செய்திகள் :

TVK: ``2 பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தைக் காக்க..." - எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக-வால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

இதற்கு ஆளுநர் தரப்பில் காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்புக் கொடுக்கும் வழிகாட்டல். எனவே, ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து விஜய் தரப்பு நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது.

விஜய்
விஜய்

மறுபுறம், ஒரு புதிய தேர்தலைத் தவிர்க்க திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் கசியவிடப்படுகிறது. ஆனால், தற்போதுவரை இரு கட்சிகளிடமிருந்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தவெக-வுடன் கூட்டணி இல்லை என்பதில் இபிஎஸ் உறுதியாக இருப்பதாக மட்டும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தவெக ஒரு தற்காப்பு யுக்தி முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, ஒருவேளை திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயன்றால், தவெக-வின் 108 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகத் தயாராக இருக்க வேண்டும் என தவெக தலைமை உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பாகி இருக்கிறது.

மாணிக்கம் தாக்கூர் எம்பி
மாணிக்கம் தாக்கூர் எம்பி

இந்த நிலையில்தான் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள். தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை. ஒரே ஒரு மனிதனை நிறுத்த. விஜய்யை. காங்கிரஸ் தெளிவாகப் பார்த்தது வெளியேறியது.

RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது. ``நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தைக் காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? Who is a betrayer?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

"பாஜக-வின் ஆசியோடு அதிமுக-விடம் திமுக பேசிக்கொண்டிருக்கிறது" - மாணிக்கம் தாகூர்

தவெக ஆட்சியமைக்க திமுக - அதிமுக இணைகிறது... தவெகவில் இணைந்து திமுகவிற்கு காங்கிரஸ் துரோகம் போன்ற பேச்சுகள்... விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் காங்கிரஸ் மீதான விமர்சனங்களுக்கு தன... மேலும் பார்க்க

'மக்களவையில் வேற இடம் கொடுங்க, காங்கிரஸுடன் எங்களால்.!'- மக்களவை சபாநாயருக்கு கனிமொழி கோரிக்கை

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

`உலக நாடுகளுக்கு 10% வரி சட்டத்திற்குப் புறம்பானது' - நீதிமன்ற தீர்ப்பு; மீண்டும் சறுக்கிய ட்ரம்ப்

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது பரஸ்பர வரியை அறிவித்தார். வரி அமலாகும் தேதியில் பல நீட்டிப்புகள் இருந்தாலும், ஆகஸ்ட் மாதம் பரஸ்பர வரி அமலுக்கு வந்தது. பரஸ்பர வரியை 'சட்ட... மேலும் பார்க்க

கோவில்பட்டி: கனிமொழிக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட்; கைகொடுத்த சமூக வாக்குகள் - திமுக சாதித்த பின்னணி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில், தி.மு.க-வும் த.வெ.க-வும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. இதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவிர 5 தொகுதிகளிலும் அ.... மேலும் பார்க்க

'ஆதரவு கோர விரும்பும் அரசியல் தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?'- சிந்தனை செல்வன்

விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க விசிகவிடம் ஆதரவு கோரியிருக்கும் நிலையில், வாட்ஸ்ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? என்று விசிக பொதுச்... மேலும் பார்க்க

தவெக: `விஜய் வளர விடக்கூடாது என்ற நோக்கில், திமுக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கக்கூடும்' - எஸ்.வி.சேகர்

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே ஆட்சி அமைக்கப்போவது யார்? என்றக் கேள்வியுடன் தேர்தல் முடிவு வெளியாகி 4 நாள்கள் ஆகியும் தொடர்கிறது. இந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்க... மேலும் பார்க்க