செய்திகள் :

தவெக: ``மக்கள் தீர்ப்புக்கு இழைக்கப்படும் அவமதிப்பு!" - நடிகை ஸ்ரேயா சரண் பதிவு!

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக-வால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

இதற்கு ஆளுநர் தரப்பில் காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்புக் கொடுக்கும் வழிகாட்டல். எனவே, ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து விஜய் தரப்பு நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது.

நடிகை ஸ்ரேயா சரண்
நடிகை ஸ்ரேயா சரண்

இந்த நிலையில், தவெக தலைவர் விஜயுடன் அழகிய தமிழ் மகன் (2007) திரைப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ``தவெக கட்சி 108 இடங்களை வென்றுள்ளது. அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை மறுப்பது, தமிழ்நாட்டு மக்களின் மக்கள் தீர்ப்பிற்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்களால் இன்னும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள இயலாத நிலையில், இது மாநிலத்திற்கு இழைக்கப்படும் அவமானம் மட்டுமல்ல; ஜனநாயகத்திற்கே விழுந்த ஒரு பேரிடியும் ஆகும்." என்ற கமல் சொன்ன செய்தி பதிவைப் பகிர்ந்துள்ளார்.

கேரள முதல்வர் யார்? - முக்கோண மோதலில் காங்கிரஸ்!

கேரளத்தில் 102 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வென்றும் முதல்வராக யாரை நியமிப்பது என காங்கிரஸ் தலைமை திணறிவருகிறது!கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில், 102 தொகுதிகளை வாரிச்சுருட்டியது... மேலும் பார்க்க

கேரளம்: `பாஜக 3 இடங்களை வென்றிருப்பது கவலையளிக்கிறது' - தேர்தல் தோல்வி குறித்து பினராயி விஜயன்

கேரளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் 102 இடங்களில் வென்றது. சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி 35 இடங்களை பிடித்தது. பா.ஜ.க மூன்று இடங்களில் வென்றது. தேர்த... மேலும் பார்க்க

"மக்களின் தீர்ப்பே மகத்தானது; துரதிருஷ்டவஷமாக யாருக்கும் பெரும்பான்மை இல்லை.!"- எம்.பி கனிமொழி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார். ஆனால் அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 பேர... மேலும் பார்க்க

'ஒன்னு நீ, இல்ல நான், நம்ம டீலிங் பக்காவா இருக்கணும்!'- திமுக, அதிமுக பற்றி விஜய் பேசிய வீடியோ வைரல்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார். ஆனால் அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 பேர... மேலும் பார்க்க

TVK: ``2 பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தைக் காக்க..." - எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக-வால் ஆட்சி அமைக்க ம... மேலும் பார்க்க

தவெக: ``திமுக - அதிமுக கூட்டணி அமைந்தால் பேரழிவு!” - நடிகர் விஷால் எச்சரிக்கை

தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சூழல்கள் நிலவி வரும் வேளையில், நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை... மேலும் பார்க்க