செய்திகள் :

வேளாண்மை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முதல் ITI வரை: படிப்பு, கடைசி தேதி - முழு விவரம்!

post image

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் சேரலாம்? என்ற ஆலோசனையிலும் தேடலிலும் மாணவர்களும் பெற்றோர்களும் தீவிரமாக இருப்பீர்கள்.

உங்கள் சுமையைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள கலை, அறிவியல், பொறியியல், சட்டம், விவசாயம், மீன்வளம் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளுக்கான சேர்க்கை விவரங்கள், விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரிகள் மற்றும் கடைசி தேதிகளைத் தொகுத்து இதோ உங்களுக்காக!

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்

1. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (TNGASA)

தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் (Unified Portal) விண்ணப்பிக்க இந்தத் தளம் பயன்படுகிறது. மாணவர்கள் ஒரே விண்ணப்பத்தின் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

• வழங்கப்படும் படிப்புகள்: B.Sc. Maths, Physics, Chemistry, Computer Science, B.A. Economics, History, B.Com, B.B.A, B.C.A மற்றும் பிற இளங்கலைப் படிப்புகள்.

• விண்ணப்பிக்க இணையதளம்: www.tngasa.in

• விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.05.2026

2. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA)

அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ, பி.டெக் மற்றும் பி.ஆர்க் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இந்தச் சேர்க்கையின் கீழ் நிரப்பப்படுகின்றன.

• வழங்கப்படும் படிப்புகள்: B.E / B.Tech மற்றும் B.Arch

• விண்ணப்பிக்க இணையதளம்: www.tneaonline.org

• விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.06.2026

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

3. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU)

அரசு மற்றும் தனியார் வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான தளம் இது.

• வழங்கப்படும் படிப்புகள்: விவசாய அறிவியல் படிப்புகள் (8): B.Sc. (Hons.) Agriculture (தமிழ் மற்றும் ஆங்கில வழி), Horticulture, Forestry, Sericulture, Food Nutrition & Dietetics, Agri-Business Management.

விவசாய தொழில்நுட்பப் படிப்புகள் (6): B.Tech. (Food Technology, Biotechnology, Energy and Environmental Engineering, Agricultural Information Technology, Bioinformatics, Agricultural Engineering).

மேலும் விவசாயம், தோட்டக்கலை சார்ந்த டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

• விண்ணப்பிக்க இணையதளம்: www.tnau.ucanapply.com

• விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2026

4. தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)

மீன்வள அறிவியல் மற்றும் கடல்சார் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கான சேர்க்கை இது.

• வழங்கப்படும் படிப்புகள்: B.F.Sc. (Bachelor of Fisheries Science), B.Tech. (Fisheries Engineering, Biotechnology, Food Technology), BBA (Fisheries Enterprises Management) மற்றும் 3 ஆண்டு கால B.Voc. படிப்புகள்.

• விண்ணப்பிக்க இணையதளம்: admission.tnjfu.ac.in

• விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.06.2026

TNJFU
TNJFU

5. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU)

சட்டப் படிப்பை (Law) நோக்கிப் பயணிக்க விரும்பும் மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு. பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் அரசு/தனியார் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

• வழங்கப்படும் படிப்புகள்: 5 ஆண்டு ஒருங்கிணைந்த கௌரவப் படிப்புகள் (Honours): B.A.LL.B. (Hons.), BBA.LL.B. (Hons.), B.Com.LL.B. (Hons.), BCA.LL.B. (Hons.) – இதற்கு SC/ST பிரிவினர் 60%, மற்றவர்கள் 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

5 ஆண்டு B.A.LL.B. படிப்பு (இணைவு பெற்ற கல்லூரிகள்): இதற்கு SC/ST பிரிவினர் 40%, மற்றவர்கள் 45% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

• விண்ணப்பிக்க இணையதளம்: www.tndalu.ac.in

• விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.06.2026

6. அண்ணாமலை பல்கலைக்கழகம் (Annamalai University)

சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேரடி வளாகத்தில் (On-Campus) கற்பிக்கப்படும் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த சேர்க்கை அறிவிப்பு இது.

• வழங்கப்படும் படிப்புகள்: B.F.Sc, B.Pharm, Pharm.D, B.P.E.S, B.Ed, B.F.A (Music/Dance), அனைத்து விதமான M.A, M.Sc, M.Com முதுகலைப் படிப்புகள், 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள், மற்றும் பல்வேறு பி.ஜி. டிப்ளமோ (P.G. Diploma), டிப்ளமோ படிப்புகள்.

