செய்திகள் :

'ஒன்னு நீ, இல்ல நான், நம்ம டீலிங் பக்காவா இருக்கணும்!'- திமுக, அதிமுக பற்றி விஜய் பேசிய வீடியோ வைரல்

post image

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார்.

ஆனால் அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படும் சூழல் உள்ளது.

இதனிடையே எதிரெதிர் துருவங்களான திமுக-வும் அதிமுக-வும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,
திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,

இந்நிலையில் திமுக - அதிமுக குறித்து விஜய் பிரசாரத்தில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசியிருக்கும் விஜய், " 'ஒன்னு நீ, இல்ல நான். நமக்குள்ள வேற யாரும் நடுவுல வந்திடக்கூடாது. நம்ம ரெண்டு பேரால மட்டும் தான் மக்களை ஈஸியா ஏமாத்த முடியும்.

இந்த விஜய் வந்தனால நமக்கு பொளப்பே போச்சு. மக்கள் விஜய்யை தான் நம்புறாங்க. நாம வெளியே அடிசுக்குற மாதிரி இருந்தாலும் உள்ள நம்ம டீலிங் பக்காவாக இருக்கணும்.

மக்களோட உணர்வுகளைப் பத்திலாம் கவலை இல்ல. மாத்தி மாத்தி ஆட்சிக்கு வந்தரலாம்'னு நினைக்கிறோம், அது நடக்காதுபோல இருக்கு.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அதனால SOP போட்டு நீ ஒரு பக்கம் தடுத்துரு. இன்னொரு பக்கம் அவன் மேல பழிப்போட்டு நானும் தடுத்து நிப்பாட்டிறேன். என்ன டீலிங் ஓகேவா' என்று இருகட்சிகளும் பேசிக்கொள்வது போல விஜய் பேசியிருக்கிறார்.

தற்போது திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதாக வெளியாகும் தகவல்களை அடுத்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தவெக: ``மக்கள் தீர்ப்புக்கு இழைக்கப்படும் அவமதிப்பு!" - நடிகை ஸ்ரேயா சரண் பதிவு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக-வால் ஆட்சி அமைக்க ம... மேலும் பார்க்க

கேரளம்: `பாஜக 3 இடங்களை வென்றிருப்பது கவலையளிக்கிறது' - தேர்தல் தோல்வி குறித்து பினராயி விஜயன்

கேரளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் 102 இடங்களில் வென்றது. சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி 35 இடங்களை பிடித்தது. பா.ஜ.க மூன்று இடங்களில் வென்றது. தேர்த... மேலும் பார்க்க

"மக்களின் தீர்ப்பே மகத்தானது; துரதிருஷ்டவஷமாக யாருக்கும் பெரும்பான்மை இல்லை.!"- எம்.பி கனிமொழி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார். ஆனால் அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 பேர... மேலும் பார்க்க

TVK: ``2 பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தைக் காக்க..." - எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக-வால் ஆட்சி அமைக்க ம... மேலும் பார்க்க

தவெக: ``திமுக - அதிமுக கூட்டணி அமைந்தால் பேரழிவு!” - நடிகர் விஷால் எச்சரிக்கை

தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சூழல்கள் நிலவி வரும் வேளையில், நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை... மேலும் பார்க்க

மும்பை: சுழற்றியடித்த புயல்; அவசரமாகத் தரையிறங்கிய ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர்

மும்பையில் நேற்று திடீரென சூறாவளிப் புயல் வீசியது. இதனால் கூரை வீடுகளில் தகரங்கள் அடித்து செல்லப்பட்டன. எங்கும் புழுதியாக இருந்தது. மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பை அருகில் உள்ள முர்பாட... மேலும் பார்க்க