செய்திகள் :

``லஞ்சப் பணத்தை எலிகள் தின்றுவிட்டன?" - அதிகாரியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

post image

லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பீகார் அரசு அதிகாரியின் தண்டனையை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம், வழக்கின் முக்கிய ஆதாரமான பணத்தை 'எலிகள் தின்றுவிட்டன' என்ற விளக்கத்தைக் கேட்டு கடும் அதிருப்தியும் வியப்பும் தெரிவித்தது.

பீகார் மாநிலத்தில் குழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்த அருணா குமாரி என்பவர், ரூ.10,000 லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால், இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டில் பாட்னா உயர் நீதிமன்றம் அவருக்குச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

லஞ்சம்
லஞ்சம்

பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஒரு விசித்திரமான தகவல் இடம் பெற்றிருந்தது. அதில், ``லஞ்சமாகக் கைப்பற்றப்பட்ட பணத்தை நீதிமன்றப் பாதுகாப்பு அறையில் இருந்த 'எலிகள் தின்றுவிட்டன'. அதனால் பணக்கற்றைகளை நீதிமன்றத்தில் சாட்சியமாகச் சமர்ப்பிக்க முடியவில்லை. பணம் நேரடியாக இல்லாவிட்டாலும், பாதுகாப்பு அறை பதிவேட்டில் பணம் வைப்பிலிடப்பட்டதற்கான குறிப்பு இருப்பதே குற்றத்தை உறுதி செய்யப் போதுமானது என்று கூறி உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது." என அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அருணா குமாரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ``கைப்பற்றப்பட்ட பணக்கற்றைகள் எலிகளால் அழிக்கப்பட்டுவிட்டன என்ற தகவலை அறிந்து நாங்கள் பெரும் வியப்படைந்தோம். இது மாநில அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டுமல்ல, பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது.

நீதிபதி
நீதிபதி

எலிகள் பணத்தைத் தின்றன என்ற விளக்கம் நம்பத்தகுந்ததாகத் தெரியவில்லை." எனக் கூறி ஆதாரங்கள் அழிக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அருணா குமாரிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்தனர். அத்துடன் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆதாரமாக இருந்த பணமே மாயமான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக: "உயிருக்கு ஆபத்து" - அன்புமணி மீது ராமதாஸ் உதவியாளர் மீண்டும் புகார்!

"பாமக தலைவர் அன்புமணி தரப்பினரால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் டிஜிபியிடம்... மேலும் பார்க்க

"ராஜிவ் கொலையில் திமுகவுக்குச் சம்பந்தம் என்பதால்தான்..." - ராகுல் குறித்து சி.டி.ஆர் நிர்மல் குமார்

தவெகவின் இணைப் பொதுச்செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார்.Nirmal Kumarநிர்மல் குமார் பேசியதாவது, ''இ... மேலும் பார்க்க

தெலங்கானா : 'அப்பா முன்ன மாதிரி இல்ல!' - புது கட்சி தொடங்கிய சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!

தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ்வின் மகள் கவிதா 'தெலுங்கானா ராஷ்டிர சேனா' என்கிற புதிய கட்சியை இன்று தொடங்கியிருக்கிறார். TRSதெலங்கானாவில் ஒரு தனியார் விடுதியில் கட... மேலும் பார்க்க

இந்திய ரயில்வேயில் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை; பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படுமா?

இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தைக் குறைக்க அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில், சுமார் 29,608 பணியாளர்களைக் கு... மேலும் பார்க்க