செய்திகள் :

ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி; சாட்டையைச் சுழற்றும் ஆட்சியரின் நடவடிக்கை தொடருமா?!

post image

ஆக்கிரமிப்பு குடோனாக மாறிய சாலைகள்

புதுச்சேரியின் நகர்ப்புற சாலைகள் அனைத்தும் பிரெஞ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை. பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட சாலைகள் என்றாலும், தற்போதைய மக்கள் தொகைக்கும் அது போதுமானதாகவே இருந்தது.

ஆனால் அரசியல் பின்னணியைக் கொண்ட சில வியாபாரிகள் மற்றும் தனிநபர்களின் ஆசையால் அந்தச் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, மக்கள் நடமாட முடியாத அளவுக்கு சுருங்கிவிட்டன.

அத்துமீறி கட்டப்பட்ட கட்டடங்கள், கடைகள், அவற்றின் விளம்பர பலகைகள் போன்றவை பிரதான சாலைகளில் 40% அடைத்துக் கொண்டிருக்கின்றன. அதனால் வருடத்தின் அனைத்து நாள்களிலும், அனைத்து சாலைகளும் நெரிசலில் நிரம்பி வழிகின்றன.

நேரு வீதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நடைபாதை

போக்குவரத்துக் காவலர்கள் போதுமான அளவுக்கு இல்லாததால், சிறிய பிரச்னைக்காக நீண்ட நேரம் மக்கள் சிக்கித் தவித்துவிடுவார்கள். வார இறுதி நாள்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வார இறுதி நாள்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும்.

ஆனால் சமீப நாள்களாக அனைத்து நாள்களிலும் அவர்களின் வருகை கணிசமாக இருப்பதால், நாள்தோறும் போக்குவரத்து நெரிசலுக்கிடையேதான் மக்கள் ஊர்ந்து செல்வார்கள்.

நகரப்பகுதியில் இருக்கும் புஸ்ஸி வீதியை மருத்துவச் சாலை என்று குறிப்பிடலாம். அந்த அளவுக்கு அங்கு அனைத்துவித நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களின் கிளினிக்குகள் இருக்கின்றன.

நேரு வீதி கடைகளால் 100% ஆக்கிரமிப்புகள்

அந்த வீதியில் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடும் கடைகளை வைத்திருப்பவர்கள், 500 முதல் 1,000 வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுவார்கள். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஒருபுறமிருக்க, மருத்துவர்களைப் பார்க்க வரும் நோயாளிகள் தங்களின் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் நொந்துவிடுவார்கள்.

இத்தனைக்கும் உள்ளூர்ப் பேருந்துகள் முதல் பள்ளிப் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் செல்லும் பிரதான சாலை அது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மிஷன் வீதியிலும் இதே நிலைதான். சுற்றுலாவை முன்னிறுத்தும் மாநிலத்தில் வாடகை இருசக்கர வாகனங்கள் தவிர்க்க முடியாத ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆக்கிரமிப்பை அகற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை

ஆனால் பொதுமக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான சாலையை, வியாபார நோக்கத்தில் செயல்படும் கடைகள் ஆக்கிரமிப்பது எப்படி சரியாக இருக்கும்? தனியாக குடோன் வைத்து அங்கு நிறுத்தி வைத்து, தேவைப்படுபவர்களுக்கு வாடகைக்கு கொடுக்கலாம். ஆனால் நகராட்சியும், போக்குவரத்துக் காவல்துறையும் மக்களின் அவஸ்தைகளை ஒரு பிரச்னையாகவே பார்ப்பதில்லை.

அதேபோல புதுச்சேரியின் வர்த்தக வீதி என்று சொல்லப்படும் நேரு வீதி, ஆக்கிரமிப்புக்கு நடுவில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு வழிப் பாதையான அந்த வீதியில் ஒருபுறம் மட்டுமே வாகனங்களை நிறுத்த முடியும்.

