தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்: 'அமைப்பு விதிகளுக்கு விரோதமாக செயல்பட்டவர்' - CPI...
டிவி சீரியல் அலையைத் தாண்டி தியேட்டருக்குக் கூட்டம் சேர்த்த 'பூவே உனக்காக'!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களே தோற்று போகும் அளவிற்கு ஒரு கதாநாயகனின் காமெடியை ரசிக்கிறார்கள் என்றால் அது இளைய தளபதி விஜய் மட்டும் தான்
2000 கால கட்டத்தில் வெளியான குஷி,ஷாஜகான், பிரியமானவளே பிரண்ட்ஸ்,பத்ரி, யூத், பகவதி, வசிகரா,புதிய கீதை இன்னும் சொல்லி கொண்டே போகலாம்
95.96 காலகட்டத்தில் பல தனியார் டிவி சேனல்கள் பரபரப்பாக ஆரம்பமாகி புதிய புதிய திரைப்படங்களையும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் சீரியல் என்கிற நெடுந்தொடர்களையும் கொடுத்து தமிழக மக்களை வீட்டினுள் கட்டிப் போட, அவர்களை தியேட்டருக்கு அழைத்து வந்ததற்கு இளைய தளபதி விஜய்க்கு அதிக அளவில் பங்கு உண்டு .

நான் சினிமா பாக்கணும்னா, அந்த படத்திற்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி சண்டைக்காட்சி இருக்க வேண்டும், எதேச்சையாக, ஒரு தியேட்டருக்கு சென்றபோது அது நான்கு தியேட்டர் கொண்ட காம்ப்ளக்ஸ். ஒரு படத்தின் போஸ்டர் வெற்றிகரமான 150 வது நாள் என ஒட்டியிருக்க, அதை பார்த்த நான் அதிர்ச்சியாகி அந்த படத்திற்கு டிக்கெட் வாங்கி சென்றேன்.
நாளைய தீர்ப்பு, ரசிகன், செந்தூரபாண்டி, தேவா, விஷ்ணு, கோயமுத்தூர் மாப்பிள்ளை, என வீதியில் சுற்றி கொண்டிருக்கும், ஒரு பையனாக இருந்த இளைய தளபதி விஜய் , நம் வீட்டில் ஒரு பையனாக, அண்ணனாக, தம்பியாக பாசம் கலந்த மரியாதை கொடுத்து பார்க்கபட்ட படம் பூவே உனக்காக. படத்தில் ஒரு சண்டைக்காட்சி இல்லை, பிரபல நகைச்சுவை நடிகர்கள் இல்லை, கவர்ச்சி பாடல்கள் இல்லை. இவையெல்லாம் தாண்டி பூவே உனக்காக என பல பூங்கொத்துகளை கொடுத்து, நம் மனதில் இன்றி அமையாத ஒரு இடத்தை பெற்றவர் இளையதளபதி விஜய்
இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்குநேர் , காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன் என அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நிரந்ததரமாக குடியேறினார் கோவில் திருவிழா, கல்யாணவீடு, காதுகுத்து, பிறந்தநாள் விழாக்களில் மேலும் குதூகலப் படுத்தியது தளபதியின் பாடல்கள். மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வேறு வேறு இசையமைப்பளர்கள் ஆனால் அனைத்து பாடல்களும் தளபதியின் பாடல்கள் என அடையாளம் பெற்று கொண்டாடப்பட்டது.
தேர்வு குழுவினரால் தவிர்க்க முடியாத சூரியவன்சி போல் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாகி எதிர்பார்ப்புகளை எகிற விட்டார்.

