செய்திகள் :

7 எம்.எல்.ஏக்களுக்கு 5 பேருந்துகள்! - MLA ஸ்பெஷல் பஸ் நடைமுறை தேவையா?

post image

சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் நடக்கும் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், இந்த வகை பேருந்துகளில் மிகக்குறைந்த அளவிலான எம்.எல்.ஏக்களே பயணிப்பது, இந்தத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது.

MLA Special Bus
MLA Special Bus

சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் நடக்கும் போது பல எம்.எல்.ஏக்களும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில் தங்கியிருப்பர். அவர்களை விடுதியிலிருந்து சட்டமன்றம் அழைத்து செல்லவும், சட்டமன்றத்திலிருந்து விடுதிக்கு மீண்டும் அழைத்து வரவும் அரசுப் பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறை கடந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களிலேயே இருக்கிறது.

சில எம்.எல்.ஏக்கள் ஏழை எளியவர்களாக இருப்பார்கள். சிலருக்கு ஊரில் கார் இருக்கும், சென்னையில் கார் இருக்காது. இப்படியானவர்கள் பயன்பெறும் வகையில்தான் எம்.எல்.ஏ ஸ்பெஷல் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், இப்போது எம்.எல்.ஏ ஸ்பெஷல் பேருந்துகளை சொற்பமான எம்.எல்.ஏக்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். சொற்பமான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்கள் பயன்படுத்துவது கூட பிரச்னை இல்லை. ஒரு முழு பேருந்தில் ஒரு எம்.எல்.ஏ மட்டும் பயணிக்கும் நிலைமை கூட இருக்காது. சில பேருந்துகளில் 2-3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பயணிக்கிறார்கள்.

MLA Special Bus
MLA Special Bus

இதுதொடர்பாக எம்.எல்.ஏ விடுதி வட்டாரத்தில் விசாரித்தோம். 'எம்.எல்.ஏக்கள் கிளம்பி வர வர அவர்களை பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விடுவோம். ஒரு எம்.எல்.ஏ மட்டும் தயாராகி வந்து நின்றாலும் உடனே அவரை ஒரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிடுவோம். மொத்தமாக 5 பேருந்துகளை நிறுத்தி வைத்திருப்போம். நேற்று ஆளுநர் உரை கூட்டத்துக்கு மொத்தமாக 24 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பேருந்தில் சென்றனர்.

இன்று காலை 9:30 மணி வரைக்கும் 7 எம்.எல்.ஏக்களை 4 பேருந்துகளில் அனுப்பி வைத்திருக்கிறோம். சட்டமன்றம் முடிந்த பிறகு அவர்களை மீண்டும் இங்கேயே அழைத்து வந்து விட்டும் விடுவோம்' என்றனர்.

'ஒரு 50-60 பேர் பயணிக்கக்கூடிய பேருந்தில் ஒன்றிரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டும் பயணிக்கும் சித்திரத்தை யோசித்து பாருங்கள். எவ்வளவு வீண் செலவு இது. எம்.எல்.ஏக்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்தை இயக்கி அப்போது கூடியிருக்கும் எம்.எல்.ஏக்களை அழைத்து செல்லலாம் அல்லது குறைவான எம்.எல்.ஏக்கள்தானே செல்கிறார்கள்.

MLA Special Busses
MLA Special Busses

அவர்களுக்கு ஏற்ற மாதிரி வேனோ காரோ கொடுத்தால் கூட எரிபொருள் செலவையும் பணியாட்கள் விரயத்தையும் தவிர்க்க முடியும். எரிபொருள் சிக்கனத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே கால் டாக்ஸி போல அரசுப் பேருந்தை பயன்படுத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்: 'அமைப்பு விதிகளுக்கு விரோதமாக செயல்பட்டவர்' - CPI கருத்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்தார். இணைப்பிற்குப் பிறகு, "சிவப்பு துண்டுடனேயே இந்த இயக்கத்தில் பயணிக்கிறேன்" என்று பேசியிருந்தார். தவெகவில் சி.மகேந்த... மேலும் பார்க்க

"மோடி, ஜின்பிங் எனக்கு பிடித்தவர்கள்; நெதன்யாகுவை கொஞ்சம் நிதானமாக.!" - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க செய்தி நிறுவனமான Axios-க்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். ஈரான் போர் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார் ட்ரம்ப். அந்தப் பேட்டியின் ஒரு ... மேலும் பார்க்க

குறுக்கே நிற்கும் இஸ்ரேல்: தள்ளிப்போகும் அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை

நேற்று முன்தினம் (ஜூன் 17), அமெரிக்கா, ஈரான் இடையே 14 புள்ளிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை என்றும் தெ... மேலும் பார்க்க

'வெல்லும் வரை ஒன்றிணைந்து போராடுவோம்' - ஸ்டாலின் சொன்ன பிறந்த நாள் வாழ்த்திற்கு ராகுல் காந்தி பதில்

இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள். இந்திய பிரதமர் மோடி தொடங்கி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், ஒரு வாழ்த்து கொஞ்சம் முக்கியத்துவம் பெறுகிறது. ... மேலும் பார்க்க

முதல்வரின் முகத்துக்கு நேராக திமுக எம்.எல்.ஏ சொன்ன அந்த வார்த்தை; சீறிய ஆதவ் - சலசலப்பான சட்டமன்றம்!

ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று சட்டமன்றத்தில் நடந்திருந்தது. அதில், திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் முதல்வர் விஜய்யை நோக்கி வைத்த விமர்சனமும் அதற்கு அமைச்சர் ஆதவ் கொட... மேலும் பார்க்க