செய்திகள் :

சிம்லா முதல் சுவிட்சர்லாந்து வரை: உலகம் சுற்ற ஆசையா? முழு நிதித் திட்டமிடல் உள்ளே!

post image

அதிகாலையில் கண் விழித்ததும் சமூக வலைதளங்களைத் திறக்கிறீர்கள். யாரோ ஒருவர் பனிபடர்ந்த மலையில் உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறார். இன்னொருவர் ஏதோ ஒரு தீவின் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை ரசித்துக் கொண்டிருக்கிறார். மனதிற்குள் சட்டென ஒரு ஏக்கம் எழும்...

"நாமும் ஒருமுறையாவது இப்படிப் பயணம் செய்யக் கூடாதா?" என்று. ஆனால், அடுத்த விநாடியே, "இதற்கெல்லாம் எங்கே பணம் இருக்கிறது?" என்ற எண்ணமும் தோன்றும்.

உண்மையைச் சொல்லப்போனால், உலகைச் சுற்ற பணம் ஒரு தடையே அல்ல. முறையான நிதித் திட்டமிடல் இருந்தால், சராசரி இந்தியர், அதிலும் குறிப்பாக இருவர் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டும் தம்பதியரால் (Dual Income Couple) மிக எளிதாக உலகை வலம் வர முடியும்! சரி, சுற்றுலாப் பயணங்களுக்கு எவ்வளவு செலவாகும்? எப்படிச் சேமிப்பது? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

Gabon

உள்ளூர் சுற்றுலா: எங்கு செல்லலாம்? எவ்வளவு செலவாகும்?

உலகம் சுற்றுவதற்கு முன்பாக, நம் நாட்டிலேயே நாம் பார்க்காத அழகிய இடங்கள் கொட்டிக்கிடக்கின்றன. கேரளா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் அல்லது வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு வாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு நடுத்தரப் பயணிக்கு ஒரு நாளைக்கு உணவு, போக்குவரத்து மற்றும் தங்குமிடம் சேர்த்து தோராயமாக ரூ.1,200 முதல் ரூ.3,800 வரை செலவாகும். ஒரு தம்பதிக்கு மொத்தமாக ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை தேவைப்படும்.

Switzerland

உலகச் சுற்றுலா: கனவை நனவாக்க எவ்வளவு பணம் தேவை?

விமானம் ஏறி வெளிநாடு செல்வது இன்று எட்டாக்கனியல்ல. தாய்லாந்து, வியட்நாம், இலங்கை அல்லது மலேசியா போன்ற அண்டை நாடுகளுக்கு 5 முதல் 7 நாட்கள் பயணம் செல்ல, ஒரு தம்பதிக்கு தோராயமாக ரூ.1,00,000 முதல் ரூ.1,50,000 வரை மட்டுமே செலவாகும். ஐரோப்பிய நாடுகளுக்கோ அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கோ செல்ல திட்டமிட்டால், அது ரூ.4,00,000 முதல் ரூ.5,00,000 வரை ஆகலாம்.

savings - சேமிப்பு

எப்படிச் சேர்ப்பது? இதோ உங்களுக்கான முதலீட்டு சூத்திரம்!

கணவன் மனைவி இருவரும் வருமானம் ஈட்டும் குடும்பத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையைப் பயணத்திற்காகவே (Travel Fund) ஒதுக்க வேண்டும். மாதச் செலவுகள் போக, மீதமுள்ள தொகையில் ஒரு பகுதியைத் தொடர் முதலீட்டுத் திட்டங்களில் (SIP) முதலீடு செய்யத் தொடங்குங்கள். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான 'முதலீட்டு விதி' ஒன்று உள்ளது.

குறுகிய காலம் (1 முதல் 3 வருடங்கள் வரை): உங்கள் பயணம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் என்றால், ரிஸ்க் எடுக்கக் கூடாது. பணத்தைப் பாதுகாப்பாக வைக்கும் 'ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்' (Arbitrage Fund) அல்லது 'டெட் ஃபண்ட்' (Debt Fund) திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள். (எதிர்பார்க்கும் லாபம்: சுமார் 6% - 7%).