இந்த கால கட்டத்தில் வெளிவந்த நிலாவே வா, என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சாரகண்ணா, கண்ணுக்குள் நிலவு என வெளிவந்த படங்கள் மற்றும் பாடல்கள் நன்றாக கொண்டாடப் பட்டாலும் விஜய் ரசிகர்களை தூக்கி உச்சானியில் உட்கார வைத்தது “துள்ளாத மனமும் துள்ளும்” படம் தான் இளைய தளபதி விஜயின் சண்டை காட்சிகளை ரசித்து கொண்டாடியது இந்த படத்தில் தான்.
இதுவரை ஒரு வில்லனை விஜய் அடிக்க முடியுமா...? என்று கேள்வி கேட்டவர்களுக்கு இளைய தளபதி ஒருவரால் மட்டுமே அடிக்க முடியும் என்பது போல், இந்த படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
பொன்னம்பலத்தை தளபதி அடிக்கும் காட்சியில், திடீர் என பலமான போலிஸ் விசில் சத்தம் கேட்க ரசிகர்களை எரிச்சல் அடைய செய்தது படத்தை நிறுத்திவிட்டு பார்த்தால் எல்லோருக்கும் ஷாக், ஒரு சிறுவன், கையில் விசில் வைத்து கொண்டு பலமாக சந்தோஷமாக ஊதி கொண்டிருந்தான் திரையரங்க ஊழியர்கள் தலையிட்டு இந்த விசில் ஊத கூடாது எல்லோருக்கும் டிஸ்டர்ப் என சொல்ல, சிறுவன் அப்பாவியாக எனக்கு விசில் எனக்கு அடிக்க தெரியாதே என சொல்ல சண்டையிட வந்ததவர்கள் கூட சிரிச்சுட்டாங்க..
அன்று துள்ள ஆரம்பித்த மனங்களை அதே துள்ளலுடன் தொடர்ந்து வெளிவந்த குஷி, ப்ரண்ட்ஸ், பிரியமானவளே,பத்ரி, ஷாஜகான், தமிழன், யூத், பகவதி, வசீகரா என வெற்றி நடைபோட்டார் இளைய தளபதி. ஆடல்,பாடல்,கலை நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மெல்லிசை கச்சேரி பாடகர்கள் என எல்லோருக்கும் வரப்பிரசாதமாக அமைந்தது விஜயின் பாடல்கள்.
இதே வேகத்தில் புதியகீதையை படைத்து, திருமலையில் கொடியேற்றி, கில்லி போல எகிறி மதுர-யில் நின்றார், திருப்பாச்சி-யில் அன்பு தங்கைகளுக்கு பாசமிகு அண்ணனாக மாறினார். சச்சின் போல மாறி, சிவகாசி-யில் பட்டாசாய் வெடித்த அந்த தியேட்டர் அனுபவம் ஒரு அற்புதம்
ஆதியில் போக்கிரியாய் இருந்தாலும் அழகிய தமிழ் மகன் என்ற பெயரை எடுத்தவர் குருவி போல் நினைத்தவர்களுக்கு தமிழ் சினிமாவில் வில்லெடுத்து வந்த வசூல் வேட்டைக்காரன் ஆக நின்றார் இளைய தளபதி.

இவ்வளவு பெரிய சுறாவாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த இளைய தளபதி திடீரென மயிலிறகால் மனதை வருடுவது போல் உருவானது ஒரு படம்... இந்த மாதிரி மென்மையான கதாபாத்திரங்களை தளபதி ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா என கேள்வி கேட்டவர்களின் தலையில் ஓங்கி சுத்தியால் அடிப்பது போல் மாபெரும் வெற்றியை கொண்டாடி தமிழ் சினிமாவின் காவலன் தளபதிதான் என தீர்மானித்தது வேலாயுதம் கொண்டு நண்பன் ஆக துப்பாக்கி-யை கையில் கொடுத்து ஜில்லா-வுக்கே தலைவா என ஏற்று கொண்டனர் இளைய தளபதி ரசிகர்கள்
தொடர்ந்து கத்தி-யை கையில் எடுத்த இளைய தளபதி புலி-யை தோளில் தூக்கிக்கொண்டு 2K கிட்ஸ்களின் ஏகபோக ஆதரவுடன் தெறி-க்கவிட்டார்
நேரு மாமான்னு புத்தகங்களில் படிச்சி இருக்கோம் நேர்ல மாமாவ பார்க்கிறோம்னு குழந்தைகள் கொண்டாடியது இந்த காலகட்டத்தில் தான்
மெர்சல், சர்கார், பிகில், வாரிசு, லியோ, பீஸ்ட் என என்றுமே தமிழ் சினிமா ரசிகர்களின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என உணர்த்தினார் இந்த ஜனநாயகன்
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு, நடனம் மற்றும் உழைப்பால் உயர்ந்த இடத்தைப் பெற்றவர் நடிகர் விஜய். பல சாதனைகளை படைத்த அவர், கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்றார்.
பல கோடிக்கணக்கான உழைப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் வருமானத்திற்கும் தன் படத்தின் மூலம் நேரடியாகவும் அல்லது மறைமுகமாகவும் உதவிய பங்கு இளைய தளபதியின் படங்களுக்கும் உண்டு.
"உழைப்பே உயர்வின் திறவுகோல்" என்பதற்கு தளபதி விஜய் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்.
-அ.தங்கமித்ரன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ




