• விண்ணப்பிக்க இணையதளம்: www.annamalaiuniversity.ac.in

• விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.06.2026

 அண்ணாமலை பல்கலைக்கழகம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்

7. தமிழ்நாடு அரசு கவின் கலைப் பல்கலைக்கழகம்

இசை, ஓவியம், சிற்பம் மற்றும் கட்டடக்கலை போன்ற கலைத் துறைகளில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கான பிரத்யேக சேர்க்கை.

• வழங்கப்படும் படிப்புகள் / கல்லூரிகள்:

அரசு இசைக் கல்லூரி சேர்க்கை (சென்னை, கோவை, மதுரை, திருவையாறு)

அரசு கவின் கலைக் கல்லூரி சேர்க்கை (சென்னை, கும்பகோணம், மதுரை)

அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி சேர்க்கை (மாமல்லபுரம்)

• விண்ணப்பிக்க இணையதளம்: www.artandculture.tn.gov.in

• விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2026

8. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (TNPESU)

விளையாட்டுத் துறை, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கான சேர்க்கை.

• வழங்கப்படும் படிப்புகள்: B.P.E.S. (Bachelor of Physical Education and Sports), B.Sc. (Sports Biomechanics, Exercise Physiology, Yoga, Sports Coaching), B.P.Ed., M.P.Ed., மற்றும் யோகா, ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் சார்ந்த பல்வேறு M.Sc, MBA, M.Tech படிப்புகள்.

• விண்ணப்பிக்க இணையதளம்: www.tnpesuonline.in

• விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.06.2026

TNPESU
TNPESU

9. அரசு பாலிடெக்னிக் டிப்ளமோ சேர்க்கை (DOTE)

பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்துவிட்டு நேரடியாக தொழில்நுட்பப் படிப்புகளில் (Diploma) சேர விரும்பும் மாணவர்களுக்கான சேர்க்கை.

• வழங்கப்படும் படிப்புகள்: முதலாமாண்டு டிப்ளமோ (1st Year Diploma), நேரடி இரண்டாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கை (Lateral Entry), மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்புகள் (Part-Time).

• விண்ணப்பிக்க இணையதளம்: www.tnpoly.in

• விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.05.2026

10. தமிழ்நாடு அரசு ITI சேர்க்கை

பல்வேறு தொழிற்படிப்புகள் (Trades) மூலம் உடனடி வேலைவாய்ப்பைப் பெற விரும்பும் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி சேர்க்கை.

• வழங்கப்படும் படிப்புகள்: அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) வழங்கப்படும் பல்வேறு தொழில் பிரிவுகள்.

• விண்ணப்பிக்க இணையதளம்: www.skilltraining.tn.gov.in

• விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.06.2026

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது உங்களது மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் புகைப்படங்களைச் சரியான அளவில் ஸ்கேன் செய்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். கடைசி நேர இணையப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, இறுதி நாளுக்கு முன்னரே விண்ணப்பிப்பது புத்திசாலித்தனம்.

உங்கள் எதிர்காலக் கல்விப் பயணம் சிறக்க வாழ்த்துகள்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை முந்திய மாணவிகள்; முதலிடம் பிடித்த மாவட்டம் எது?

தமிழ்நாட்டில் இன்று பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.2026-ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் 8.70 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். அதில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளன... மேலும் பார்க்க

PM SHRI: "அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம்" - பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன்

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் மத்திய அரசின் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் எனp பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இன்று (மே.19) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "... மேலும் பார்க்க

மோடி பரிந்துரைத்த 'மீண்டும்' ஆன்லைன் க்ளாஸ்: கல்லூரி மாணவர்களுக்கு 'ஓகே'; ஆனா, பள்ளி மாணவர்களுக்கு?

இன்னும் கிட்டத்தட்ட 15 நாள்களில் பள்ளி, கல்லூரி ரீ-ஓபன் ஆகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு... இந்திய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை கைகாட்டி இந்திய பிரதமர் மோடி பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் க்ளாஸ் நடத்தலாம... மேலும் பார்க்க

வெளியானது +2 தேர்வு முடிவுகள்! அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டம் இதுதான் - முழு விவரம்

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கின. இதையடுத்து மார்ச் 2ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கின. அதன்பிறகு மார்ச் 26ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. கடந்த மா... மேலும் பார்க்க