பெரியபாளையம்: இறால் தொழிற்சாலையில் அமோனியா கசிவு; தீவிர சிகிச்சையில் இருவர்!
Toxic: இரண்டு முறை தள்ளிப்போன ரிலீஸ்; இறுதியாக திரையை எட்டும் யஷின் 'டாக்சிக்'! - எப்போது தெரியுமா?
யஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'டாக்ஸிக்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அப்போது மத்திய கிழக்கில் கடுமையான போர் நிலவியதால், படத்தின் ஓவர்சீஸ் பிசினஸ் பாதிக்கப்படும் எனப் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் 4-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

ஆனால், அந்தத் தேதியிலிருந்தும் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாகப் படக்குழுவினர் மீண்டும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இத்திரைப்படம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள்.
பெரும் பட்ஜெட் செலவில் பிரமாண்டமாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. வழக்கமான பான் இந்தியா படங்கள் போலல்லாமல், கன்னட மொழியிலும் ஆங்கில மொழியிலும் இப்படத்தைப் படம் பிடித்திருக்கிறார்கள். இது படத்திற்குப் பெரிய மார்க்கெட்டைக் கொண்டு வரும் எனக் கூறப்படுகிறது.
'கே.ஜி.எஃப் 2' படத்திற்குப் பிறகு வெளியாகும் யஷின் திரைப்படம் இதுதான் என்பதால், படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
இப்படத்தில் நடித்ததைத் தாண்டி எழுத்துப் பணிகளிலும் யஷ் ஈடுபட்டிருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.














