செய்திகள் :

கடனுக்கு 2-3 வங்கிகளில் ஏறி, இறங்குவது தவறே இல்லை! ஆனா, 'இதை' பாத்துக்கோங்க! | பணம் வளர்ப்போம்

post image

தேவை என்றதுமே கடனை 'டக்'கென வாங்கிவிடக் கூடாது. கடனை வாங்குவதற்கு சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.

அப்படி என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை பட்டியலிடுகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வரதன்.

"இந்த வங்கியில் எனக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது என்பதற்காக மட்டும் ஒரு வங்கியில் கண்ணை மூடிக்கொண்டு கடன் வாங்கிவிடக் கூடாது.

கடன் வாங்குவதற்கு முன்பு, இரண்டு - மூன்று வங்கிகளில் படி ஏறி, இறங்குவது தவறில்லை. அப்போது தான் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி... எதில் குறைவான வட்டி என்பது தெரியும்.

 விஷ்ணு வரதன்
விஷ்ணு வரதன்

வட்டி விகிதத்தைப் பார்த்து கடன் வாங்குவது நல்லது. ஓரிரு நாள்களுக்கு வங்கிக்கு அலைவதைப் பெரிதாக கருதினால், அடுத்த 4 - 5 ஆண்டுகளுக்கு நீங்கள் அதிக வட்டியைக் கூட கட்ட நேரிடலாம்.

மாதா மாதம் சரியாக கட்டக் கூடிய தொகையை இ.எம்.ஐயாக தேர்ந்தெடுங்கள். முடிந்தளவுக்கு கடன் காலத்தைக் குறைந்த ஆண்டுகளையே தேர்ந்தெடுங்கள்.

பிராசஸிங் ஃபீஸ், லேட் பேமெண்ட் ஃபீஸ், அபராதம் போன்றவற்றை முன்பே நன்றாக விசாரித்துக்கொள்ளுங்கள்.

அடமானக் கடன் வாங்குகிறீர்கள் என்றால், உங்களுடைய சொத்து ஜப்தி ஆகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

எவற்றிற்கெல்லாம் கடன் வாங்கவே கூடாது?

ஷாப்பிங், ஆடம்பர செலவுகள்,

விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள்,

ஆடம்பர கொண்டாட்டங்கள்,

லைஃப்ஸ்டைல் அப்கிரேட்கள்.

இவற்றிற்கு ஏன் கடன் வாங்கக் கூடாது என்று சொல்கிறோம் என்றால், இந்தச் செலவுகள் எந்த வருமானத்தையும் தராது. ஆனால், நீண்ட கால இ.எம்.ஐ மட்டும் பரிசாக வழங்கும்.

கடன் வாங்குவதில் செய்யக் கூடாத மிக முக்கிய தவறு...

ஒரு கடனை அடைக்க இன்னொரு கடனை வாங்குவது ஆகும். இது மீண்டும் மீண்டும் கடனிலேயே தான் உங்களை தள்ளுமே தவிர, கடனில் இருந்து மீள வழி செய்யாது.

கடன்
கடன்

கடனை முன்னரே அடைக்கலாமா?

கடனை சீக்கிரமே அடைப்பது ஒரு விதத்தில் நல்லது தான்.

இதன் மூலம், முதலில், சீக்கிரம் கடனில் இருந்து மீளலாம். நிதி சுமை குறையும். தேவையில்லாத மன அழுத்தம் இருக்காது.

முன்னரே கடனைக் கட்டுவதற்கு அபராதம் ஏதேனும் இருக்கிறதா என்பதை பாருங்கள். அப்படி இருந்தால், அபராதம் சமாளிக்கக் கூடியதா என்பதை பாருங்கள்.

'ஓகே' என்று கடனை முழுமையாக அடைத்துவிடுங்கள்.

இல்லையென்றால், கிடைத்த தொகையை முதலீடு செய்யுங்கள்.

கடன் விஷயத்தில் கடன் வாங்குவது முதல் அதை அடைப்பது வரை பக்காவாக பிளான் போட்டு செய்தால், நமக்கு ஏற்றம் தான். இல்லையேல், அது வலை.

மொத்தத்தில், கடன் நல்லதா... கெட்டதா என்பது, அதை நாம் கையாள்வதைப் பொறுத்தே அமையும்.

₹1 கோடி நிதி + ₹30,000 மாத பென்ஷன்: மிடில் கிளாஸ் மக்களுக்கான நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கான ரகசியம்

உங்கள் மனசாட்சியிடம் ஒரு கேள்வி:இன்று காலை எழுந்து, அடித்துப் பிடித்து அலுவலகம் ஓடி, மாலை வீடு திரும்பி... இப்படி ஒரு இயந்திரம் போல உழைத்துக்கொண்டிருக்கிறீர்களே, இது எதுவரை? இன்னும் 15 அல்லது 20 வருடங... மேலும் பார்க்க

Personal Loan உங்களுக்கு விரிக்கப்படும் வலையா? இந்த வலையை வரமாக மாற்றுவது எப்படி? | பணம் வளர்ப்போம்

பெர்சனல் லோன் - இன்றைய காலகட்டத்தில் மிக எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கும் கடன் வகைகளில் ஒன்று. அது தான் எளிதாக கிடைக்கிறதே என்று பலரும் அதிக பெர்சனல் லோன்களை வாங்கி மாட்டிக்கொள்கின்றனர். இதனால், பெர... மேலும் பார்க்க

பெர்சனல் லோன், தங்க நகைக் கடன், அடமானக் கடன், கிரெடிட் கார்டு - எதற்கு First Rank? | பணம் வளர்ப்போம்

கோல்டு லோன், பெர்சனல் லோன், கிரெடிட் கார்டு என ஏகப்பட்ட கடன் வகைகள் இன்றைய உலகத்தில் உள்ளன. ஆனால், எந்தத் தேவைகளுக்கு, எந்தக் கடன் வாங்கலாம் என்பதில் தான் கடன் கட்டுப்பாடு ரகசியமே அடங்கியிருக்கிறது. அ... மேலும் பார்க்க

'இந்த' மூன்று தேவைகளா? தாராளமாக கடன் வாங்குங்கள்; இல்லையென்றால் வேண்டவே வேண்டாம் | பணம் வளர்ப்போம்

எதுவாக இருந்தாலும் நேரம், காலம் பார்த்து தான் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இது கடன் விஷயத்திற்கும் பொருந்தும். ஆம்... கடன் விஷயத்தில் நேரம், காலத்தோடு காரணத்தையும் சேர்த்துக்கொள்ள... மேலும் பார்க்க

சிம்லா முதல் சுவிட்சர்லாந்து வரை: உலகம் சுற்ற ஆசையா? முழு நிதித் திட்டமிடல் உள்ளே!

அதிகாலையில் கண் விழித்ததும் சமூக வலைதளங்களைத் திறக்கிறீர்கள். யாரோ ஒருவர் பனிபடர்ந்த மலையில் உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறார். இன்னொருவர் ஏதோ ஒரு தீவின் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை ரசித்துக் கொண்டிர... மேலும் பார்க்க

Personal Finance: இன்றைய சந்தோஷத்தையும் நாளைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தணும்! என்ன செய்யணும்?

இன்றைய இளைஞர்களைப் பற்றி பேசும்போது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால்: “சம்பாதிக்கிறார்கள்… ஆனால் சேமிக்கவே மாட்டார்கள்!”இந்தக் கருத்து ஒரு அளவிற்கு உண்மையைக் கொண்டிருந்தாலும், அதனை முழும... மேலும் பார்க்க