செய்திகள் :

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

post image

'திமுக எதிர்க்கட்சிதான்!'

திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.

திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!

திமுக - அதிமுக கூட்டணி என தகவல் பரவி வரும் நிலையில், 'All is Fair in எங்க அரசியல்' என ட்வீட் செய்திருக்கிறார் முன்னாள் எம். பி. செந்தில்குமார் .

'ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்!'

புதுச்சேரி:

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் பலர் புதுச்சேரி பூராணாங்குப்பம் பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு தரப்பினரும், தரக்கூடாது என அதிமுகவில் மற்றொரு தரப்பினரும் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசியிருந்தனர்.

இந்த சூழலில், அதிமுகவின் பல எம்.எல்.ஏக்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து தங்க வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'பரபர சூழலில் தமிழக அரசியல்!'

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமைக் கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த நிலையில், திடீரென அவருக்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் அதிமுக எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் ஒரே ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். திமுக மற்றும் அதிமுக கூட்டணி சேர்ந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோருவார்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இதனால் தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க

காங்கிரஸ்: 'பச்சைத் துரோகம்; சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி' - டி.ஆர்.பாலு காட்டம்!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. இந்த விவகாரம் திமுக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு, கூட்டணி பலத்தில் 5 தொ... மேலும் பார்க்க

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் மம்தா: பதவியேற்க தயாராகும் பாஜக - பதற்றத்தில் மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. ஆனால் இத்தேர்தலில் வெறும் 80 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ள மம்தா ... மேலும் பார்க்க

`தவெக-வுக்கு அதிமுக ஆதரவா..?' - நிர்வாகிகள் ஆலோசனைக்குப் பிறகு கே.பி.முனுசாமி சொன்ன முக்கிய தகவல்!

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளிடம் பேசி வருகிறது. அதன் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தவெக தலைவர் விஜய்யுடன் பேச்சுவார்த்... மேலும் பார்க்க