செய்திகள் :

சபரிமலை கோயில் மீது ஹெலிகாப்டர் பறந்த விவகாரம்: தீவிர விசாரணை நடத்தும் பத்தனம்திட்டா எஸ்.பி

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு மேல் மிகவும் தாழ்வாக இந்தியக் கடலோர காவல்படைக்குச் (Coast Guard) சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த 23-ம் தேதி பறந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.

கோயிலில் இருந்து சுமார் 5 மீட்டர் உயரத்தில் அந்த ஹெலிகாப்டர் பறந்துள்ளது. ஹெலிகாப்டர் பறந்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. சபரிமலை கோயிலுக்கு மேல்பகுதியில் ஹெலிகாப்டர் பறந்த சமயத்தில் அதில் இருந்த வீரர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுப்பது போன்ற காட்சிகளும் வெளியாகி இருந்தன.

கொச்சியில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் மோசமான காலநிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக திசைமாறி பறந்ததாக இந்தியக் கடலோர காவல்படை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

சபரிமலை முதல் நிலக்கல் வரையிலான பகுதிகள் சிறப்புப் பாதுகாப்பு மண்டலமாக கேரள மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமாக பம்பா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து ஏர் டிராபிக் கண்ட்ரோலரிடம் தகவல் கேட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறந்தது சம்பந்தமாக சபரிமலை சிறப்பு ஆணையர் கேட்டதற்கு இணங்க சபரிமலை நோடல் ஆபீசர் ஏ.டி.ஜி.பி ஸ்ரீஜித் முதற்கட்ட விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மீது ஹெலிகாப்டர் பறந்த காட்சிகள்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மீது ஹெலிகாப்டர் பறந்த காட்சிகள்

வானிலை மாற்றங்கள் காரணமாக ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறக்க நேர்ந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கோ தெரிவிக்கப்படவில்லை என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பறந்தது ஆபத்தான செயல், இது சம்பந்தமாக இந்தியக் கடலோர காவல்படை அளித்த விளக்கம் திருப்திகரமானதாக இல்லை. இது குறித்த விரிவான விசாரணை நடத்தும் பொறுப்பு பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் எஸ்.பி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோயில் மீது பறந்த ஹெலிகாப்டர்
சபரிமலை கோயில் மீது பறந்த ஹெலிகாப்டர்

இது குறித்து பத்தனம்திட்டா போலீஸ் எஸ்.பி ஆனந்த் கூறுகையில், "சபரிமலை மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அந்தப் பகுதியில் ஹெலிகாப்டர் உள்ளிட்டவை பறக்க அனுமதி இல்லை.

அவர்கள் டைவர்ட் ஆகி வந்ததாகக் கூறியுள்ளனர். அது பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். ஹெலிகாப்டரில் இருந்தபடி வீடியோ எடுத்திருப்பது உள்ளிட்டவை குறித்தும் முழுமையாக விசாரித்து வருகிறோம்" என்றார்.

FBI: குடிபோதையில் தள்ளாடும் அமெரிக்க FBI இயக்குநர் காஷ் பட்டேல்? குற்றச்சாட்டும் பின்னணியும் என்ன?

அமெரிக்காவின் எப்.பி.ஐ இயக்குனராக இருப்பவர் காஷ் பட்டேல். பணி நேரத்தில் மது அருந்துவதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது மட்டுமல்லாது கல்லூரியில் படித்த காலத்திலேயே மது அருந்தி கைது செய்யப... மேலும் பார்க்க

"ட்ரம்ப் காயமின்றி தப்பிய செய்தி கேட்டு நிம்மதி அடைகிறேன்" - மோடி பதிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம் தெரிவித்து இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மோடியின் பதிவு..."அதிபர் ட்ரம்ப், முதல் ... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் லோட்டஸ்: ``துரோகி" - ஹர்பஜன் சிங் வீட்டுச் சுவற்றில் எழுதிய போராட்டக்காரர்கள்

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் 10 ராஜ்யசபா எம்.பி-க்களில் 7 பேர் திடீரென பா.ஜ.க-வில் இணைந்துள்ளதால் பஞ்சா... மேலும் பார்க்க

மணிப்பூர்: முதல்வர் வீட்டருகே அரங்கேறிய போர்க்களம்: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ராங்லாபி பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மணிப்பூ... மேலும் பார்க்க

"பாதுகாப்பு குறைப்பாடே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம்" - ட்ரம்ப் பேச்சு

நேற்று வெள்ளை மாளிகையில் டின்னர் நிகழ்ச்சி நடக்கவிருந்தது. அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆ... மேலும் பார்க்க