செய்திகள் :

தேனி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு; தொடரும் விபத்துகள்

post image

தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள காட்டுப்பள்ளி வாசல் தெருவில் திருப்பதி என்பவருக்குச் சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் (எ) தீனா ஆகிய நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

தேர்தல் விடுமுறை காரணமாக இரண்டு நாள்கள் பணிக்கு யாரும் வராமல் தொழிற்சாலை மூடிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு நாள்களுக்குப் பிறகு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வந்த தினேஷும், சூர்யாவும் அடைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிப்பதற்காக மூலப்பொருட்கள் வைத்துள்ள அறையைத் திறந்து உள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த அறையில் வெடி விபத்து ஏற்பட்டு அறையைத் திறந்த சூர்யாவும் தினேஷும் உடல் சிதறி பலியாகி உள்ளனர் .

இதனைப் பார்த்த அவர்களுடன் பணிபுரிய வந்த மற்ற இருவரும் வெளியே அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் உடல் சிதறி கிடந்த இறந்தவர்களின் உடற்பாகங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தேனி பட்டாசு ஆலை வெடிவிபத்து
தேனி பட்டாசு ஆலை வெடிவிபத்து

மேலும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் வெடி விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பம் நகர் பகுதியில் பட்டாசு ஆலை இல்லாத சூழ்நிலையில் நடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இந்தப் பட்டாசு ஆலை புதிதாகத் திறக்கப்பட்டது.

திருவள்ளூர்: ஏசி வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த விபரீத முடிவு? கணவரிடம் விசாரணை; என்ன நடந்தது?

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோனிகா (25). இவர்கள் இருவரும் பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் படித்தனர். அப்போது இர... மேலும் பார்க்க

5 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 5 மரண தண்டனை; சிவகங்கையை அதிர வைத்த போக்சோ வழக்கு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளர் சந்திரன் (49). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு சாதாரண குடும்பஸ்தனாக வலம் வந்த இ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: மகளைக் கொலை செய்த இளைஞர்; 5 மாதங்கள் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய தந்தை

தஞ்சாவூர் அருகே உள்ள பிராந்தை பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(53). தி.மு.க-வைச் சேர்ந்த இவர் ஆலங்குடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது மகள் காவியா(26). இவர், ஆலங்குடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்ப... மேலும் பார்க்க

ராம்குமார் மரண வழக்கு: தந்தையின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மரணமடைந்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்ததற்கு எதிரான மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ர... மேலும் பார்க்க

சென்னை: தோழியைக் கொலைசெய்து விட்டு, உயிரை மாய்த்த இளைஞர்; போலீஸ் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், பாரதி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரின் மகள் பவ்யா (21). இவரின் ஆண் நண்பர் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் (21). இவர்கள் இருவரும் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

சென்னை: பெண் டான்ஸ் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை - பதிவு நம்பரால் சிக்கிய இளைஞர்

சென்னையைச் சேர்ந்த கிளாசிக்கல் டான்ஸ் மாஸ்டரான இளம்பெண் ஒருவர் 21-ம் தேதி, அடையாறு சாஸ்திரி நகர் வழியாக பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ஆள... மேலும் பார்க்க