செய்திகள் :

நெல்லை: கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு; தற்கொலை செய்த அக்கா... அக்காள் கணவரை கொலைசெய்த தம்பி!

post image

நெல்லை மாவட்டம், களக்காடு அருகிலுள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் மனைவி ராஜலெட்சுமி. தம்பதியினர் நெல்லையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. ராஜலெட்சுமி, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவன் – மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த ராஜலெட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

களக்காடு காவல் நிலையம்

ராஜலெட்சுமியின் இறப்புக்கு அவர் கணவர்தான் காரணம் என நினைத்த உறவினர்கள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அக்கம் பக்கத்தினர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து  கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடம்போடு வாழ்வு வீட்டிற்குச் சென்றார் வழக்கறிஞர். அங்கு ஒரே காரில் வந்த 3 பேர் வழக்கறிஞரின் வீட்டிற்குள் சென்று, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதுகுறித்து களக்காடு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், “திருமணத்தின்போது 70 சவரன் தங்கநகை, சீர்வரிச்சைப் பொருள்கள், 5 லட்சம் ரொக்கப் பணம் கொடுத்தும், மேலும் பணம் கேட்டு வழக்கறிஞர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. கணவன் – மனைவி இடையே நடந்து வந்த குடும்பத் தகராறு குறித்து ராஜலெட்சுமி, தன் சகோதரர் அருணாச்சலராஜாவிடம் கூறியுள்ளார்.

களக்காடு காவல் நிலையம்

இந்த நிலையில்தான், ராஜலெட்சுமி தற்கொலை செய்து கொண்டார். தனது அக்காளின் இறப்பிற்கு அவர் கணவர்தான் காரணம் என நினைத்த அருணாச்சலராஜா, தனது நண்பர் ராம் உள்ளிட்ட சிலருடன் கடம்போடுவாழ்விலுள்ள வீட்டிற்குச் சென்று அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்” எனத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சலராஜா மற்றும் ராம் ஆகிய இருவரைக் கைதுசெய்த போலீஸார் மற்றவர்களை தேடி வருகிறார்கள்.  

சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தவெக ஆதரவாளர் பாம்பு தினேஷ் கைது!

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற பாம்பு தினேஷ் என்பவர் சிறுமியுடன் அன்பாக பேசி பழகி வந... மேலும் பார்க்க

9 ஆண்களைத் திருமணம் செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்; மகாராஷ்டிராவை உலுக்கிய 'கல்யாண மாஃபியா'!

மகாராஷ்டிரா கிராமங்களில் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைப்பதில்லை. அனைத்து பெண் வீட்டுக்காரர்களும் தங்களது மகள் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகன் அரசு வேலை அல்லது நக... மேலும் பார்க்க

டெல்லி: மணிக்கணக்கில் மனைவியுடன் சண்டை; இளம் நீதிபதி தூக்குப்போட்டு தற்கொலை; என்ன நடந்தது?

டெல்லி தெற்கு பகுதியில் உள்ள கிரீன் பார்க் வீட்டில் அமன்குமார் சர்மா(30) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் வடகிழக்கு டெல்லியில் உள்ள கர்கர்தூமா கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். சர்... மேலும் பார்க்க

கிரிக்கெட் மட்டை, கையுறையில் மறைத்து ரூ.1,700 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்; மடக்கிய NCB!

உலகம் முழுவதும் இருந்து மும்பைக்குள் அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. மும்பையில் கலம்பொலி மற்றும் பிவண்டி இடையே வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள், குடோன்களில் பதுக்கி வைக்... மேலும் பார்க்க

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கல்லால் அடித்துக் கொலை... சாணத்தில் உடலை புதைத்த 65 வயது முதியவர்!

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள நஷ்வராபூர் என்ற கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டிற்கு 4 வயது சிறுமி ஒருவர் வந்திருந்தாள். விடுமுறைக்காக வந்திருந்த அச்சிறுமி வெளியில் விளையாடச் சென்ற போது... மேலும் பார்க்க

அண்ணனையும் தாயையும் கொன்று சாணக் குழியில் புதைத்த கொடூரம்; ஆட்டோ டிரைவர் சொன்ன தகவலால் சிக்கிய தம்பி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பச்சடி கிராமத்தில், ரெஜி (54), அவரது தம்பி சஜி (43) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய் மேரி (71) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக வீட்டு வேலைகளையும், விளைபொரு... மேலும் பார்க்க