செய்திகள் :

ஈரான்: அணு ஆயுதம் குறித்து பேச தயார்; அதற்கு முன் 'இரண்டு' நிபந்தனைகள் - ஏற்குமா அமெரிக்கா?

post image

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை முதல்முறை மட்டுமே நடந்தது.

கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நடக்கவிருந்த பேச்சுவார்த்தையின் போது, இஸ்லாமாபாத்திற்கு செல்ல அமெரிக்கா தயாராகவே இருந்தது... ஆனால், ஈரான் முறுக்கிக் கொண்டது.

கடந்த வார இறுதியில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள ஈரான் தரப்பு பிரசன்ட் ஆகியிருந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க அதிகாரிகள் இஸ்லாமாபாத் செல்வதை தடுத்துவிட்டார்.

ஆனால், இஸ்லாமாபாத் சென்றிருந்த ஈரான் தரப்பு பாகிஸ்தான் மத்தியஸ்தர்களிடம் மூன்று நிலைகளை கூறியுள்ளது. மூன்று நிலைகள் என்றால் முதல் நிலை நடந்தால், இரண்டாம் நிலை நடக்கும். இரண்டாம் நிலை நடந்தால் மூன்றாம் நிலை நடக்கும்.

ஈரான்- அமெரிக்கா
ஈரான்- அமெரிக்கா

அந்த மூன்று நிலைகள்...

முதல் நிலை: போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்... ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிராக மீண்டும் எந்தவொரு தாக்குதல் தொடங்கப்படாது என்கிற உறுதி வேண்டும்.

இரண்டாம் நிலை: முதல் நிலை ஒப்புக்கொள்ளப்பட்டால், இரண்டாம் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, நிர்வாகம் குறித்து விவாதிக்கப்படும்.

மூன்றாம் நிலை: இந்த முதல் இரு நிலைகளைக் கடந்தால் தான், அணு ஆயுதம் குறித்து ஈரான் பேசும்.

ஈரானிடம் அமெரிக்கா திரும்ப திரும்ப கேட்கும் ஒன்று அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துவது மற்றும் ஒப்படைப்பது ஆகும். ஈரான் குறிப்பிட்டுள்ள முதல் இரண்டு நிலைகளை முடித்தால், மூன்றாம் நிலையில் அணு ஆயுதம் குறித்து பேச ஈரான் தயாராக இருக்கிறது.

ஆனால், அமெரிக்கா இதற்கு ஒப்புக்கொள்ளுமா என்பது தான் இப்போதைய கேள்வி.

மேற்கு வங்கம்: "பாஜக பெண்களுக்கு ரூ. 1.80 லட்சம் தரும்" - மோடியின் வாக்குறுதி என்ன?

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத்தேர்தல்... மேலும் பார்க்க

FBI: குடிபோதையில் தள்ளாடும் அமெரிக்க FBI இயக்குநர் காஷ் பட்டேல்? குற்றச்சாட்டும் பின்னணியும் என்ன?

அமெரிக்காவின் எப்.பி.ஐ இயக்குனராக இருப்பவர் காஷ் பட்டேல். பணி நேரத்தில் மது அருந்துவதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது மட்டுமல்லாது கல்லூரியில் படித்த காலத்திலேயே மது அருந்தி கைது செய்யப... மேலும் பார்க்க

சபரிமலை கோயில் மீது ஹெலிகாப்டர் பறந்த விவகாரம்: தீவிர விசாரணை நடத்தும் பத்தனம்திட்டா எஸ்.பி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு மேல் மிகவும் தாழ்வாக இந்தியக் கடலோர காவல்படைக்குச் (Coast Guard) சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த 23-ம் தேதி பறந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. கோயிலில் இருந்து சும... மேலும் பார்க்க

"ட்ரம்ப் காயமின்றி தப்பிய செய்தி கேட்டு நிம்மதி அடைகிறேன்" - மோடி பதிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம் தெரிவித்து இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மோடியின் பதிவு..."அதிபர் ட்ரம்ப், முதல் ... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் லோட்டஸ்: ``துரோகி" - ஹர்பஜன் சிங் வீட்டுச் சுவற்றில் எழுதிய போராட்டக்காரர்கள்

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் 10 ராஜ்யசபா எம்.பி-க்களில் 7 பேர் திடீரென பா.ஜ.க-வில் இணைந்துள்ளதால் பஞ்சா... மேலும் பார்க்க