செய்திகள் :

`மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது; நிலையான ஆட்சி என்பதே...' - திமுக எம்.எல்.ஏ-க்கள் தீர்மானம்!

post image

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கும் நிலையில், திமுக தோல்வியைத் தழுவியது. இதற்கிடையில், 108 இடங்களில் வென்ற தவெக, மீதமிருக்கும் இடங்களுக்கு திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது. அதன் அடிப்படையில், காங்கிரஸ் தவெக ஆட்சி அமைக்க முழு ஆதரவையும் வழங்கியிருக்கிறது. விசிக, இடதுசாரி கட்சிகள் ஆதரவு குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கியமான 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதில்...

திமுக நிர்வாகிகள் கூட்டம்
திமுக நிர்வாகிகள் கூட்டம்

1. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் - இந்த வெற்றிக்காகத் தோளோடு தோள் நின்று பாடுபட்ட தோழமை இயக்கங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. சட்டமன்றத் தேர்தல் களத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உழைப்பு மலையளவு ஆகும். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் தனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும். இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். அதேவேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு உறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் ஆகும்.

திமுக நிர்வாகிகள் கூட்டம்
திமுக நிர்வாகிகள் கூட்டம்

இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

4.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது ஆகும். காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை.

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது. தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது. அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி!

திமுக நிர்வாகிகள் கூட்டம்
திமுக நிர்வாகிகள் கூட்டம்

அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட நம் கழகத் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.

பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கட்சி அலுவலகத்தில் பெண் MLA-வை கட்டியணைக்க முயன்ற கேரள காங்கிரஸ் நிர்வாகி; அநாகரிக செயலால் சர்ச்சை!

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) அலுவலகத்தில் நடந்த சங்கடமான நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் கேரள மாநில சட்டமன்றத் தேர்தல்... மேலும் பார்க்க

தவெக: ``ஆளுநரின் நடவடிக்கை மாநில உரிமைகளுக்கு எதிரானது; இதைச் செய்யலாம்..!"- துரை வைகோ சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளில் தவெக வெற்றிபெறவில்லை. அதனால் தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் தன் முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் தவெக தலை... மேலும் பார்க்க

விசிலடிக்காத 8 மாவட்டங்கள் `டு' 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை செல்லும் கட்சி - 2026 தேர்தல் ஹைலைட்ஸ்

முதல்வர் வேட்பாளர்கள்... ஷாக், சர்ப்ரைஸ்!2026 சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக நான்கு பேர் போட்டியிட்டனர். தமிழக வெற்றிக் கழகத்த்தின் விஜய்க்கு இது முதல் தேர்தல். சந்தித்த முதல் தேர்தலிலே... மேலும் பார்க்க

தவெக: ஆளுநருக்கு எதிராகவும், பாஜக-வுக்கு எதிராகவும் போராட்டம்! - தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளில் தவெக வெற்றிபெறவில்லை. அதனால் தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் தன் முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் தவெக தலை... மேலும் பார்க்க

தவெக: `ஆதரவு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் சிக்கல்தான்' - அதிமுக-வில் என்னதான் நடக்கிறது?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார். ஆனால் அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 பேர... மேலும் பார்க்க

TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" - சி.டி.ஆர். நிர்மல் குமார்

திமுக, அதிமுகவை விட, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நேற்றைய தினம், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித... மேலும் பார்க்க