செய்திகள் :

கூட்டத்தில் 9-ல் 6 எம்.பி-க்கள் ஆப்சென்ட்: மம்தா கட்சி பாணியில் பிளவைச் சந்திக்கிறதா உத்தவ் சிவசேனா?

post image

மகாராஷ்டிராவில் சிவசேனா ஏற்கெனவே 2022ம் ஆண்டு ஒரு பிளவைச் சந்தித்த நிலையில், மீண்டும் தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிளவைச் சந்தித்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் 9 மக்களவை எம்.பி-க்கள் இருந்தனர். அவர்களில் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு செல்வதாக செய்திகள் வெளியானது. நேற்று 6 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் இரண்டு பேர் கையெழுத்திடவில்லை என்று உத்தவ் தாக்கரே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு இன்று உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை டெல்லியில் கூட்டி இருந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இக்கூட்டத்தில் 6 எம்.பி-க்கள் கலந்து கொள்ளவில்லை. வெறும் மூன்று பேர் மட்டுமே பங்கேற்றனர். இது குறித்து மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேயிக்கு சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவுத் தகவல் கொடுத்தார். கூட்டத்தில் கலந்து கொள்ள கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

தாக்கரே, ஷிண்டே

எனவே கலந்து கொள்ளாத எம்.பி-க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரே தயாராகி வருகிறார்.

தாராசிவ் எம்.பி.நிம்பல்கர், சஞ்சய் தினா பாட்டீல் ஆகியோர்தான் சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்ற புகார் இருந்தது. ஆனால் அவர்களும் உத்தவ் தாக்கரே கூட்டிய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது தவிர சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக், நாகேஷ் பாட்டீல், பெளஷாஹேப் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் 6 எம்.பி.க்களும் சிவசேனா(ஷிண்டே)வில் இணைந்துவிட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட நிலை உத்தவ் தாக்கரேயிக்கு ஏற்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி எடுத்த முடிவை ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்கள் ஏற்காததால், திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளது. அதிருப்தி கோஷ்டி தலைவர் ரிதப்ரதா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். கட்சியின் நாடாளுமன்றக் குழுவும் பிளவுபட்டுள்ளது. 20 திரிணாமுல் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து, தங்கள் குழுவை திரிபுராவைச் சேர்ந்த 'தேசியவாத காங்கிரஸ் மக்கள் கட்சி'யில் இணைப்பதாக கடிதம் அளித்துள்ளனர். மேலும், மக்களவையில் ஆளும் கட்சி பக்கம் தங்களுக்குத் தனி இருக்கை வசதி ஒதுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி; சாட்டையைச் சுழற்றும் ஆட்சியரின் நடவடிக்கை தொடருமா?!

ஆக்கிரமிப்பு குடோனாக மாறிய சாலைகள்புதுச்சேரியின் நகர்ப்புற சாலைகள் அனைத்தும் பிரெஞ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை. பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட சாலைகள் என்றாலும், தற்போதைய மக்கள்... மேலும் பார்க்க

`5 வருடங்கள் உண்மையாக உழைத்தேன்; சில பெண் தலைவர்கள்..!'- காங்கிரஸிலிருந்து திமுகவில் இணைந்த ஸ்ரீநிதி

கோவையைச் சேர்ந்த ஸ்ரீநிதி, இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீநிதி சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்... மேலும் பார்க்க

அடுத்தகட்ட நடவடிக்கை... நகரும் சி.வி.சண்முகம்? சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் மு... மேலும் பார்க்க

`இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!' - இலங்கை எம்.பி வலியுறுத்தல்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "​தமிழ்நாட்டில் புதிய வித்தியாசமான அணி... மேலும் பார்க்க

'ஆப்கானில் பெண்ணாகப் பிறப்பதைவிட.!' - தாலிபன் தேசத்தில் 13 நாள்கள்; இந்திய பெண்ணின் சோலோ பயண அனுபவம்

"அம்மா, அப்பா, நான் நலமாக இருக்கிறேன்." - ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான நிலப்பரப்பில் பயணம் மேற்கொண்ட ஒரு இந்திய `சோலோ பெண் இன்ஃபுளூயன்ஸர்', தனது பெற்றோருக்கு நூறு முறைக்கும் மேல் சொன்ன வாக்கியம் இது. ஒவ... மேலும் பார்க்க