செய்திகள் :

ஹபீபி: 'கேரக்டராகவே வாழ்ந்திருக்கும் என் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்'- தனுஷ் பாராட்டு

post image

நடிகர் தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'ஹபீபி' படத்தைப் பாராட்டி இருக்கிறார்.

மீரா கதிரவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ஹபீபி'.

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஹபீபி
ஹபீபி

இந்நிலையில் நடிகர் தனுஷ் 'ஹபீபி' படகுழுவை பாராட்டி இருக்கிறார். "தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து "யூசுப்" கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்.

அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பாராட்டியிருக்கிறார்.

நூறு சாமி விமர்சனம்: அம்மா, சாமியல்ல மனுஷி! நெகிழ வைக்கிறதா மறுமணம் குறித்த எமோஷனல் டிராமா?

கள்ளக்குறிச்சியில் வசித்து வரும் செல்வி (ஸ்வாசிகா), கணவன் இறந்த பிறகு தனது இரு மகன்களையும் அக்கறையாக வளர்த்து ஆளாக்குகிறார். பாஸ்கர் (அஜய் திஷான்) மற்றும் விவேக் (சக்தி) வளர்ந்து விவரம் அறிந்த வயதில்,... மேலும் பார்க்க

OM: `உண்மை சம்பவங்கள்... தனுஷ் கேரக்டர் பெயர் அண்ணாமலை?' - ராஜ்குமார் பெரியசாமி கூறியதென்ன?

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக உள்ள படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நேற்று ... மேலும் பார்க்க

அரசன்: மிரட்டலான மூன்றாவது கெட்டப்; வெற்றிமாறன் குட்புக்கில் இடம்பிடித்த சிலம்பரசன் - Arasan அப்டேட்

உற்சாகத்தில் இருக்கிறார் சிலம்பரசன். தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்துள்ள 'அரசன்' படப்பிடிப்பு சென்னையில் சீறிப்பாய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. சிலம்பரசன்வடசென்னையை மையமாக வைத்து 'அரச... மேலும் பார்க்க

Samantha: "சமந்தா ஒரு பெண் என்பதைத் தாண்டி ஒரு போராளி!" - நடிகை கெளதமி

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க

`விஜய் சார், இதைவிட பெரிய ஏதோ ஒன்றிற்காகவே உருவாக்கப்பட்டவர் என்று...' - முதல்வரைச் சந்தித்த சமந்தா

நடிகை சமந்தா முதல்வர் விஜய்யை இன்று (ஜூன். 17) நேரில் சந்தித்திருக்கிறார். இதனை நெகிழ்ச்சியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். புகைப்படத்துடன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இன்... மேலும் பார்க்க