செய்திகள் :

ராம்குமார் மரண வழக்கு: தந்தையின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

post image

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மரணமடைந்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்ததற்கு எதிரான மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறையிலேயே மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

கொலை செய்யப்பட்ட சுவாதி
கொலை செய்யப்பட்ட சுவாதி

ஆனால், உண்மைகளை மூடிமறைக்கவே ராம்குமார் சிறையிலேயே கொலை செய்யப்பட்டதாக அப்போதே பலமான சந்தேகங்கள் எழுந்தன.

இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், காவல் ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்ற முடிவுக்குவந்து, வழக்கை முடித்துவைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமாரின் தந்தை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதனை விசாரித்த நீதிபதிகள், காவல் துறை மற்றும் மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவின் அறிக்கைகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும், அதில் தலையிட எந்த காரணமும் இல்லை எனவும் கூறி, ராம்குமாரின் தந்தை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்திருக்கின்றனர்.

சென்னை: தோழியைக் கொலைசெய்து விட்டு, உயிரை மாய்த்த இளைஞர்; போலீஸ் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், பாரதி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரின் மகள் பவ்யா (21). இவரின் ஆண் நண்பர் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் (21). இவர்கள் இருவரும் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

சென்னை: பெண் டான்ஸ் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை - பதிவு நம்பரால் சிக்கிய இளைஞர்

சென்னையைச் சேர்ந்த கிளாசிக்கல் டான்ஸ் மாஸ்டரான இளம்பெண் ஒருவர் 21-ம் தேதி, அடையாறு சாஸ்திரி நகர் வழியாக பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ஆள... மேலும் பார்க்க

"வெளிநாட்டுப் பாணியில் காதலைச் சொல்கிறேன்" - காதலனைக் கட்டிவைத்து எரித்து கொன்ற பெண்; என்ன நடந்தது?

பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் வசித்து வந்தவர் பிரேர்னா (27). இவர் அங்குள்ள மொபைல் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே கடையில் வேலை செய்து வந்த கிரண் என்பவரை பிரேர்னா காதலித... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த தாய்; 11 வயது மகனைக் கொன்று டிரம்மில் மறைத்த நபர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் வேலை செய்து வந்தார். ஆஷா வீட்டு வேலை செய்து வந்தார். ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த மதுரா(45) என்பவர் ... மேலும் பார்க்க

விருதுநகர்: தேர்தல் கால ஆர்டர்; விதிமீறல், அதிக பணிச்சுமை! பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த 19-ம்... மேலும் பார்க்க

காதலை கைவிட மறுப்பு: 16 வயது மகளை கொலை செய்து முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் தெரியாமல் செய்த தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் விஜய் செளபே. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 10வது வகுப்பு படித்து வரும் அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது விஜய்-க்கு தெரிய வந்தது. என... மேலும் பார்க்க