செய்திகள் :

`கடலோடு இணைந்த வரலாற்று நிலம்; இன்று அழிவின் பிடியில்...' - நரிப்பையூரின் `அவல' நிலை!

post image

ஆதிச்சநல்லூர் மண்ணில் புதைந்த வரலாறுகள் இன்று வரை உலகை வியக்க வைப்பதைபோல ஏராளமான கிராமங்கள் தங்களது பழம்பெருமையை சுமந்து நிற்கின்றன. அப்படிப்பட்ட வரலாற்றின் அழியாச் சுவடாய் நிற்கிறது இராமநாதபுரம் மாவட்டத்தின் நரிப்பையூர் ஊராட்சி. இந்த ஊருக்கு 'சம்புமாநகர்' என்ற மற்றொரு பெயரும் உள்ளது. “சம்பு” என்பது வடமொழியில் நரியைக் குறிக்கும் சொல்லாகும். மேலும், “நரிப்பையூர்” என்ற பெயருக்கு நரிகள் நிறைந்த அழகிய ஊர் என்ற பொருளும் கூறப்படுகிறது.

முதல் கடல் நீர் குடிநீராக்கும் திட்டம் – நவீன மாற்றம்

பல தொல்லியல் சுவடுகளை தன்னுள் புதைத்து வைத்திருந்தாலும், நரிப்பையூரை உலகம் அறிய வைத்தது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்தான். தமிழ்நாட்டில் ஆரம்ப காலத்திலேயே கடல் நீரை குடிநீராக்கும் முயற்சி தொடங்கப்பட்ட முக்கிய இடங்களில் ஒன்றாக இந்த ஊர் திகழ்கிறது. 1999ஆம் ஆண்டு இங்கு பெரிய அளவிலான Desalination Plant அமைக்கப்பட்டது. தினமும் சுமார் 3.8 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த திட்டம், கடற்கரை மக்களின் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நரிப்பையூர் தொல்லியல் தகவல்கள், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு அவர்களின் ஆய்வின் மூலம் பெறப்பட்டவை. 18.11.2018 அன்று நரிப்பையூரில் நடைபெற்ற பத்தாம் மரபுநடை நிகழ்வில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பில் இவை ஆய்வு செய்து வெளியிடப்பட்டன.

வே. ராஜகுரு

இது குறித்து அவர் கூறுகையில்,

"இன்று போல மாவட்டம், தாலுகா என்ற எல்லைகள் இல்லாத காலத்தில் நிலங்கள் வளநாடு, நாடு என்ற பெயர்களில் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டன. அந்த பழைமையான ஆட்சிமுறையின் சுவடாக, நரிப்பையூரும் 'உலகுசிந்தாமணி வளநாடு' என்ற பகுதிக்குள் இருந்தது என்பதை பொ.ஆ.பி 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாயல்குடி சிவன் கோயில் கல்வெட்டு இன்று வரை நினைவூட்டுகிறது. தமிழ்நாட்டின் பழைமையான மரபுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று நடுகல் நட்டு வீரர்களை வழிபடும் வழக்கம். சங்க இலக்கியங்களில், குறிப்பாக புறநானூறு கூறும் புறத்திணைகள் தமிழரின் போரியல் வாழ்க்கையையும் வீர மரபையும் வெளிப்படுத்துகின்றன. அவற்றில் இடம்பெறும் பல போர் முறைகளில், புறமுதுகு காட்டாமல் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நினைவாக நடுகற்கள் நிறுவப்பட்டன. இந்த நடுகற்கள் வெறும் நினைவுச்சின்னங்களாக மட்டுமல்லாமல், வீரத்தைப் போற்றும் சமூக அடையாளங்களாகவும் விளங்கின.

மொட்டைப் பள்ளிவாசல்

நரிப்பையூரில் உள்ள “மொட்டைப் பள்ளிவாசல்” கடற்கரைப் பகுதியின் பழைமையான இஸ்லாமிய மரபையும் வணிகத் தொடர்புகளையும் வெளிப்படுத்தும் வரலாற்று சின்னமாகும். மினாரா இல்லாததால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டது. கட்டடத்தின் உள்ளமைப்பில் தொழுகை மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் முன் மண்டபம் என மூன்று பகுதிகள் தெளிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இது வழிபாட்டு ஒழுங்கையும் சமூக அமைப்பையும் காட்டுகிறது. ஒலி பெருக்கி இல்லாத காலத்தில், வில் வடிவ மாடம் இமாமின் உரை மற்றும் தொழுகை வழிநடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டது. இது அந்தக் கால தொழில்நுட்ப தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அமைப்பாகும். தூண்களில் உள்ள தாமரைப் பொதிகையுடன் கூடிய அலங்காரங்கள், திராவிட - இஸ்லாமிய கட்டடக்கலையின் கலவைத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

கடல் தான் இராமநாதபுரத்தின் பழைய வரலாற்றை எழுதிச் சென்றது. சங்க காலம் முதலே மருங்கூர்ப்பட்டினம், அழகன்குளம், தொண்டி, கீழக்கரை, இராமேஸ்வரம் போன்ற துறைமுகங்கள் வழியாக உலக வாணிகம் இங்கு உயிர்ப்புடன் இருந்தது. இந்த கடல் வழிப் பயணங்களே மதங்களையும் கொண்டு வந்தன. சமணம், பௌத்தம், சைவம் என பல மரபுகள் இப்பகுதியில் வளர்ந்தன. வணிகத்தின் நிழலில் கோயில்கள் எழுந்தன; பழையவை காக்கப்பட்டன. பாண்டியர் காலத்தில் கடற்கரை ஊர்கள் ஆன்மிக மையங்களாகவும் மாறின. அந்த வரலாற்றின் தடயமாகவே நரிப்பையூரில் தெற்கு கடற்கரையும் வெட்டுக்காடும் பகுதியில் இரண்டு சிவன் கோயில்கள் இன்று மண்ணுக்குள் மறைந்தபடி நிற்கின்றன.

