செய்திகள் :

'வெல்லும் வரை ஒன்றிணைந்து போராடுவோம்' - ஸ்டாலின் சொன்ன பிறந்த நாள் வாழ்த்திற்கு ராகுல் காந்தி பதில்

post image

இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள்.

இந்திய பிரதமர் மோடி தொடங்கி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், ஒரு வாழ்த்து கொஞ்சம் முக்கியத்துவம் பெறுகிறது.

அது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்து. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நீங்கள் என்றும் நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸிற்கும், திமுகவிற்கும் முட்டலும், மோதலுமாக இருக்கிறது. கடந்த வாரம் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் கூட திமுக கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் தான், ஸ்டாலின் வாழ்த்து முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்டாலின், ராகுல் பதிவுகள்
ஸ்டாலின், ராகுல் பதிவுகள்

ஸ்டாலினின் வாழ்த்திற்கு ராகுல் காந்தியின் நன்றி இன்னும் கொஞ்சம் ஹைலைட்டாக உள்ளது...

"தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி, திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே!

இந்தியாவின் ஆன்மா, நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான நமது கூட்டு உறுதிப்பாடு தொடர்ந்து நம்மை வழிநடத்தும். இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவிற்கான போராட்டம், இதில் நாம் வெல்லும் வரை ஒன்றிணைந்து போராடுவோம்" என்று நன்றி தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

குறுக்கே நிற்கும் இஸ்ரேல்: தள்ளிப்போகும் அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை

நேற்று முன்தினம் (ஜூன் 17), அமெரிக்கா, ஈரான் இடையே 14 புள்ளிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை என்றும் தெ... மேலும் பார்க்க

முதல்வரின் முகத்துக்கு நேராக திமுக எம்.எல்.ஏ சொன்ன அந்த வார்த்தை; சீறிய ஆதவ் - சலசலப்பான சட்டமன்றம்!

ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று சட்டமன்றத்தில் நடந்திருந்தது. அதில், திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் முதல்வர் விஜய்யை நோக்கி வைத்த விமர்சனமும் அதற்கு அமைச்சர் ஆதவ் கொட... மேலும் பார்க்க

‘தொழிலை மீட்க உதவி செய்யுங்கள்’ - அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஜப்பான் நபரின் வேண்டுகோள்!

ஜப்பானை சேர்ந்த ஃபுட்டோஸி இட்டோ என்பவர் மதுரையை சேர்ந்த சரவணனுடன் இணைந்து ‘ரிக் வீல்ஸ்’ என்கிற பெயரில் ரயில் பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறார். தங்களுடைய தொழில் சில நிறுவனங்களால் பாதிப்பட்டு... மேலும் பார்க்க

மேகதாது: `திமுகவை போல தவெக வெற்று நாடகங்களை நடத்தக்கூடாது’ – வானதி சீனிவாசன்

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “மேகதாது அணை திட்​டம் என் இதயத்​துக்கு நெருக்​க​மானது. மேகதாது அணை கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜ​ய்யுடன் பேச்சு நடத்த தயா​ராக இருக்​கிறேன் என கர்... மேலும் பார்க்க

`எங்கள் முன் இருந்த 3 வாய்ப்புகள்; சிக்கல் சவால்கள் இருந்தும் தவெக-வுக்கு ஆதரவு'- விளக்கும் சண்முகம்

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அணி மாறிய திமுக கூட்டணிக் கட்சிகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வருகிறது. இந்த விமர்சனங்களுக்கு, விமர்சனத்துக்குள்ளாகும் கட்சிகள் விளக்கமளி... மேலும் பார்க்க