அந்த வீதியின் இருபுறமும் சுமார் 600 வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த அனைத்துக் கடைகளும் மக்களுக்கான நடைபாதையை முழுதாக விழுங்கி விட்டன. ஒரு கடையில் குறைந்தபட்சம் 50 ஊழியர்கள் என தோராயமாக 30,000 ஊழியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்.

மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு குவியும் பாராட்டுகள்

இவர்கள் அனைவரும் தங்களது இருசக்கர வாகனங்களை, தாங்கள் பணிபுரியும் கடைகளின் வாசலிலேயே நிறுத்தி அந்த வீதி முழுவதையும் நாள் முழுவதும் ஆக்கிரமித்துவிடுகிறார்கள். காலையில் 9 மணிக்கு கடைக்குள் செல்லும் இவர்கள், இரவு 10 மணிக்குதான் வீட்டுக்குச் செல்கிறார்கள்.

போதாக்குறைக்கு ஒவ்வொரு கடையின் வாசலிலும் வழி என்ற பெயரில் விதிகளை மீறி, பேரிகார்டுகளையும், தடுப்புகளையும் வைத்து ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் கடைகளின் உரிமையாளர்கள்.

அதனால் அந்த வீதிக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களை இரண்டாவது வரிசையாக சாலையில் நிறுத்தி, போக்குவரத்துக் காவலர்களிடம் அன்றாடம்  அபராதம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

ஆட்சியர் குலோத்துங்கன்
ஆட்சியர் குலோத்துங்கன்

மக்கள் புகார்களின் அடிப்படையில் நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றால், அமைச்சரவையில் இருந்து செல்லும் தொலைபேசி அழைப்புகள் அவர்களை அமைதியாக திரும்பி வரவைத்துவிடும்.

இப்படியான சூழலில்தான், `புதுச்சேரி முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்' என்று அறிவித்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், காவல்துறையுடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களாக அதைச் செயல்படுத்தி வருகிறார்.

பிரதான சாலைகளில் இருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடிச் செயலுக்கு பொதுமக்கள் ஆதரவையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் பெரும்பாலான ஆக்கிரமிப்புகளைச் செய்திருப்பது அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் பின்னணியில் இருக்கும் வணிகர்கள் என்பதால், எந்த நேரத்திலும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.

`5 வருடங்கள் உண்மையாக உழைத்தேன்; சில பெண் தலைவர்கள்..!'- காங்கிரஸிலிருந்து திமுகவில் இணைந்த ஸ்ரீநிதி

கோவையைச் சேர்ந்த ஸ்ரீநிதி, இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீநிதி சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்... மேலும் பார்க்க

கூட்டத்தில் 9-ல் 6 எம்.பி-க்கள் ஆப்சென்ட்: மம்தா கட்சி பாணியில் பிளவைச் சந்திக்கிறதா உத்தவ் சிவசேனா?

மகாராஷ்டிராவில் சிவசேனா ஏற்கெனவே 2022ம் ஆண்டு ஒரு பிளவைச் சந்தித்த நிலையில், மீண்டும் தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிளவைச் சந்தித்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் 9 மக்களவை ... மேலும் பார்க்க

அடுத்தகட்ட நடவடிக்கை... நகரும் சி.வி.சண்முகம்? சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் மு... மேலும் பார்க்க

`இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!' - இலங்கை எம்.பி வலியுறுத்தல்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "​தமிழ்நாட்டில் புதிய வித்தியாசமான அணி... மேலும் பார்க்க

'ஆப்கானில் பெண்ணாகப் பிறப்பதைவிட.!' - தாலிபன் தேசத்தில் 13 நாள்கள்; இந்திய பெண்ணின் சோலோ பயண அனுபவம்

"அம்மா, அப்பா, நான் நலமாக இருக்கிறேன்." - ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான நிலப்பரப்பில் பயணம் மேற்கொண்ட ஒரு இந்திய `சோலோ பெண் இன்ஃபுளூயன்ஸர்', தனது பெற்றோருக்கு நூறு முறைக்கும் மேல் சொன்ன வாக்கியம் இது. ஒவ... மேலும் பார்க்க