செய்திகள் :

நடிகர்கள் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால்.. - எச்சரிக்கும் தயாரிப்பாளர் சங்கம்

post image

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், எல்.கே.சுதீஷ், சுஜாதா விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்த் திரைப்பட மறுசீரமைப்பு குறித்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் ஆகிய சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் புதிய ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கூட்டத்தின் போது

இது பற்றி தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசினால் `` தயாரிப்பாளர்கள் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். அதில் தமிழ் சினிமாவில் தற்போது ஒடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் சுழலைக் கருத்தில்கொண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ளதுபோல, நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் ரெவன்யூ ஷேர் முறையில் தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து படம் நடிக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களில் பங்கேற்றவேண்டும் என்று ஏற்கெனவே நடைபெற்ற பொதுக்குழுவில் முடிவெடுத்து நடிகர் சங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன்
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன்

மேலும் நடிகர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திடவும் வரவில்லை. ஆந்திராவில் உள்ள தயாரிப்பாளர்கள் அங்குள்ள நடிகர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது விரல்விட்டு எண்ணக்கூடிய தயாரிப்பாளர்கள்கூட இனி திரைப்படங்கள் எடுக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ரெவன்யூ ஷேர் முறையில் மட்டுமே தயாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயத்தினை சினிமாத்துறையில் உள்ள அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும், நடிகர்கள் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடை பிடிக்குமானால் தொடர் வேலை நிறுத்தம் செய்யவும் பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம். அதைப்போல ஓடிடி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்த உள்ளனர். அதேபோல, சங்கத்தின் சார்பில் யூடியூப் சேனல் ஒன்றும் ஆரம்பிக்க உள்ளனர்.'' என்கிறார்கள்.

பொதுக்குழுவில்
பொதுக்குழுவில்

பொதுக்குழுவில் பங்கேற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, ``தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு முன்னர் சின்னதாக பிளவுபட்டிருந்தது. தமிழ்க்குமரன் தலைவரான பிறகு ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்தியிருக்கார். தனியாகச் சென்ற அமைப்புகள் இப்போது ஒத்துழைப்பு கொடுக்கும் அமைப்பாக மாறி வருகிறது. ரொம்ப அருமையாகக் கையாளுகிறார். சங்கத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கும் காலகட்டத்தில்கூட அவர் பதவி ஏற்ற சில நாட்களிலேயே தயாரிப்பாளருக்கு இன்ஷுரன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப்பட சங்கம் ஒரு வலுவான நிலைக்கு வரும். நாங்க நினைக்கிறதை சாதிப்போம். நடிகர்களுடன் இணைக்கமாக உட்கார்ந்து பேசுவோம். அவங்களும் தயாரிப்பாளர்களை தூக்கி எறிபவர்கள் அல்ல. தயாரிப்பாளர்கள் மீது நல்ல மரியாதை உள்ளவர்கள் தான் நடிகர்கள். நடிகர்கள் இல்லாமல் தயாரிப்பாளர்கள் இல்லை. தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடிகர்கள் இல்லை. நடிகர்களுடன் உட்கார்ந்து பேசும்போது இணக்கமான சூழல் உருவாகும்'' என்கிறார் எஸ்.ஏ.சி.

Youth: "உன்னால் முடியும், தொடர்ந்து முயற்சி செய்" - ரிஷப் ஷெட்டியைச் சந்தித்த கென் கருணாஸ்

கென் கருணாஸ் இயக்கி, நடித்திருந்த 'யூத்' திரைப்படம் மக்களிடையே வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்னத் தமிழா என இளம் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர்... மேலும் பார்க்க

Hansika Motwani: "அவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை" - ஹன்சிகா ஓபன் டாக்

நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். பிறகு, இந்தத் தம்பதி கடந்த மார்ச் மாதம் விவாகரத்து பெற்றனர். கருத்து வேறுபாடுகள் காரணமா... மேலும் பார்க்க

''அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்; கண்டுபிடிங்க" - சரண்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில... மேலும் பார்க்க

நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்?- வெளிப்படையாக சொன்ன அமர்க்களம் இயக்குநர்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில... மேலும் பார்க்க

Riythvika: 'திட்டமிட்டப்படி நடக்கவில்லை' - திருமணம் பற்றி மனம் திறந்த 'பிக் பாஸ்' ரித்விகா

'மெட்ராஸ்', 'கபாலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரித்விகா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் டைட்டிலையும் வென்றார். ரித்விகாகடந்தாண்டு இவரி... மேலும் பார்க்க