செய்திகள் :

'இனி இந்தியா உலக நாடுகளுக்கு சந்தை இல்லை' - மோடி | இந்திய கப்பற்படையில் 3 'Made in India' கப்பல்கள்

post image

இந்திய கப்பற்படையில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மூன்று கப்பல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் தற்போது சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, "இன்று, ‘சுயசார்பு இந்தியா, பாதுகாப்பான இந்தியா, மற்றும் வளர்ந்த இந்தியா’ என்ற இலக்குகளை நோக்கிய ஒரு முக்கியத் திட்டம் இந்த மண்ணில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

சற்று நேரத்திற்கு முன்புதான், 'ஐ.என்.எஸ் அக்ரே (INS Agray)', 'ஐ.என்.எஸ் துணாகிரி (INS Dunagiri)' மற்றும் 'ஐ.என்.எஸ் சன்சோதக்' ஆகிய மூன்று கப்பல்களும் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்திய கப்பல்
இந்திய கப்பல்

தற்செயலாக, இன்று ஜூன் 21-ம் தேதி உலக ஹைட்ரோகிராபி (நீர்வரைவியல்) தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், இந்தியாவின் அதிநவீன ஹைட்ரோகிராபி கப்பலான ஐஎன்எஸ் சன்சோதக்-ஐ நாம் கடற்படையில் இணைத்திருப்பது ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வு.

இன்று பாதுகாப்புத் துறையில் இந்தியா வெறும் வாங்குபவராக (Buyer) மட்டுமே இருக்க விரும்பவில்லை. நமது ராணுவ பலம் உலக நாடுகளுக்கான ஒரு சந்தையாக மட்டும் இருக்க முடியாது.

எனது நாட்டின் வலிமையின் அடையாளம் உலகச் சந்தையாக மாறுவதில் இல்லை, மாறாக நமது சுயசார்பில் உள்ளது.

இந்தியா ஒரு உற்பத்தியாளராக மாற விரும்புகிறது; நாம் உற்பத்தியாளராக மாறும் நாளில், நாமே முடிவெடுப்பவர்களாகவும் இருப்போம்.

இந்தத் திசையில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது" என்று கூறியுள்ளார்.

"திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால்கூட..." - பெ. சண்முகம் கருத்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வருங்காலத்தில் அதிமுகவும் திமுகவும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால்கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை எனக் குறிப்பிட்டு அவருடைய சமூக வலைதள... மேலும் பார்க்க

கேரளம்: புதிய மாவட்டங்கள் உருவாக்க திட்டம்; திரூர், மூவாற்றுப்புழாவில் முதற்கட்ட நடவடிக்கை!

கேரள மாநில நிர்வாகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, புதிய மாவட்டங்கள் மற்றும் 12 புதிய தாலுக்காக்களை உருவாக்குவதற்கான திட்டங்களுக்கு காங்கிரஸ் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. நீண்டகாலமாகப் ... மேலும் பார்க்க

மோடி - ட்ரம்ப் என்ன பேசினார்கள்? - சசி தரூர் Vs காங்கிரஸ் வெடித்த பிரச்னை

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர். இவர் காங்கிரஸ்காரர் தான். ஆனால், அவ்வப்போது இந்திய பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் புகழ்ந்து தள்ளுவார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும். அப்படியான ... மேலும் பார்க்க

தள்ளி நிற்கும் ஸ்டாலின்... நெருக்கம் காட்டும் ராகுல் - காங்கிரஸ் போடும் கணக்கு என்ன?

"அன்புச் சகோதரர்" மிஸ்ஸிங்மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூன் 19), எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியான வாழ்த்துச் செய்திகளும், அதற்கான பதில்களும் தற்போதைய இந்திய மற... மேலும் பார்க்க

சர்வதேச யோக தினம்: '50 வயதில் இருந்ததை விட 70 வயதில்.!' - மோடி பேசிய 6 முக்கிய புள்ளிகள்!

இன்று 12-வது சர்வதேச யோக தினம். இந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி கொல்கத்தாவில் நடந்த யோக நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்வில் மோடி பேசிய முக்கிய விஷயங்கள்...> ஒட்டுமொத்த நாடும் யோகாவின் ஆ... மேலும் பார்க்க

ட்ரம்ப் VS மெலோனி: மோதிக்கொள்ளும் தலைவர்கள்; சிக்கலில் மெலோனியின் சர்வதேச அதிகாரம்!

நெருங்கமான நட்பு!ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையேயா... மேலும் பார்க்க