செய்திகள் :

'எல்லாத்துக்கும் காரணம் பீல்டிங்தான்!' - தோல்வி குறித்து அக்சர் படேல்!

post image

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 25) ஆட்டத்தில், சிக்ஸர் மழை பொழிந்த டெல்லி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 264 ரன்கள் என்ற இமாலய இலக்கை டெல்லி அணி நிர்ணயித்த போதிலும், பஞ்சாப் வீரர்கள் அதை அதிரடியாகத் துரத்திப் பிடித்து சாதனை படைத்தனர். இந்தத் தோல்வி குறித்து டெல்லி கேப்டன் அக்சர் படேல் மிகவும் கவலையுடன் பேசினார். 

Axar
Axar

தோல்வி குறித்து அக்சர் படேல் பேசியவை, 'இந்த ஆடுகளத்தின் தன்மையைப் பார்க்கும்போது, பந்துவீச்சாளர்களுக்கு பீல்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், தொடர்ச்சியாக கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டதால் , நாங்கள் தோல்வியடைந்து விட்டோம்.

பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதே உண்மை.அதே சமயம், எங்கள் பந்துவீச்சுப் பிரிவையும் நாங்கள் கவனிக்க வேண்டும். பவர்-பிளேயில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசிய விதம் மற்றும் பீல்டிங்கில் நாங்கள் செய்த தவறுகளே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணங்கள். இந்த விக்கெட்டில் 264 ரன்கள் என்பது மிகப்பெரிய ஸ்கோர். ஐபிஎல் வரலாற்றில் இது ஒரு சாதனை ஸ்கோர் என்பது எங்களுக்கு ஒரு பாசிட்டிவான விஷயம் தான்.

DC vs PBKS
DC vs PBKS

கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்து, நாங்கள் கேட்சுகளைச் சரியாகப் பிடித்திருந்தால், எங்களால் வரிசையாக இரண்டு மூன்று போட்டிகளை வென்றிருக்க முடியும். முக்கியமான தருணங்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமைந்திருக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரே தவறையே நாங்கள் மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருக்கிறோம். நாங்கள் மீண்டும் சென்று எங்குத் தவறு நடந்தது என்பதை ஆராய்வோம்," என்று அக்சர் படேல் பேசினார்

'எவ்வளவு அடிச்சாலும் பத்தல; ஒண்ணுமே புரியலங்கய்யா!' - குழம்பிய ராஜஸ்தான்; அடிதடி சன்ரைசர்ஸ்!

"என்னதான் ஆச்சு நம்ம ஐபிஎல்லுக்கு?" - இதுதான் இப்போதிருக்கும் பழைய ஐபிஎல் ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ஒரு காலத்தில் 150 ரன்கள் எடுத்தாலே "கெத்தா" டிஃபெண்ட் செய்யலாம் என்று நினைத்த காலம் போய்... மேலும் பார்க்க

'டெல்லியால முடியும்னா எங்களாலயும் முடியும்!' - ரெக்கார்ட் சேஸின் ரகசியம் பகிரும் ஸ்ரேயாஸ்

பஞ்சாப் vs டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 264 என்ற இமாலய இலக்கை அடிக்க, அதை 19வது ஓவரிலேயே எட்டி பிடித்து சாதனை படைத்துள்ளது ஷ்ரேயா... மேலும் பார்க்க

'மைதானத்துக்குள் வந்த ஆம்புலன்ஸ்; ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட லுங்கி இங்கிடி!' - என்ன நடந்தது?

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் கேட்ச் பிடிக்க முயல்கையில் லுங்கி இங்கிடி தவறி விழுந்து பலத்த அடிபட மைதானத்துக்குள்ளே... மேலும் பார்க்க

'அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்!'; மெலிந்த தோற்றத்தில் பென் ஸ்டோக்ஸ் - எதனால் இந்த மாற்றம்?

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், சமீபத்திய வீடியோ ஒன்றில் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.Ben Stokesஇங்கிலாந்து அணிய... மேலும் பார்க்க

'வந்துருச்சு...வந்துருச்சு மாற்றம் வந்துருச்சு!' - லோனேஷ் லனகராஜின் கூற்றை உண்மையாக்கிய CSK!

சென்னை அணிக்கு நேற்றைய போட்டியை வென்று கொடுத்தது அகீல் ஹூசைனும் நூர் அகமதுவுமே. இருவருமே சரமாரியாக விக்கெட்டுகளை எடுத்துவிட்டு முகத்தை மூடிக் கொண்டு வித்தியாசமாக செலிப்ரேட் செய்கிறார்கள். 'நீங்க ஏன் ம... மேலும் பார்க்க

MI vs CSK: 'இந்த வெற்றியை நான் அவருக்கே அர்ப்பணிக்கின்றேன்' - கேப்டன் ருதுராஜ் உருக்கம்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்23) சென்னை vs மும்பை அணிகளுக்கு இடையிலனா போட்டி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில... மேலும் பார்க்க