'மக்களவையில் வேற இடம் கொடுங்க, காங்கிரஸுடன் எங்களால்.!'- மக்களவை சபாநாயருக்கு கன...
தூத்துக்குடி: துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட பிரபல ரெளடி மரிய அந்தோணி யார்? - பகீர் பின்னணி
தூத்துக்குடி, மினிசகாயபுரத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி ஆக்னல். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சோனகன்விளை அருகிலுள்ள காணியாளன்புதூரில் உள்ள அவரது தோழி சந்தனமாரி என்பவரது வீட்டில் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை சுற்றி வளைத்து தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு பிடிக்க முயன்றபோது தன்னிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் ராஜபிரபுவை நோக்கி சுட்டுள்ளார்.

துப்பாக்கி குண்டு அவரது வயிற்றுப்பகுதியை உரசிச் சென்றுள்ளது. இதனையடுத்து எஸ்.ஐ., ராஜபிரபு தனது துப்பாக்கியால் சுட்டார். வலது மார்பிற்கும் வயிற்றுக்கும் இடையில் குண்டு பாய்ந்தது. இதில் காயமடைந்த மரிய அந்தோணி, மயங்கி விழுந்தார். அவரை மீட்ட போலீஸார் முதலில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த எஸ்.ஐ., ராஜபிரபுவும் சிகிச்சை பெற்று வருகிறார்.
மரிய அந்தோணி?
ரெளடி மரிய அந்தோணியின் பகீர் பின்னணி குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், “துப்பாக்கியால் சுடப்பட்ட ரெளடி மரிய அந்தோணி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் பட்டியலில் குறிப்பாக ‘சி’ ப்ளஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பூபால்ராயர்புரத்தில் வசித்து வந்த தன் மனைவி ரொஷிட்டா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. அத்துடன் 31 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் 12-ம் தேதி, தனது தம்பியுடன் சிலர் மோதியதால் தூத்துக்குடியில் உள்ள ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அந்த வழக்கில் தேடப்பட்ட போதுதான் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். கடந்த 2023-ம் ஆண்டு திருச்செந்தூர் அருகிலுள்ள ஆலந்தலையில் மதன்குமார் என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து கடற்கரையில் புதைத்து வைத்ததுடன், கொலை செய்யப்பட்ட மதன்குமாரின் ஈரலை எடுத்து தீயில் சுட்டு நர மாமிசம் சாப்பிட்ட கொடூரன். 3 முறை தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவன்.” என்றனர்.
















