஏற்படுவதாகவும் குறிப்பாக போ... மேலும் பார்க்க

திருச்சி: மது அருந்த பணம் தராத மனைவி; குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கணவன்!

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது: 45). இவர், விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் சின்னம்மாள் (வயது:42) . இவர்களுக்... மேலும் பார்க்க

திருவாரூர்: தனியாக நின்ற பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் ஈவ் டீசிங்; தவெக நிர்வாகி கைது

தவெக-வின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் (24). இவரும், இவரது நண்பர் அசோக் என்பவரும் நேற்று இரவு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். அங்கு 22 வயது இள... மேலும் பார்க்க