திருவாரூர்: அரசுப்பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி! - வீடியோ ...
"போரை நடத்தி, பில்லியன் கணக்கான டாலர்களையும், உயிர்களையும் இழந்துள்ளோம்"- ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு | Live Updes
ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு!
அமெரிக்கா, ஈரான் இடையே 14 அம்சங்களை உள்ளடக்கிய போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தானது. அதிபர்கள் ட்ரம்ப் மற்றும் மசூத் பெசேஷ்கியா இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து இரு தரப்பும் சுவிட்சர்லாந்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன. இந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், ஈரான் அதிகாரிகள் சுவிட்சர்லாந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா - ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை ரத்தானதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் போர் குறித்து அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ட்ரம்ப் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், " தற்போது ஒரு போரை நடத்தி, பில்லியன் கணக்கான டாலர்களை வீணடித்து, ஏகப்பட்ட உயிர்களையும் இழந்துள்ளோம்.
இவ்வளவு இழந்தும், போர் தொடங்குவதற்கு முன்பு இருந்தை விட, ஒரு மோசமான இடத்திற்குத்தான் வந்து நிற்கிறோம். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என ஏற்கனவே ஒரு நல்ல ஒப்பந்தம் இருந்தது. ட்ரம்ப் நிர்வாகம் அதிலிருந்து வெளியேறியதால்தான், அணுசக்தி திறனை ஈரான் மேலும் அதிகரித்தது" என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.















