செய்திகள் :

பாவூர்சத்திரம்: போதையில் இளைஞர் அடித்து கொலை; `101'க்கு கால் செய்து நாடகம்- நண்பர் சிக்கியது எப்படி?

post image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரவீன் (வயது 26), இவரும் அதே ஊரில் வடக்குத் தெரு லிவிங்ஸ்டன் மகன் முகிலன் (எ) வசந்த் (20) இருவரும் சிறு வயது முதல் நண்பர்கள். தற்போது இருவரும் சேர்ந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இருவரும் புதிய செல்போன் வாங்குவதற்காக பாவூர்சத்திரம் வந்துள்ளனர். அதன் பின் கீழப்பாவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மது போதையில் பைக்கில் கீழப்பாவூர் - அருணாப்பேரி சாலையில் சென்றபோது இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி முகிலன் (எ) வசந்த், பிரவீனை கீழே தள்ளி தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பிரவீன்

இதில் பிரவீனுக்குத் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. மயக்கமடைந்த பிரவீனை அருகில் உள்ள குளத்தில் மூழ்கடித்து எடுத்துள்ளார். அதிலும் கண் விழிக்காததால் பதறிய வசந்த், பைக் விபத்து ஏற்பட்டு விட்டதாக ஆம்புலன்ஸை அழைத்திருக்கிறார். ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், வசந்த்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் உமா, சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீஸார் வழக்கு பதிவுசெய்து முகிலன் என்ற வசந்திடம் விசாரணை செய்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததில் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முகிலன் என்ற வசந்த் சக நண்பர் பிரவீனைக் கீழே தள்ளி தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தியதில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பாவூர்சத்திரம் போலீஸார் விபத்தை கொலை வழக்காக மாற்றி முகிலன் (எ) வசந்தைக் கைதுசெய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இறந்த பிரவீனுக்கு சரவண பிரியா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது.

குடிபோதையில் சக நண்பரை இளைஞர் கொலைசெய்த சம்பவம், பாவூர்சத்திரம் மற்றும் கல்லூத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி: பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை! - 5 பேரை தேடும் போலீஸ்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த உதய் (வயது: 36) என்பவர் திருச்சியில் நகை மதிப்பிடும் பணியைச் செய்து வருகிறார். அவர், குடும்பத்தோடு பெரிய செட்டித் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் ... மேலும் பார்க்க

மகளிர் விடுதிக்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்த மளிகைக்கடைக்காரர் - ஒடிசாவில் அதிர்ச்சி

ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் உள்ள கங்காபாடா என்ற இடத்தில் மளிகைக்கடை வைத்திருப்பவர் தீபக் பிரதான்(67). இவரது கடைக்கு அருகில் மகளிர் விடுதி ஒன்று இருக்கிறது. அடிக்கடி அவரது கடை வழியாக பெண்கள் மற்றும் மாண... மேலும் பார்க்க

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது?' - MTC பஸ் தகராறில் முதியவரை கொன்ற போதையில் இருந்த இளைஞன்

'பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது' என்று கேட்டு தகராறு ஆகி, சென்னையில் ஒரு கொலை நடந்துள்ளது.சென்னை தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் 25 வயதான இளைஞர் அமர்நாத் 70-G மாநகர பஸ்ஸில் ஏறியுள்ளார். அதே பஸ்ஸில் 74... மேலும் பார்க்க

மும்பையில் நள்ளிரவு டி.வி பார்ப்பதில் தகராறு: மனைவி, மகள், பேத்தியை கத்தியால் குத்திய முதியவர் கைது

மும்பை தானேயில் உள்ள ரபோடி கிராந்தி நகரில் வசிப்பவர் முகமது தாரிக் கான்(64). இவர் தனது மனைவி மற்றும் மகள், பேத்தியுடன் வசித்து வந்தார். சம்பத்தன்று முகமது தாரிக் கான் பேத்திக்கு பிறந்தநாள் ஆகும். இதனா... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசம்: பிறந்தநாள் பார்ட்டியில் கேக்கை முகத்தில் தடவியதால் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் என்ற இடத்தில் அங்குள்ள ஜிம் ஒன்றில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பார்ட்டிக்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஜிம்மிற்கு அடிக்க... மேலும் பார்க்க

தேனி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு; தொடரும் விபத்துகள்

தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள காட்டுப்பள்ளி வாசல் தெருவில் திருப்பதி என்பவருக்குச் சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் (எ) தீனா... மேலும் பார்க்க