செய்திகள் :

'ரூ.20 லட்சம் வருமானம்; பெற்றோர் ஐஏஎஸ்... பிள்ளைகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு?' - உச்ச நீதிமன்றம் கேள்வி!

post image

இந்தியாவின் இட ஒதுக்கீடுக் கொள்கையில் 'கிரீமிலேயர்'  வரம்பை நிர்ணயிப்பது தொடர்பான மிக முக்கிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட சமூகமான 'குறும்பா' சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மின்சாரத் துறையில் உதவிப் பொறியாளராக தேர்வாகியும், அவரது குடும்ப வருமானம் 20 லட்சம் ரூபாய் என்பதால் அவரை இட ஒதுக்கீட்டுப் பலன் பெற முடியாத 'கிரீமிலேயர்' வரம்பிற்குள் சேர்த்த மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்பொழுது கையில் எடுத்துள்ளது.

இந்த உத்தரவை ஏற்கெனவே உறுதி செய்திருந்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு விரிவான விசாரணைக்கு வந்தது.

கர்நாடக மின்சாரத் துறையில் உதவிப் பொறியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட அந்த நபரின் பெற்றோர்கள் இருவரும் அரசு ஊழியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் கூட்டு ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் வருவதைச் சுட்டிக்காட்டி, அவர் ஓபிசி இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறத் தகுதியற்றவர் என மாவட்ட நிர்வாகம் 'கிரீமிலேயர்' சான்றிதழ் வழங்கி இருந்தது.

உச்ச நீதிமன்றம்

இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றமும், மாவட்ட நிர்வாகத்தின் முடிவே சரியானது எனத் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, கிரீமிலேயர் விலக்கு விதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பிற மனுக்களும் இதனுடன் ஒன்றாக இணைத்து இன்று விசாரிக்கப்பட்டன.

இன்றைய விசாரணையின் போது, சமூக நகர்வு குறித்து நீதிபதி பி.வி. நாகரத்னா, ``இட ஒதுக்கீடு மூலம் ஒரு தலைமுறை சமூக முன்னேற்றத்தை அடைந்த பிறகு, அதே குடும்பத்தினர் அந்தப் பலன்களை அடுத்த தலைமுறைக்கும் கோரிக் கொண்டிருந்தால், நாம் எப்போதுமே இட ஒதுக்கீட்டு முறையிலிருந்து வெளியேற முடியாது" எனக் கவலை தெரிவித்தார்.

மேலும், ``பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஏற்கெனவே நல்ல பொருளாதார மற்றும் உயர்ந்த சமூக நிலையில் இருக்கிறார்கள். கல்வி மற்றும் பொருளாதார அதிகாரம் கிடைக்கும் போது, அங்கே சமூக நகர்வு இயல்பாகவே நடந்துவிடுகிறது.

அப்படி இருக்கையில், அவர்களின் பிள்ளைகளும் மீண்டும் இட ஒதுக்கீடு கோருவது எந்த வகையில் நியாயம்? இதில் ஒரு சமூகச் சமநிலை இருக்க வேண்டும்" என அவர் சுட்டிக்காட்டினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஷாங்க் ரத்னூ, ``இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமிலேயர் பிரிவினர் விலக்கப்படுவது அவர்களின் வெறும் 'சம்பளத்தின்' அடிப்படையில் அல்ல; பெற்றோரின் 'அதிகாரப் பதவி' அடிப்படையிலேயே. எனவே, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான விதிகளையும், ஓபிசி கிரீமிலேயர் விதிகளையும் ஒன்றாகக் கருதக் கூடாது. கிரீமிலேயர் விதிகள் இன்னும் தாராளமாக இருக்க வேண்டும்" என வாதிட்டார்.

இடஒதுக்கீடு

இதற்குப் பதிலளித்த நீதிபதி நாகரத்னா, "EWS பிரிவில் சமூகப் பின்தங்கிய நிலை என்பது கிடையாது, வெறும் பொருளாதாரப் பின்தங்கிய நிலை மட்டுமே உள்ளது. ஆனால், ஓபிசி பிரிவில் ஒருவர் ஆரம்பத்தில் சமூக ரீதியாகப் பின்தங்கியவராக இருந்தாலும், இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அவர் ஒரு குறிப்பிட்ட உயர் நிலையை அடைந்த பிறகு, அவரது குடும்பத்தின் சமூகப் பின்னணி முற்றிலும் மாறிவிடுகிறது" என்று மிகத் தெளிவாக விளக்கமளித்தார்.

இன்றைய வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, கர்நாடக மின் பொறியாளர் வழக்கு மற்றும் கிரீமிலேயர் அரசாணைகள் குறித்து இன்னும் ஆழமாக ஆராய வேண்டியுள்ளதால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முறைப்படியான நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

கர்நாடகாவின் இந்த வழக்கு, நாடு முழுவதும் உள்ள கிரீமிலேயர் வருமான வரம்பு மற்றும் தகுதிகளை மறுவரையறை செய்வதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப்போகிறது.

லால்குடியில் நழுவிய வெற்றி; அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு வாரியத் தலைவர் பதவி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் வெற்றி வாய்ப்பை இ... மேலும் பார்க்க

'அதிகாரமின்றி நிதானம் இழக்கும் திமுக!' - ஓர் அலசல்!

தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் முழுமையாக முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு பிறகு ஒரு கூட்டணி அமைச்சரவை அமைந்திருக்கிறது. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள்... மேலும் பார்க்க

பக்ரீத்: 'நோ' பசு, கன்றுக்குட்டி, ஒட்டகம் வெட்டுதல் - டெல்லி அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

வருகிற 28-ம் தேதி, பக்ரீத் பண்டிகை வர உள்ளது. இதை முன்னிட்டு, டெல்லியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி வளர்ச்சி அமைச்சர் கபில் மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "பக்ரீத் ப... மேலும் பார்க்க

தென்காசி: கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்? - மனமுடைந்து விஷமருந்திய விவசாயி; உறவினர்கள் குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய் புறம் வேதக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். விவசாயியான இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பா... மேலும் பார்க்க

கடலூர்: ரியல் எஸ்டேட் பிசினஸ் `டு’ அமைச்சர்; வீட்டுவசதித் துறையை வசப்படுத்திய தவெக ராஜ்குமார் யார்?

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்று கடலூர். இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரனும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எம்... மேலும் பார்க்க