செய்திகள் :

மணிப்பூர்: முதல்வர் வீட்டருகே அரங்கேறிய போர்க்களம்: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி!

post image

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ராங்லாபி பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு (COCOMI) சார்பில் சனிக்கிழமை (ஏப்ரல் 25) பேரணி நடைபெற்றது. இம்பாலின் பாபுபாரா பகுதியில் உள்ள முதலமைச்சர் யும்னம் கேம்ச்சந்த் சிங்கின் இல்லத்தை நோக்கி நான்கு திசைகளிலிருந்தும் போராட்டக்காரர்கள் திரண்டு வந்தனர்.

மணிப்பூர் சோகம்

இம்பால் கிழக்கு மாவட்டத்தின் குரை லாம்லாங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தடுப்புகளை அமைத்துப் போராட்டக்காரர்களைத் தடுத்தனர். தடையை மீறி முன்னேற முயன்றவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இந்த மோதலில் 22 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போராட்டத்தின் இடையே, COCOMI தலைவர்கள் சிலர் முதலமைச்சரை நேரில் சந்தித்துத் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

சமீபத்திய வன்முறைச் சம்பவங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், பிஷ்ணுபூரில் மத்தியப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

அதேபோல உக்ருல் மாவட்டத்தில் நாகா இனத்தவர் மீதான தாக்குதலுக்குக் காரணமான குக்கி ஆயுதக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அங்கும் மக்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின்போது துணை ராணுவப் படையின் கவச வாகனம் மோதியதில் கிராம மக்கள் இருவர் காயமடைந்தனர்.

மணிப்பூர் முதல்வர் யும்னம் கேம்ச்சந்த் சிங்- பிரதமர் மோடி
மணிப்பூர் முதல்வர் யும்னம் கேம்ச்சந்த் சிங்- பிரதமர் மோடி

உக்ருல் பகுதியில் நாகா கிராமவாசிகள் மீது தாக்குதல் நடத்திய குக்கி தீவிரவாதிகளுக்கு, 'அசாம் ரைபிள்ஸ்' படையினர் பாதுகாப்பு அளித்து ராணுவ சீருடைகளை வழங்கியதாக 'வாய்ஸ் ஆஃப் தி நாகா யூத்' என்ற அமைப்பு பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் இன மோதல்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளால் மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சூழல் உருவாகியுள்ளது.

ஆப்ரேஷன் லோட்டஸ்: ``துரோகி" - ஹர்பஜன் சிங் வீட்டுச் சுவற்றில் எழுதிய போராட்டக்காரர்கள்

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் 10 ராஜ்யசபா எம்.பி-க்களில் 7 பேர் திடீரென பா.ஜ.க-வில் இணைந்துள்ளதால் பஞ்சா... மேலும் பார்க்க

"பாதுகாப்பு குறைப்பாடே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம்" - ட்ரம்ப் பேச்சு

நேற்று வெள்ளை மாளிகையில் டின்னர் நிகழ்ச்சி நடக்கவிருந்தது. அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆ... மேலும் பார்க்க

``லஞ்சப் பணத்தை எலிகள் தின்றுவிட்டன?" - அதிகாரியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பீகார் அரசு அதிகாரியின் தண்டனையை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம், வழக்கின் முக்கிய ஆதாரமான பணத்தை 'எலிகள் தின்றுவிட்டன' என்ற விளக்கத்தைக் கேட்டு கடும் அதிருப்தியும்... மேலும் பார்க்க

பாமக: "உயிருக்கு ஆபத்து" - அன்புமணி மீது ராமதாஸ் உதவியாளர் மீண்டும் புகார்!

"பாமக தலைவர் அன்புமணி தரப்பினரால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் டிஜிபியிடம்... மேலும் பார்க்க