செய்திகள் :

சென்னை: குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்; தானே பிடித்து போலீஸில் ஒப்படைத்த இளம் பெண்!

post image

கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், சென்னை, கிண்டி பகுதியில் தோழிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 06.05.2026-ம் தேதி அதிகாலையில் அந்தப் பெண், வீட்டின் பாத்ரூமிற்கு சென்றார். அப்போது ஜன்னல் வழியே ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுப்பதை ஏதேச்சையாக பார்த்த அந்தப் பெண், சத்தம் போடாமல் அமைதியாக வெளியில் வந்தார். பின்னர் அந்தப் பெண், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரை கையும் களவுமாகப் பிடித்ததோடு செல்போனை பறிக்க முயன்றார். அதனால் அந்த நபர், இளம்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

முல்லைநாதன்

அதனால் இளம்பெண், சத்தம் போட அருகில் குடியிருப்பவர்கள் அங்கு வந்து என்னவென்று விசாரித்தனர். உடனே வீடியோ எடுத்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் பாத்ரூம் ஜன்னலை ஆய்வு செய்தபோது அங்கு ஒரு செல்போன் இருந்தது. அதை எடுத்தவர்கள், கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து விவரத்தைக் கூறினர். இது தொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டது. உடனடியாக செல்போனை ஆய்வு செய்தபோது அதில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து செல்போனில் உள்ள நம்பர் அடிப்படையில் விசாரித்தபோது வீடியோ எடுத்தது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த முல்லைநாதன் (31) எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து முல்லைநாதன் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு முல்லைநாதனை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கிண்டி போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட முல்லைநாதன், புகாரளித்த பெண்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே நண்பர்களுடன் தங்கியிருக்கிறார். இவர் தங்கியிருந்த வீட்டின் அருகில்தான் பெண்கள் தங்கியிருந்த வீட்டின் பாத்ரூம் உள்ளது. அதனால், பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் முல்லைநாதன் வீடியோ எடுத்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று வீடியோ எடுத்தபோது அவர் சிக்கிக் கொண்டார். அவரிடமிருந்து இரண்டு செல்போன்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அந்த செல்போன்களை பைசர் க்ரைம் போலீஸாரிடம் ஆய்வுக்காக ஒப்படைத்திருக்கிறோம்" என்றனர்.

தூத்துக்குடி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு; தப்ப முயன்ற ரெளடியைச் சுட்டுப் பிடித்த போலீஸார்!

தூத்துக்குடி, மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ஒரு சரித்... மேலும் பார்க்க

மாஜி காதலியிடம் மன்னிப்புக் கேட்க சென்றபோது அடி, உதை; தப்பிக்க மாடியிலிருந்து குதித்த காதலன் பலி

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் வசிப்பவர் ஹிதேஷ் ரானா. இவரது மனைவி சஞ்சல் ரானா. இதில் சஞ்சல் ரானா திருமணத்திற்கு முன்பு ரஞ்சித் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் அந்த வால... மேலும் பார்க்க

கொல்கத்தா: பாஜக தலைவர் சுவந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை; வங்கத்தை உலுக்கிய நல்லிரவு கொலை

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபிறகு அங்கு பதட்டமான சூழ்நிலை இருந்து வருகிறது. மாநில முதல்வர் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார்.... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தவெக ஆதரவாளர் பாம்பு தினேஷ் கைது!

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற பாம்பு தினேஷ் என்பவர் சிறுமியுடன் அன்பாக பேசி பழகி வந... மேலும் பார்க்க

நெல்லை: கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு; தற்கொலை செய்த அக்கா... அக்காள் கணவரை கொலைசெய்த தம்பி!

நெல்லை மாவட்டம், களக்காடு அருகிலுள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் மனைவி ராஜலெட்சுமி. தம்பதியினர் நெல்லையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. ராஜலெட்சுமி, தனியார் ... மேலும் பார்க்க

9 ஆண்களைத் திருமணம் செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்; மகாராஷ்டிராவை உலுக்கிய 'கல்யாண மாஃபியா'!

மகாராஷ்டிரா கிராமங்களில் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைப்பதில்லை. அனைத்து பெண் வீட்டுக்காரர்களும் தங்களது மகள் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகன் அரசு வேலை அல்லது நக... மேலும் பார்க்க