செய்திகள் :

சென்னை: தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை - வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

post image

சென்னை, தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள வீட்டில் 27 வயதுடைய பெண் ஒருவர் அவரின் அக்காவுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 25.04.2026-ம் தேதி இரவு, அவரது அக்கா உறவினரை பார்ப்பதற்காக வெளியில் சென்று விட்டார். அதனால் 27 வயதுடைய இளம்பெண் தனியாக வீட்டிலிருந்தார். அன்றைய தினம் இரவு வீட்டை உள் தாழ்ப்பாள் போடாமல் வீட்டில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வீட்டு உரிமையாளரின் மகன் ஆனந்த கிருஷ்ணன் என்பவர், தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார்.

ஆனந்த கிருஷ்ணன்

அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், சத்தம் போட்டிருக்கிறார். உடனே ஆனந்த கிருஷ்ணன், அந்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தனக்கு நடந்த கொடுமை குறித்து இளம்பெண், தன்னுடைய அக்காளிடம் கூறி கதறி அழுதார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆனந்த கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஆனந்த கிருஷ்ணன், தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருவது விசாரணையில் தெரியவந்தது.

பாவூர்சத்திரம்: போதையில் இளைஞர் அடித்து கொலை; `101'க்கு கால் செய்து நாடகம்- நண்பர் சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரவீன் (வயது 26), இவரும் அதே ஊரில் வடக்குத் தெரு லிவிங்ஸ்டன் மகன் முகிலன் (எ) வசந்த் (20) இருவரும் சிறு... மேலும் பார்க்க

திருச்சி: பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை! - 5 பேரை தேடும் போலீஸ்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த உதய் (வயது: 36) என்பவர் திருச்சியில் நகை மதிப்பிடும் பணியைச் செய்து வருகிறார். அவர், குடும்பத்தோடு பெரிய செட்டித் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் ... மேலும் பார்க்க

மகளிர் விடுதிக்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்த மளிகைக்கடைக்காரர் - ஒடிசாவில் அதிர்ச்சி

ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் உள்ள கங்காபாடா என்ற இடத்தில் மளிகைக்கடை வைத்திருப்பவர் தீபக் பிரதான்(67). இவரது கடைக்கு அருகில் மகளிர் விடுதி ஒன்று இருக்கிறது. அடிக்கடி அவரது கடை வழியாக பெண்கள் மற்றும் மாண... மேலும் பார்க்க

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது?' - MTC பஸ் தகராறில் முதியவரை கொன்ற போதையில் இருந்த இளைஞன்

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது' என்று கேட்டு தகராறு ஆகி, சென்னையில் ஒரு கொலை நடந்துள்ளது.சென்னை தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் 25 வயதான இளைஞர் அமர்நாத் 70-G மாநகர பஸ்ஸில் ஏறியுள்ளார். அதே பஸ்ஸில் 74... மேலும் பார்க்க

மும்பையில் நள்ளிரவு டி.வி பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்தியை கத்தியால் குத்திய முதியவர் கைது

மும்பை தானேயில் உள்ள ரபோடி கிராந்தி நகரில் வசிப்பவர் முகமது தாரிக் கான்(64). இவர் தனது மனைவி மற்றும் மகள், பேத்தியுடன் வசித்து வந்தார். சம்பத்தன்று முகமது தாரிக் கான் பேத்திக்கு பிறந்தநாள் ஆகும். இதனா... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசம்: பிறந்தநாள் பார்ட்டியில் கேக்கை முகத்தில் தடவியதால் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் என்ற இடத்தில் அங்குள்ள ஜிம் ஒன்றில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பார்ட்டிக்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஜிம்மிற்கு அடிக்க... மேலும் பார்க்க