நடுத்தரக் காலம் (3 முதல் 5 வருடங்கள் வரை): 3 முதல் 5 ஆண்டுகளில் வெளிநாடு செல்லத் திட்டமிட்டால், பணவீக்கத்தைத் தாண்டிய மிதமான லாபத்திற்கு 'பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்' (Balanced Advantage Fund) அல்லது 'கன்சர்வேட்டிவ் ஹைப்ரிட் ஃபண்ட்' (Conservative Hybrid Fund) திட்டங்கள் சரியான தேர்வு. (எதிர்பார்க்கும் லாபம்: சுமார் 8% - 10%).

நீண்ட காலம் (5 வருடங்களுக்கு மேல்): ஐரோப்பா போன்ற செலவு பிடிக்கும் பயணங்களை 5 ஆண்டுகளுக்குப் பிறகு திட்டமிட்டால் மட்டுமே, நீண்ட கால அடிப்படையில் அதிக லாபம் தரக்கூடிய 'ஃப்ளெக்ஸி கேப்' (Flexi Cap) போன்ற ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். (எதிர்பார்க்கும் லாபம்: சுமார் 10% - 12%).

உதாரணக் கணக்கீடு:

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு தென்கிழக்கு ஆசியப் பயணம் (உதாரணமாக: வியட்நாம்) செல்ல முடிவு செய்கிறீர்கள். மாதம் ரூ.6,000 வீதம் எந்த ரிஸ்க்கும் இல்லாத 'டெட் ஃபண்ட்' திட்டங்களில் முதலீடு செய்தால் (சுமார் 7% வருமானம் என வைத்துக்கொண்டாலும்), இரண்டு ஆண்டுகள் முடிவில் உங்களிடம் சுமார் ரூ.1,55,000 பாதுகாப்பாகச் சேர்ந்திருக்கும். இதைக் கொண்டு எந்தவிதக் கடன் சுமையுமின்றி வெற்றிகரமாகப் பயணம் செய்து திரும்பலாம்.

Travel Contest

செலவைக் குறைப்பதற்கான 5 ஸ்மார்ட் உத்திகள்!

நாணய மதிப்பு உத்தி (Currency Arbitrage): இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக உள்ள நாடுகளைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம். உதாரணமாக, வியட்நாமில் இந்திய ரூபாய் ஒன்றிற்கு 280 முதல் 290 'டாங்' (Dong) வரை கிடைக்கிறது. இதனால் குறைந்த செலவில் ராஜ உபசரிப்பைப் பெறலாம்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்: பயண நாளுக்கு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பே விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், பல ஆயிரங்களை மிச்சப்படுத்தலாம்.

பருவமில்லாக் காலப் பயணம் (Shoulder Season): பண்டிகைக் காலங்களில் செல்வதைத் தவிர்த்து, சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் மாதங்களில் சென்றால், விமானக் கட்டணமும் விடுதிக் கட்டணமும் 30 சதவிகிதம் வரை மலிவாகக் கிடைக்கும்.

இலவச விசா நாடுகள்: இந்தியர்களுக்கு விசா இல்லாமலோ அல்லது வந்தவுடன் விசா (Visa on Arrival) வழங்கும் நாடுகளையோ தேர்ந்தெடுப்பது ஆரம்பக்கட்டச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும்.

தங்கும் விடுதி மாற்று வழிகள்: விலையுயர்ந்த ஆடம்பர விடுதிகளுக்குப் பதிலாக, 'ஹோம்ஸ்டே' (Homestay) அல்லது நம்பகமான 'ஹாஸ்டல்' (Hostel) வசதிகளைப் பயன்படுத்தினால் 40 சதவிகிதம் வரை தங்கும் செலவு குறையும்.

