செய்திகள் :

தீர்க்கமுடியாத பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் மஹா பிரத்தியங்கிரா ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

post image

சித்தர்கள் போற்றிய தெய்வத் தலம் மாமண்டூர் வடபாதி சித்தர் பீடம். தினமும் இரவில் தேவகன்னிகள் வழிபடும் இந்த அபூர்வ தலத்தில் 16.5.26 அன்று சக்திவாய்ந்த மஹா பிரத்தியங்கிரா யாகம் நடைபெறவுள்ளது. கெடுபலன்களை விலக்கி, நன்மைகளை வாரி வழங்கும் இந்த யாகத்தில் நீங்களும் சங்கல்பம் செய்யலாம்!

அதர்வணவேதமும் முதல் பழம்பெரும் ஞானநூல்கள் பலவும் போற்றும் சக்திமிக்க வழிபாடு - மகா பிரத்தியங்கிரா யாகம். இதில் கலந்துகொண்டால் எப்பேர்ப்பட்ட கடுமையான பிரச்னைகளும் காணாமல் போகும். ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை போன்ற எதிர்மறை எண்ணங்களைப் பொசுக்கும் மகாகாளியாகவே பிரத்யங்கரா தேவியைப் போற்றுகின்றன ஞானநூல்கள்.

அருள்மிகு பூமாத்தம்மன்

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்னைகள், மனதை வாட்டும் குடும்ப கஷ்டங்கள் - பிரிவினைகள், தொழில் முட்டுக்கட்டைகள், தீவினைகளால் ஏற்படும் சங்கடங்கள் ஆகிய அனைத்தும் அன்னை யின் அருளால் விலகும் என்கிறார்கள் பெரியோர்கள். அப்படியான இந்த அன்னையை மகிழ்விக்கும் வழிபாடுகளில் மிக முக்கியமானது மஹா பிரத்தியங்கிரா யாகம். அதுவும் குறிப்பாக அமாவாசை தினத்தில் நடைபெறும் இந்த யாகத்தில் கலந்துகொண்டு வழிபடு வதன் மூலம், சகலவிதமான நன்மைகளும் உண்டாகும்.

ஏதேதோ காரணங்களால் கல்யாணக் காரியங்களில் தடங்கல்கள் உண்டாகி வருந்தும் அன்பர்கள், தொழிலில் நஷ்டத்துக்குமேல் நஷ்டத்தைச் சந்திப்பவர்கள், விலகாத பிணிகளால் வாடும் அன்பர்கள், குடும்பப் பிரிவினை, சொத்துத் தகராறு எனப்போன்ற பிரச்னைகளில் இருப்பவர்கள் அவசியம் இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதன் மூலம் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

மஹா பிரத்தியங்கிரா ஹோமத்தில் சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

அவ்வகையில் வாசகர்கள் பயன் அடையும் விதம், சக்தி விகடன் மற்றும் மாமண்டூர் வடபாதி பூமாத்தம்மன் சித்தர் பீடம் மடத்தின் சார்பில், 16.5.26 சனிக்கிழமை அன்று இரவு 7:30 முதல் 9:30 மணி வரை மஹாபிரத்தியங்கிரா யாகம் நடைபெறவுள்ளது.

சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல் பட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது மாமண்டூர். இதன் அருகிலுள்ள ஊர் வடபாதி கிராமம். இங்கே சித்த சாந்நித்தியத்துடன் திகழும் பூமாத்தம்மன் சித்தர் பீடத்தில், பிரதான தெய்வமாக் கோயில் கொண்டிருக்கிறாள் பூமாத்தம்மன்.

மஹா பிரத்தியங்கிரா

மாமண்டூராள், வடபாதி தில்லை பூமாது, பூமாது, வீரபத்ரகாளி என்றெல்லாம் புராதனத் திருப்பெயர்களைத் தன்னகத்தே கொண்ட அம்பிகை இவள்.

