செய்திகள் :

'மக்களவையில் வேற இடம் கொடுங்க, காங்கிரஸுடன் எங்களால்.!'- மக்களவை சபாநாயருக்கு கனிமொழி கோரிக்கை

post image

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியது.

திமுக எம்.பி கனிமொழி
திமுக எம்.பி கனிமொழி

காங்கிரஸும் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்து 5 இடங்களை வழங்கிவிட்டது. மீதம் தேவைப்படும் 6 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக கோரிக்கை வைத்திருக்கிறது.

இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி மக்களவை சபாநாயருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், " மக்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (திமுக) சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கை அமைப்பில் தகுந்த மாற்றங்களைச் செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாறிவரும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டும், இந்திய தேசிய காங்கிரஸுடனான எங்களது கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாலும், அவையில் அவர்களுடன் இணைந்து தற்போதைய இருக்கை அமைப்பிலேயே எங்களது உறுப்பினர்கள் தொடர்ந்து அமர்ந்திருப்பது பொருத்தமாக இருக்காது எனத் தோன்றுகிறது.

திமுக எம்.பி கனிமொழி
திமுக எம்.பி கனிமொழி

எனவே, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்கள் இந்த உயரிய சபையில் தங்களது கடமைகளைச் சிறப்பாகச் செய்யும் வகையில், அவர்களுக்குத் தனித்தனியாக இருக்கைகளை ஒதுக்கீடு செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உங்கள் அலுவலகத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து தாங்கள் எடுக்கும் கனிவான பரிசீலனைக்கு நான் நன்றியுணர்வோடு இருப்பேன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

TVK: "தவெக மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேபி பதில்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடி வருகின்றது. இந்த நேரத்தில், ANI-க்குக் கொடுத்த பேட்டியில் மார்க்சி... மேலும் பார்க்க

திமுக - அதிமுக: 'ஜானகி அம்மையாருக்கு கலைஞர் அளித்த பதில்'- விளக்கும் மூத்த பத்திரிகையாளர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கடந்துள்ள நிலையில் அரசியலில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியா... மேலும் பார்க்க

'காத்திருப்பு; எமோஷன்; கூட்டல் கழித்தல் கணக்குகள்' - எப்படியிருக்கிறது பனையூர்?| Detailed Report

தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டியிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப் பிடிக்க திரைமறைவில் காய்களை நகர்த்தி பல தரப்பினரும் முயன்று கொண்டிருக்கின்றனர். இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட... மேலும் பார்க்க

"பாஜக-வின் ஆசியோடு அதிமுக-விடம் திமுக பேசிக்கொண்டிருக்கிறது" - மாணிக்கம் தாகூர்

தவெக ஆட்சியமைக்க திமுக - அதிமுக இணைகிறது... தவெகவில் இணைந்து திமுகவிற்கு காங்கிரஸ் துரோகம் போன்ற பேச்சுகள்... விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் காங்கிரஸ் மீதான விமர்சனங்களுக்கு தன... மேலும் பார்க்க

`உலக நாடுகளுக்கு 10% வரி சட்டத்திற்குப் புறம்பானது' - நீதிமன்ற தீர்ப்பு; மீண்டும் சறுக்கிய ட்ரம்ப்

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது பரஸ்பர வரியை அறிவித்தார். வரி அமலாகும் தேதியில் பல நீட்டிப்புகள் இருந்தாலும், ஆகஸ்ட் மாதம் பரஸ்பர வரி அமலுக்கு வந்தது. பரஸ்பர வரியை 'சட்ட... மேலும் பார்க்க

கோவில்பட்டி: கனிமொழிக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட்; கைகொடுத்த சமூக வாக்குகள் - திமுக சாதித்த பின்னணி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில், தி.மு.க-வும் த.வெ.க-வும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. இதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவிர 5 தொகுதிகளிலும் அ.... மேலும் பார்க்க