செய்திகள் :

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கல்லால் அடித்துக் கொலை... சாணத்தில் உடலை புதைத்த 65 வயது முதியவர்!

post image

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள நஷ்வராபூர் என்ற கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டிற்கு 4 வயது சிறுமி ஒருவர் வந்திருந்தாள். விடுமுறைக்காக வந்திருந்த அச்சிறுமி வெளியில் விளையாடச் சென்ற போது காணாமல் போனார். இதனால் சிறுமியின் உறவினர்கள் அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்துவிட்டு கிடைக்காத நிலையில், இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் விரைந்து வந்து சிறுமியை தேட ஆரம்பித்தனர். அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அருகில் வசிக்கும் 65 வயது முதியவர் அச்சிறுமியை அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து அந்த முதியவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அருகில் உள்ள மாட்டு கொட்டகைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சித்திரிப்புப் படம்

அங்கு வைத்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவளை கல்லால் அடித்துக் கொலைசெய்துள்ளார். பின்னர் உடலை அங்கு இருந்த மாட்டுச் சாணக் குவியலுக்குள் புதைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார். மாட்டுச் சாணத்திற்குள் புதைக்கப்பட்டு இருந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கேள்விப்பட்டதும் உள்ளூர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் கடுமையாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு இச்சம்பவத்தைக் கண்டித்து நஷ்ராபூரில் உள்ளூர் பந்த் அனுசரிக்கப்பட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இவ்வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் சிறுமியின் உறவினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

கிரிக்கெட் மட்டை, கையுறையில் மறைத்து ரூ.1,700 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்; மடக்கிய NCB!

உலகம் முழுவதும் இருந்து மும்பைக்குள் அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. மும்பையில் கலம்பொலி மற்றும் பிவண்டி இடையே வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள், குடோன்களில் பதுக்கி வைக்... மேலும் பார்க்க

அண்ணனையும் தாயையும் கொன்று சாணக் குழியில் புதைத்த கொடூரம்; ஆட்டோ டிரைவர் சொன்ன தகவலால் சிக்கிய தம்பி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பச்சடி கிராமத்தில், ரெஜி (54), அவரது தம்பி சஜி (43) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய் மேரி (71) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக வீட்டு வேலைகளையும், விளைபொரு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கடலில் குதித்து கேரள சகோதரிகள் தற்கொலை; திருமணம் ஆகாதது காரணமா? போலீஸ் விசாரணை!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் பிலிப். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு எலிசபெத்பிலிப், ஆனிபிலிப் (35), மீராபிலிப் (32) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இதில் எலிசபெத்பிலிப் திருமணமாகி லண்டனில் வசித்து... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - விலை உயர்ந்த பைக்கால் சிக்கிய இளைஞர்கள்

சென்னை, வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் வணிக வளாகத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 25.04.2026-ம் தேதி இரவு, வேலை முடந்து வீட்டிற்கு செல்ல வேளச்சேரி, நேரு நக... மேலும் பார்க்க

புதுச்சேரி: சாக்லேட் ஆசை காட்டி 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தீர்ப்பும் வழக்கின் பின்னணியும்

வழக்கின் பின்னணிபுதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த 2024 மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை ... மேலும் பார்க்க

தெருநாய்களைப் பிடித்துச்சென்று ரத்தத்தை உறிஞ்சி விற்பனை; கால்நடை மருத்துவர் மீது பகீர் புகார்

பொதுமக்கள் நாய்கள் உட்பட வளர்ப்புப் பிராணிகள் மீது அதிக அன்பு மற்றும் பாசம் வைத்திருப்பார்கள். வளர்ப்புப் பிராணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ அதன் உரிமையாளர்கள் பெரிய அளவில் மனவ... மேலும் பார்க்க