பயணம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது வாழ்க்கையை விரிவுபடுத்தும் ஓர் அற்புதமான அனுபவம். இந்தக் கனவை நனவாக்க, உங்கள் முதலீட்டுப் பயணத்தை எப்படித் தொடங்குவது? இருவர் வேலைக்குச் செல்லும் தம்பதியர் தங்கள் வருமானத்தை எப்படிச் சரியாக நிர்வகித்துப் பயண நிதியை உருவாக்குவது?

Labham Tour and Travel Workshop April 29 2026

இதைப்பற்றி விரிவாகப் பேசவும், உங்களுக்கான தெளிவான வழிகாட்டலை வழங்கவும் வருகிறது டீம் லாபம்!

உலகம் சுற்றத் தயாரா? - சுற்றுலா நிதித் திட்டமிடல்

இரட்டைச் சம்பளம் வாங்கும் தம்பதியர்க்கான வழிகாட்டல்

உலக சுற்றுலா / உள்ளூர் சுற்றுலா - எங்கு செல்லலாம்? எவ்வளவு செலவாகும்? எப்படி சேர்க்கலாம்?

நிகழ்ச்சி நாள்: ஏப்ரல் 29, 2026, புதன்

நேரம்: மாலை 07 மணி - இந்திய நேரம்

நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. முன்பதிவு கட்டாயம். முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-apr29-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr29_2026

Personal Finance: இன்றைய சந்தோஷத்தையும் நாளைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தணும்! என்ன செய்யணும்?

இன்றைய இளைஞர்களைப் பற்றி பேசும்போது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால்: “சம்பாதிக்கிறார்கள்… ஆனால் சேமிக்கவே மாட்டார்கள்!”இந்தக் கருத்து ஒரு அளவிற்கு உண்மையைக் கொண்டிருந்தாலும், அதனை முழும... மேலும் பார்க்க

உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? - 'இந்த' கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இ... மேலும் பார்க்க

பணம் விஷயத்தில் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக பெற்றோர் இருப்பது எப்படி? | பணம் வளர்ப்போம்

குழந்தைகளின் எதிர்காலத்தின் நிதி திட்டமிடலை நாம் மட்டும் சரியாகச் செய்துவிட்டால் போதாது. எதிர்காலத்தைச் சிக்கல் இல்லாமல் கழிக்க நிதி திட்டமிடலை அவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எ... மேலும் பார்க்க

NRI Corner 11: வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களே, உஷார்! நீங்கள் சம்பாதிக்கும் பணம் இழப்பதற்கல்ல!

வளைகுடா நாட்டில் வசிக்கும் தமிழர் ஒருவருடன் சில நாள்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். ''கடந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களில் பணத்தைப் போட்டுவிட்டேன். ஆனால், அத்தனையும் தவறானவை என்று இப்போதுதான... மேலும் பார்க்க

Labham 4: தங்கத்தில் கிடைத்த லாபத்தை பங்கில் கிடைத்த நஷ்டத்துடன் சரிசெய்து வரியை மிச்சப்படுத்தலாமா?

கடந்த ஆண்டில் தங்கத்தில் பெரும் பணத்தை முதலீடு செய்தவர்கள் ஏறக்குறைய 75% வரை லாபம் பார்த்தார்கள். அதாவது, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருவர் தங்க இ.டி.எஃப் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திரு... மேலும் பார்க்க

'சிறப்புக் குழந்தை'! எங்களுக்குப் பின் யாரு பாத்துப்பா? கேள்விக்கு பதில்| பணம் வளர்ப்போம்

'நமக்குப் பின் யார்?' என்கிற கேள்வி, சிறப்புக் குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து பெற்றோர்களுக்குமே உண்டு. அந்தக் குழந்தைகளுக்கான நிதி பாதுகாப்பு திட்டமிடலைப் பற்றி கூறுகிறார் நிதி ஆலோசகர் முனைவர் A.V ... மேலும் பார்க்க