பாடு என்னும் சொல் பொதுவாக மீன்பிடி தளங்களை குறிக்கும். அவ்வகையில் தெற்கு நரிப்பையூர் கடற்கரையில் துறைப்பாடு, சொக்கன்பாடு, எருக்கலாம்பாடு, பள்ளிவாசல்பாடு ஆகிய பகுதிகள் உள்ளன. நரிப்பையூரின் கடற்கரை ஒரு பெரிய கதை போல 'பாடு' என்ற பெயர்களால் பிரிந்து கிடக்கிறது. துறைப்பாடு கடல் தொழிலின் அடையாளமாகவும், பள்ளிவாசல்பாடு ஒரு தர்ஹாவுடன் ஆன்மிகச் சுவடாகவும் நிற்கிறது. எருக்கலாம்பாடு அதன் இயற்கைச் சூழலால் பெயர் பெற்றது. இந்தக் கதையின் மையத்தில் சொக்கன்பாடு ஒரு மறைந்த அத்தியாயம் போல உள்ளது. மண்ணுக்குள் கிடைத்த தூண்கள், கொடுங்கை போன்ற அடையாளங்கள் அந்த இடம் ஒரு கட்டடமாக இருந்திருக்கலாம் என சொல்கின்றன. ‘L’ வடிவ நில அமைப்பும் அதையே மேலும் உறுதிப்படுத்துகிறது.

இத்தனை ஆய்வுகள், முயற்சிகள், வெளிப்பாடுகள் இருந்தும்கூட, அந்தச் சின்னங்களை பாதுகாக்க முடியாத நிலை என்பது மிகவும் வருத்தம் தருகிறது. முறையான பாதுகாப்பு இல்லாததால் மாலையடிகளில் ஒன்று இடிந்து விழுந்திருப்பது, நம் வரலாற்று சின்னங்களை நாம் இழந்துவிடுகிறோமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது. இவ்வாறான மரபுச்சின்னங்களை பாதுகாப்பதும், அவற்றின் மதிப்பை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்வதும் நம் அனைவரின் பொறுப்பாகும்" என்று பேசி முடித்தார் ராஜகுரு.

- தர்ஷினி.சி

நீர் ஒரு தேசிய சொத்து; வெளியேற்றப்படுபவர்கள் 2 லட்சம் பேரா? விவாதம் | அணை ஓசை 19

சட்ட கண்ணோட்டத்துடன் பார்க்காமல் அனுதாபத்துடனும், மனிதாபிமானத்துடனும் இந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.ஜே.சல்தானா வெட்டுத் தீர்மானம்1925-26-ம் ஆண்டு மேட்டூர் திட்டத்திற்காக, துணை மான... மேலும் பார்க்க

ஆய்வு மேற்கொள்ளப்படாமல் அழிவின் விளிம்பிலிருக்கும் வேம்பார் கடற்கரை நகரம்!

வங்கக் கடலின் தென் எல்லையில் அமைந்திருக்கூடிய தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பார் கடற்கரைப் பகுதி, பல ஆண்டுகளாக கடலை மட்டுமல்லாது தன்னுள் புதையுண்டிருக்கும் நீண்ட நெடிய வரலாற்றை, தன் பழைமையின் சுவடு அழ... மேலும் பார்க்க

பௌத்தத்திற்கு சோழர்கள் கொடுத்த தானம்.! - இந்தியா திரும்பும் ஆனைமங்கலம் செப்பேட்டின் சுவாரஸ்ய வரலாறு

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்டு, கடல் கடந்த தேசங்களை எல்லாம் நடுங்கச் செய்தவர்கள் சோழ மாமன்னர்கள். அவர்கள் தங்களின் வெற்றிகளையும், கொடைகளையும் வெறும் காற்றில் எ... மேலும் பார்க்க

Rs.100 CUT MOTION; மேட்டூர், தஞ்சாவூருக்கானது: மெட்ராஸ் மாகாண கவுன்சில் - விவாதங்கள்| அணை ஓசை 18

132 உறுப்பினர்கள்(MADRAS LEGISLATIVE ASSEMBLY)காவிரி மேட்டூர் அணை திட்டம் செயலாக்கம் அடைந்தபோது பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் அப்போது நாடு இருந்தது அனைவரும் அறிந்ததே! இந்திய நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி அ... மேலும் பார்க்க

இதுதான் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட கடல்சார் வேளாண்மை! - தொல்லியர் அறிஞர் ராஜேஷ்!

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் என்ற மீனவ கிராமத்தின் அருகே அமைந்துள்ளது பட்டினமருதூர் மற்றும் பனையூர் பகுதிகள். தமிழக அரசால் தொல்லியல் தளமாக அறிவிக்கப்பட்ட பட்டினமருதூருக்கு அருகே உள்ள பனையூரில் ந... மேலும் பார்க்க

ஞாயம் பாடி சொத்து; வெள்ளிப் பணம் மூட்டையில்... | அணை ஓசை 17

மார்ட்டள்ளிஇன்றைக்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்பாகவே மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதிகளிலிருந்து மக்கள் குடி பெயர்ந்து அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளேகால் பகுதியில் உள்ள மார்ட்டள... மேலும் பார்க்க