செய்திகள் :

TVK: பாத்திரக்கடை உரிமையாளரைத் தாக்கி ரூ.68,000 பறிப்பு; தவெக நிர்வாகி மீது வழக்கு; ஒருவர் கைது

post image

கும்பகோணம், ஆடுதுறை கிருஷ்ணன் கோவில் தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன்(63). பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு பாத்திர கடையை மூடிவிட்டு கோடீஸ்வரன், அவரது மகன் பாலசுப்பிரமணியன்(38), கோடீஸ்வரனின் தம்பி மகன் பிரபாகரன்(32) ஆகியோர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது, சந்திரகாசன் என்பவர் தலைமையில் வந்த ஒரு கும்பல் மூன்று பேரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். கடையில் வியாபாரமான பணத்தை கோடீஸ்வரன் பையில் வைத்திருந்தார்.

இவர்களைத் தாக்கிய கும்பல் கோடீஸ்வரனிடமிருந்த ரூ.68,700 பறித்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

தாக்கப்பட்டவர்கள்
தாக்கப்பட்டவர்கள்

இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த கோடீஸ்வரன்,‌ பிரபாகரன், பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக கோடீஸ்வரன் அளித்த புகாரின் பேரில், திருவிடைமருதுார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், ஆடுதுறை சிவன் சன்னதியை தெருவைச் சேர்ந்த சந்திரகாசன் உள்ளிட்டோர் அடிக்கடி கோடீஸ்வரன் கடைக்குச் சென்று அவரிடம் மிரட்டி மாமூல் கேட்டு வந்துள்ளனர்.

இதேபோல் நேற்று இரவும் மாமூல் கேட்டதாகவும் அப்போது, ''உங்களுக்கு எப்போதும் இதே வேலையா இருக்கு, இது சரியில்லை'' என்று பேசிய கோடீஸ்வரன் மாமூல் தரவும் மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

திருட்டு
திருட்டு

இதனால் ஆத்திரமடைந்த சந்திரகாசன், தவெக ஆடுதுறை பேரூர் செயலாளர் எடிசன் உள்ளிட்ட சிலர் கோடீஸ்வரன் மற்றும் அவரது மகன்களைத் தாக்கி பணத்தைப் பறித்து சென்றுள்ளனர்.

இது சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் தெரியவந்தது. அதன் பேரில் சந்திரகாசனைக் கைது செய்த போலீஸார், எடிசன் உள்ளிட்ட சிலரைத் தேடி வருகின்றனர்.

சென்னை: `அவசரத் தேவை' எனக் கூறி மோசடி; வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சிக்கியது எப்படி?

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (31). இவர், சென்னை, பூந்தமல்லி பகுதியில் தங்கியிருந்து கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். 04.05.2026-ம் தேதி அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி பகுதியில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட பிரபல ரெளடி மரிய அந்தோணி யார்? - பகீர் பின்னணி

தூத்துக்குடி, மினிசகாயபுரத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி ஆக்னல். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பெட்ரோ... மேலும் பார்க்க

சென்னை: வீட்டில் தனியாக இருந்த நர்ஸுக்குப் பாலியல் தொல்லை; இளைஞர் கைது; என்ன நடந்தது?

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். இவர், தண்டையார்பேட்டை பகுதியில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். இவரின் ... மேலும் பார்க்க

சென்னை: குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்; தானே பிடித்து போலீஸில் ஒப்படைத்த இளம் பெண்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், சென்னை, கிண்டி பகுதியில் தோழிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 06.05.2026-ம் தேதி அதிகாலையில் அந்தப் பெண், வீட்டின... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு; தப்ப முயன்ற ரெளடியைச் சுட்டுப் பிடித்த போலீஸார்!

தூத்துக்குடி, மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ஒரு சரித்... மேலும் பார்க்க

மாஜி காதலியிடம் மன்னிப்புக் கேட்க சென்றபோது அடி, உதை; தப்பிக்க மாடியிலிருந்து குதித்த காதலன் பலி

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் வசிப்பவர் ஹிதேஷ் ரானா. இவரது மனைவி சஞ்சல் ரானா. இதில் சஞ்சல் ரானா திருமணத்திற்கு முன்பு ரஞ்சித் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் அந்த வால... மேலும் பார்க்க