செய்திகள் :

திருச்சி கலெக்டர் சேரில் அமர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட வடமாநில இளைஞர் - உலா வரும் பரபர வீடியோ!

post image

திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் அறையில் வடமாநில இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா அல்லது ஏற்கனவே எடுக்கப்பட்டதா என்பது குறித்து முழு விவரங்கள் குறித்த தகவல் இல்லை.

த.வெ.க அரசு பொறுப்பேற்றது முதல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதனால், இந்த ஆட்சியை 'ரீல்ஸ் ஆட்சி' என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர் அறைக்குள் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

reels

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள், "திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.

திருச்சி ஆட்சியர் அறையில் உள்ள அவரது சேரில் அமர்ந்து வடமாநில இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசுப் பள்ளியில் பயின்று 440 மதிப்பெண்கள்; நீட் மறுதேர்வு பயத்தில் விபரீத முடிவெடுத்த சேலம் மாணவி

சேலம் மாவட்டம் எருமபாளையத்தைச் சேர்ந்த சேகர் - புவனேஸ்வரி தம்பதியரின் மகள்19 வயது கோபிகா. சேலம் கோட்டை அரசு பள்ளியில் பயின்ற இவர், 12- ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 440 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்... மேலும் பார்க்க

பீகார்: கூட்டுப் பாலியல் கொடுமை; இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் தோட்டா... கும்பல் அட்டூழியம்!

பீகார் மாநிலம், பெகுசராய் என்ற இடத்தில் தனது கணவருடன் வசித்து வசித்து வந்த 26 வயது பெண்ணின் வீட்டிற்குள் 6 பேர் கொண்ட கும்பல் இரவு 11மணிக்கு திடீரென அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் வீட்டில் இருந்த அ... மேலும் பார்க்க

திருச்சி: 'மாணவர்களுக்கு இடைஞ்சல்; பெண்களுக்குப் பயம்' - டாஸ்மாக் பாரை மூட கோரி போராட்டம்

திருச்சி மாநகரம், டி.வி.எஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறு ஏற்படுவதாகவும் குறிப்பாக போ... மேலும் பார்க்க

திருச்சி: மது அருந்த பணம் தராத மனைவி; குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கணவன்!

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது: 45). இவர், விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் சின்னம்மாள் (வயது:42) . இவர்களுக்... மேலும் பார்க்க

திருவாரூர்: தனியாக நின்ற பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் ஈவ் டீசிங்; தவெக நிர்வாகி கைது

தவெக-வின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் (24). இவரும், இவரது நண்பர் அசோக் என்பவரும் நேற்று இரவு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். அங்கு 22 வயது இள... மேலும் பார்க்க

திருமணமான 48 நாளில் தற்கொலை: மனைவியை கண்காணிக்க வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்திய டாக்டர்

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் டாக்டர் நிதின் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தான் விஷாகா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில நாட்களில் நிலைமை மாறியது. திரு... மேலும் பார்க்க