செய்திகள் :

‘தொழிலை மீட்க உதவி செய்யுங்கள்’ - அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஜப்பான் நபரின் வேண்டுகோள்!

post image

ஜப்பானை சேர்ந்த ஃபுட்டோஸி இட்டோ என்பவர் மதுரையை சேர்ந்த சரவணனுடன் இணைந்து ‘ரிக் வீல்ஸ்’ என்கிற பெயரில் ரயில் பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறார். தங்களுடைய தொழில் சில நிறுவனங்களால் பாதிப்பட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய வேண்டுமென தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ஃபுட்டோஸி இட்டோ.

அதில், “நானும், மதுரையை சேர்ந்த சரவணன் என்பவரும் இணைந்து  ரிக் வீல் (RIG WHEELS TOY PRIVATE LIMITED)  என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி  நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் இந்தியாவின், மேக் இன் இந்தியா  (MAKE IN INDIA) கனவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

எங்களது பொம்மைகள் தயாரிப்பிற்குத் தேவையான அச்சுகளை சொந்தமாக உருவாக்குவதற்கான தொகையை முழுமையாகச் செலுத்தி, அனைத்து பணிகளையும் முடித்துள்ளோம்.

ஆனால் கோயம்புத்தூரில் உள்ள சில நிறுவனங்கள் எங்களுக்குச் சொந்தமான அந்த அச்சுகளை சட்டவிரோதமாக தங்களிடம் வைத்துக்கொண்டு, கூடுதல் பணம் கேட்டு வருகின்றன.

அந்த அச்சுகள் சட்டபூர்வமாக எங்களுக்குச் சொந்தமானவை என்பதை நிரூபிக்கும் அனைத்து ஆவணங்களும், ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. கடந்த ஆறு மாதங்களாக காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை நாடியிருந்தாலும், இதுவரை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக எங்களது ஸ்டார்ட் அப் நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி முடங்கியுள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் மதுரையில் தங்கி கடுமையாக உழைத்து இந்த நிறுவனத்தை உருவாக்கி வருகிறேன்.

தமிழ்நாட்டில் அதிமான தொழில் செய்வதற்கான வாய்ப்புகளும், திறமையான நபர்களும் உள்ளனர். ஆனால் சில நிறுவனங்களின் பேராசையால்  எங்களுடைய தொழில் முடங்கியுள்ளது.  எங்களுக்குச் சொந்தமான அச்சுகளை மீட்டெடுத்து, எங்களது உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா உதவி செய்ய வேண்டும். இந்தப் பிரச்னைக்கு முற்றுபுள்ளி வையுங்கள்” என பேசியுள்ளார்.

இது குறித்து ‘ரிக் வீல்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் சரவணனிடம் விளக்கம் கேட்டோம், “ இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது கொஞ்சம் பொறுங்கள் ” என முடித்து கொண்டார்.

மேகதாது: `திமுகவை போல தவெக வெற்று நாடகங்களை நடத்தக்கூடாது’ – வானதி சீனிவாசன்

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “மேகதாது அணை திட்​டம் என் இதயத்​துக்கு நெருக்​க​மானது. மேகதாது அணை கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜ​ய்யுடன் பேச்சு நடத்த தயா​ராக இருக்​கிறேன் என கர்... மேலும் பார்க்க

`எங்கள் முன் இருந்த 3 வாய்ப்புகள்; சிக்கல் சவால்கள் இருந்தும் தவெக-வுக்கு ஆதரவு'- விளக்கும் சண்முகம்

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அணி மாறிய திமுக கூட்டணிக் கட்சிகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வருகிறது. இந்த விமர்சனங்களுக்கு, விமர்சனத்துக்குள்ளாகும் கட்சிகள் விளக்கமளி... மேலும் பார்க்க

வூஹான் ஆய்வகத்துக்கு அமெரிக்க நிதி; பொய் சொல்லிய ஃபௌசி? - ஆதாரங்களுடன் அதிரவைத்த துளசி கபார்ட்!

உலகையே உலுக்கிய கோவிட்-19 பெருந்தொற்றின் பிறப்பிடம் எது? இந்தக் கேள்விக்கான விடை இன்னும் மர்மமாகவே நீடிக்கும் நிலையில், அமெரிக்காவின் அரசியல் மற்றும் விஞ்ஞான வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளத... மேலும் பார்க்க

'யார் அதிகம் ஓட்டு வாங்குனது?' - அமைச்சர் அருண்ராஜ் vs சிவசங்கர் காரசார விவாதம்!

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் நடந்து வருகிறது. அப்போது அமைச்சர் அருண் ராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.Arun Rajஅமைச்சர் அருண்ராஜ் பே... மேலும் பார்க்க

நிறுத்தப்பட்ட சட்டமன்ற ஒளிபரப்பு: "முழு நேரலை..முழு நேரலை...அத்தனையும் உருட்டா சார்! - அதிமுக கேள்வி

தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் இன்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவ... மேலும் பார்க்க