DJD: 'சிறந்த அங்கீகாரத்தை வழங்கும் மேடை' - 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியின் பு...
வானத்திலிருந்து குதித்தவர்கள் போல அலட்டிக்கொள்ளவில்லை! - ஷூட்டிங்கில் வியக்கவைத்த விஜய்யின் எளிமை!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தளபதி விஜய் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உயர்ந்தது ஒரு இரவில் நடந்தது அல்ல. மென்மையான காதல் நாயகனிலிருந்து ஒரு வெகுஜன அதிரடி நாயகனாக மாற அவரது விடாமுயற்சி மற்றும் உழைப்புதான் காரணம். அவர் கதாநாயகனாக அறிமுகமான போது பல விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் விடாமுயற்சியாலும் மக்களை குறிப்பாக இளைஞர்களை மற்றும் குழந்தைகளை கவரும் விதமாக சூப்பர் ஹிட் படஙகளை தந்து மாஸ் ஹீரோவானார்.
தளபதி விஜய்க்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து என பல நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். அவருடைய நடிப்பு, நடனம், பாடல்கள், குறும்புத் தனமான நல்ல நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என எல்லாமே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களையும் கவரும் நான் ஜப்பான் சென்றிருந்த போது எங்கள் ஜப்பானிய டூர் கைடிடம் தமிழ் படம், நடிகர்கள் பற்றி தெரியுமா என்று கேட்டேன். உடனே நம் தளபதி விஜய்யைப் பற்றி சொன்னார். எனக்கு ஒரே வியப்பாகவும் பெருமையாகவும் இருந்தது
ஒரு முறை நடிகர் விஜய்யை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். ஹைதராபாதில் பிரபல அரசு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது ஒரு பயிற்சிக்காக எங்கள் அலுவலக பயிற்சி மையத்திற்கு சென்றிருந்தேன். எங்கள் அலுவலக பயிற்சி மையத்தில் அடிக்கடி பட ஷூட்டிங்குகள் நடைபெறுவது வழக்கம். ஏனென்றால் அங்கு ஷூட்டிங் வைத்தால் படம் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை நிலவுவதாகச் சொல்லப்பட்டது.
நான் சென்ற போது பயிற்சி அலுவலக வளாகத்தில் நடிகர் விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. விஜய் மற்றும் சக நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை படமெடுத்துக் கொண்டிருந்தனர். முதல் நாள் விஜய் அவர்களை சந்திக்க முடியவில்லை. அந்தப் படத்தில் நடித்த பிற நடிகர்களை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு போட்டோ எடுத்துக் கொண்டேன் சிலர் .ஹைதராபாதில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி விசாரித்தார்கள்.
என்னுடன் பயிற்சிக்கு வந்தவர்களில் ஒரிருவரைத் தவிர அனைவருமே தெலுங்கர்கள். தமிழ் தெரியாது. அவர்களுக்கு நடிகர் விஜய்யை அவ்வளவாகத் தெரியவல்லை. விஜய் பட ஷூட்டிங்கை பார்த்த மற்றும் விஜய்யுடன் நேரில் உரையாடிய பின் நடிகர்களைப் பற்றிய என் எண்ணம் மாறியது.
இங்கு பல பட ஷூட்டங்குகளைப் பார்த்திருக்கிறேன். சில நடிகர்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் போல அலட்டிக் கொள்வார்கள ஆனால் நம் தளபதி விஜய், மிகவும் எளிமையானவர். ஷூட்டிங் சமயம் அந்த கதாபாத்திரமாகவே மாறி முழு உழைப்பையும் தருவார். அது ஒரு காலேஜ் சீன். அனுஷ்காவுடன் குறும்பாக கலாய்க்கும் காட்சி. ஒரே டேக்கில் ஓகே ஆனது.

விஜய் தன் ஷாட் முடிந்தவுடன் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். முதல் நாள் அவருடன் நான் பேச முடியுமா என்ற தயக்கத்தில் இருந்தேன். அடுத்த நாள் இடைவேளையின் போது வெளியே வந்த விஜய்யை நானும் தமிழ் தெரிந்த ஒரு சிநேகிதியும் சந்தித்து எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தோம். சிறிது நேர உரையாடலுக்குப் பின் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். நம் வீட்டுப் பிள்ளையுடன் பேசுவது போல் தான் நான் அவரிடம் பேசிய போது உணர்ந்தேன்.
என் சிநேகிதி வெளி நாட்டில் வசிக்கும் தன் மகள் விஜய்யின் ரசிகை என்று கூறி அவளுடன் பேச முடியுமா எனக் கேட்டார். உடனே எந்தவொரு தயக்கமும் இன்றி அவளுடன் பேசினார். எங்களுக்கோ ஒரே ஆச்சரியம். பெரிய ஸ்டார். எந்தவொரு பந்தாவுமில்லாமல் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று வியந்து போனோம். ஏனென்றால் இங்கு சில நடிகர்கள் வரும் போது கெடுபிடிகள் அதிகமாக இருக்கும்
நான் படங்கள் அதிகமாக பார்ப்பது கிடையாது. பாலசந்தர், பாரதிராஜா படங்களை விரும்பி பார்ப்பேன். முதலில் நான் பார்த்த விஜய் படம் ‘போக்கிரி’ அந்த படத்தில் விஜய்யின் நடிப்பு, பாடல்கள், வசனங்கள் எல்லாமே செம மாஸ். என்னை மறுமுறை பார்க்கத் தூண்டிய படம் ‘போக்கிரி’ அவரின் குறும்புத்தனமான. யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை வசனங்களை ரசிப்பேன். ஒரு படத்தில் அவர் வடிவேலுடன் அடிக்கும் லூட்டி. அப்பப்பா!.வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்..
விஜய் பட ரிலீஸின் போது ஒரு திருவிழா போலவே ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். விஜய்யின் எளிமை,பணிவு உழைப்பு தான் மக்களின் மத்தியில் நம்மில் ஒருவர் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பது நிஜம்.
செல்ல பிள்ளை விஜய்க்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்!
வி. ரத்தினா
ஹைதராபாத்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ


















