செய்திகள் :

``பையில் வெங்காயம் வைத்திருந்தால் எந்த ஆபத்தும் வராது" - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

post image

மத்தியப்பிரதேச மாநிலம், சிவபுரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``நான் காரிலோ அல்லது தங்கும் இடத்திலோ ஏசியைப் பயன்படுத்துவதில்லை. மே மற்றும் ஜூன் மாதங்களில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டி வதைக்கும் போதும், மக்கள் என்னிடம் நான் ஏசி பயன்படுத்தாது குறித்துக் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் 'இது சம்பல் மண்ணின் தோல். எனக்கு வெப்பம் ஒரு பொருட்டல்ல' எனப் பெருமையுடன் சொல்லுவேன். நான் பார்ப்பதற்கு இளைஞனாகத் தெரிந்தாலும், எனது ஆன்மா மிகவும் பழைமையானது. பழைய விஷயங்களை நாம் மறந்துவிடக் கூடாது. எப்போதும் உங்கள் சட்டைப் பையில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

ஜோதிராதித்யா சிந்தியா
ஜோதிராதித்யா சிந்தியா

அப்போது உங்களுக்கு எந்த ஆபத்தும் நேராது. இன்றைய காலத்தில் அனைவரும் நவீனப் பெட்டிகளைச் (செல்போன்) சுமந்து திரிகிறார்கள். ஆனால், இந்தத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரோ வெங்காயத்தைச் சுமக்கிறேன். ஆயுர்வேதம் வளர்ச்சி கண்டு வரும் இந்தத் தற்காலச் சூழலில், இது போன்ற பாரம்பர்ய நடைமுறைகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது" என்று அவர் வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாரம்பர்யத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார். ஆனால், பையில் வெங்காயம் வைத்திருப்பது வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் என்பது நவீன மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட தீர்வு கிடையாது.

தேர்தல் முடிந்த சூட்டோடு விநாயகர், காளி கோயிலில் சாமி தரிசனம்; சொந்த ஊரில் வைகோ

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து விட்ட சூழலில் பதிவான அதிக வாக்கு சதவிகிதத்தால் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மே 4 ம் தேதியை திக் திக் மனநிலையுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. முதல்வர் மு.... மேலும் பார்க்க

"எனது இளமைக் காலத்தில் பொன்னான 15 ஆண்டுகளை ஆம் ஆத்மிக்காகவே அர்ப்பணித்தேன், ஆனால்..!" - ராகவ் சதா

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்த ராகவ் சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஒரு பட்டயக் கணக்காளராக எனக்குக் காத்திருந்த நம்ப... மேலும் பார்க்க

இணைந்த 7 எம்.பி-கள்: `மாநிலங்களவையில் பலம் கூடிய பாஜக' - ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) இருந்தனர். இவர்களில் ராகவ் சதா உள்ளிட்ட 7 உறுப்பினர்கள், கடந்த வெள்ளிகிழமை ஆம் ஆத்மி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கா... மேலும் பார்க்க

”நகையை அடகு வச்சி தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்” - மறைந்த தாயை நினைத்து உருகும் தவெக வேட்பாளர்

த.வெ.க-வின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் யு.வி.எம்.ராஜராஜன். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர். இவரது தாய் வான்மதி என்கிற... மேலும் பார்க்க

மதுபான வழக்கு: "இந்த நீதிபதி முன் ஆஜராக மாட்டேன், அதற்கு பதில்.!"- கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "பாஜக பெண்களுக்கு ரூ. 1.80 லட்சம் தரும்" - மோடியின் வாக்குறுதி என்ன?

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத்தேர்தல்... மேலும் பார்க்க