TNPSC: `சூப்பர் சிங்கர், சரிகமப மூலம் என்ன மாற்றம் நடக்குது?' - குரூப் 1 நேர்காண...
விஜய் படங்களுக்கு பணியாயாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர்! - மனோஜ் பரமஹம்சாவுக்கு அரசுப் பொறுப்பு
பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
'ஈரம்', 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'ராதே ஷியாம்', 'என்னை நோக்கி பாயும் தோட்டா' போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் 'மனோஜ் பரமஹம்சா'.
விஜய்யின் 'நண்பன்', 'லியோ', 'பீஸ்ட்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவரும் இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்.
இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளராக அறியப்படும் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக மனோஜ் பரமஹம்சா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.