``இந்த அம்பிகை சிவ தத்துவ சொரூபம் கொண்டவள். அம்பாளின் ஒரு செவியில் குழந்தைக் குண்டலமும்; அடுத்த செவியில் மகரக் குண்டலத்துடன் தோடு திகழ்கிறது. அதேபோல், பூணுலும் தரித்திருக்கிறாள். திருமுகத்தைக் கவனித்தோமானால், சிவத்தின் அம்சத்தைக் காணலாம். ஆமாம் அர்த்தநாரி அம்சம் இவள். இந்த அம்மனை வழிபட்டால் அம்மை-அப்பனை ஒருங்கே வழிபட்ட பலன் கிடைத்துவிடும்’’ என்று விவரிக்கிறார் வடபாதி ஆதீனம் - பாலயோகி சித்தர் சக்திமுத்துக்குமார ஸ்வாமி. இவரது நிர்வாகம் மற்றும் வழிகாட்டலுடன் மிகச் சிறப்பான முறையில் இந்தச் சித்தர்பீட கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மஹா பிரத்தியங்கிரா ஹோமத்தில் சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

இந்தத் தலத்தில் வாழ்ந்த மகான் - மா.கந்தசாமி சித்தர். இவர் வடபாதி பூமாது விருத்தம், வடபாதி ஆகாஷ கண்ணியம்மன் விருத்தம் ஆகியவற்றை இந்தத் தலத்து அம்பாள் மீது பாடியருளி இருக்கிறார்.

அதுமட்டுமா? காஞ்சி மஹாபெரியவா மஹா கும்பாபிஷேகம் செய்து தந்த திருத்தலம் இது. துர்கைச் சித்தரும் இங்கு வந்து பூஜித்து வழிபட்டுள்ளார். மட்டுமன்றி, தினமும் நள்ளிரவு 12 மணிக்கு தேவலோகக் கன்னிகள் இங்கு வந்து பூமாத்தம்மனை பூஜிப்பதாக ஐதிகம். ஆகவே, இந்தத் தலத்தில் இரவு தங்கினால் நன்மை உண்டாகும். இங்கே அதர்வண பத்ரகாளி உக்ர பிரத்தியங் கிரா தேவியும் அருள் பாலிக்கிறாள்.

அற்புதமான இந்தத் தலத்தில் உலக நன்மைக்காக மாதம்தோறும் அமாவாசை அன்று இரவு மஹா பிரத்யங்கிரா யாகம் நடை பெறுகிறது. அவ்வகையில் வரும் வைகாசி மாதம் அமாவாசை தினத்தில் - 16.5.2026 அன்று இரவு 7:30 முதல் 9:30 வரை நடைபெறும் யாகத்தில் நம் வாசகர்களும் சங்கல்பப் பிரார்த்தனை செய்து வழிபடலாம்.

வாழ்வில் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிர்மறை சக்திகளையும் தீவினைகளையும் பொசுக்கும் அதீத சக்திமிக்க வழிபாடு மகா பிரத்தியங்கிரா ஹோமம். குறிப்பாக அமாவாசை தினங்களில் நிகழும் இந்த ஹோமத்தில் கலந்துகொண்டால், சகலவிதமான காரிய பலிதமும் உண்டாகும்.

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்னைகள், மனதை வாட்டும் குடும்ப கஷ்டங்கள் - பிரிவினைகள், தொழில் முட்டுக்கட்டைகள், தீவினைகளால் ஏற்படும் சங்கடங்கள் ஆகிய அனைத்தும் அன்னையின் அருளால் விலகும்.

மிக அற்புதமான புண்ணிய க்ஷேத்திரத்தில் நிகழவுள்ள சக்தி வாய்ந்த இந்த யாகத்தில் நீங்களும் சங்கல்பப் பிரார்த்தனை செய்து கலந்துகொள்ளலாம். மகா சக்தியாய் அருள்பாலிக்கும் அருள்மிகு பூமாத்தம்மனையும், அன்னை பிரத்தியங்கிராதேவியையும் மனதார வணங்கி அருள்பெற்றுச் சிறக்கலாம்.

வாராஹி ஹோமம்
ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு!

இந்த ஹோம வைபவத்துக்கு வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விசேஷ ஹோமங்கள்-வழிபாட்டு சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், முறைப்படி ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + விபூதி + குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங் கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்; வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

மஹா பிரத்தியங்கிரா ஹோமத்தில் சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

அட்சய திருதியை: வீட்டில் குபேரநிதி குவிந்திட நாம் செய்யவேண்டிய 6 வழிபாடுகள்... முழுமையான வழிகாட்டல்!

குபேரனுக்கு நிதிக்குவியல் கிடைத்த அட்சய திருதியை!அட்சய திருதியைக்குப் புராணச் சிறப்புகள் அதிகம் உண்டு. செல்வத்துக்கு அதிபதியான குபேரன், சங்கநிதி- பதுமநிதி எனும் ஐஸ்வரியக் கலசங்களைப் பெற்ற நாள் அட்சயதி... மேலும் பார்க்க