செய்திகள் :

வெளியானது +2 தேர்வு முடிவுகள்! அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டம் இதுதான் - முழு விவரம்

post image

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கின.

இதையடுத்து மார்ச் 2ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கின. அதன்பிறகு மார்ச் 26ஆம் தேதி வரை நடத்தப்பட்டன.

கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 26ஆம் தேதி நடந்த தேர்வில் மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ, மாணவிகள் எழுதினர்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

இவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன.

இதற்காக 150க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் மே 8ஆம் தேதியான இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் ஈரோடு முதலிடம் பிடித்திருக்கிறது.

அங்கு 98.87 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றன.

தேர்வுகள்
தேர்வுகள்

வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 97 சதவிகிதமும், மாணவர்கள் 93.19 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6945 பேர் நூற்றுக்கு நூறு எடுத்திருக்கின்றனர்.

கூடுதல் விவரங்கள்

NEET Exam: சென்னையில் 'நீட்' நுழைவுத் தேர்வு; கடும் வெயிலில் வரிசையில் நின்ற மாணவர்கள் | Photo Album

கோவிட், குற்றம், நீட், பொருளாதாரம்... தரவுகளைத் தர மறுக்கும் மத்திய பா.ஜ.க அரசு... மேலும் பார்க்க

Prachi Nigam: உருவக்கேலிகளை உடைத்தெறிந்து மீண்டும் வெற்றி வாகை சூடிய மாணவி பிராச்சி நிகம்!

வெற்றி என்பது வெறும் மதிப்பெண்களில் மட்டுமல்ல, சமூகத்தின் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு, தளராத மனதுடன் தொடர்ந்து முன்னேறுவதிலும் உள்ளது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப... மேலும் பார்க்க

+2வுக்குப் பின் என்ன படிக்கலாம்? - மாணவர்களுக்கு வழிகாட்டிய விகடன்!

பிளஸ் 2 தேர்வுகள் ஒரு வழியாக முடிந்துவிட்ட நிலையில், "அடுத்து என்ன படிக்கலாம்?" என்ற மாணவர்களின் நீண்டநாள் குழப்பத்திற்கு விடை சொல்லும் பிரம்மாண்ட நிகழ்வு இன்று (25.04.2026) சென்னையில் இனிதே அரங்கேறிய... மேலும் பார்க்க