செய்திகள் :

RCB Vs GT: "நாங்க பயமில்லாம விளையாட இதுதான் காரணம்.!"-ஆட்டநாயகன் விராட் கோலி

post image

ஐபிஎல் தொடரின் நேற்றையப் ( ஏப்ரல். 24) போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதின.

இதில் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

குஜராத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 44 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 81 ரன்களை விளாசி அசத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

விராட் கோலி
விராட் கோலி

விருது வென்ற பிறகு பேசிய விராட் கோலி, " எங்களிடம் மிகச்சிறப்பான பேட்டிங் வரிசை இருக்கிறது.

நல்ல கிரிக்கெட் ஷாட்களை ஆடி பந்துவீச்சாளர்களை திணறடிக்கக்கூடிய வீரர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள்.

அதேபோல டிம் டேவிட் மற்றும் ரொமாரியோவின் அதிரடி ஆட்டமும் எங்களிடம் இருக்கிறது. இக்கட்டான சூழலில் களமிறங்கி, ஆட்டத்தைப் புரிந்து விளையாடக்கூடிய க்ருணாலின் கிரிக்கெட் அறிவும் எங்களுக்குப் பலம் சேர்க்கிறது.

அவரது பந்துவீச்சில் இதை நீங்கள் பார்க்கலாம். எனவே, இந்த கூட்டணிதான் நாங்கள் களமிறங்கி பயமில்லாமல் விளையாட பெரும் நம்பிக்கையைத் தருகிறது.

படிக்கல்லின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் முதல் பாதியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அவர் மீது அழுத்தம் விழாமல் இருக்க, நானும் அவ்வப்போது பவுண்டரிகளை அடிக்க வேண்டியது எனது பொறுப்பாக இருந்தது.

விராட் கோலி
விராட் கோலி

அந்த பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து அழுத்தத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டமாக இருந்தது.

எந்தவித சந்தேகமும் இல்லாமல், மிகத் துல்லியமான திட்டத்துடன் அந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம். அதுதான் எங்களுக்குக் கைகொடுத்தது.

சொந்த மண்ணில் (சின்னசாமி மைதானம்) விளையாடி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பாக இருந்தது. இங்கு விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வென்றுள்ளது எங்களுக்கு ஒரு மிகச்சிறந்த தொடக்கமாகும்" என்று பேசியிருக்கிறார்.

CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.23) ஆட்டத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால், மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார... மேலும் பார்க்க

"பவர்-பிளேல விக்கெட்டை விட்டதுதான் பெரிய அடி!" - தோல்விக்குப் பின் ஹர்திக்!

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 23)எல்-கிளாசிகோ ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, சீரான இடைவெளியில... மேலும் பார்க்க

நாதன் எல்லிஸுக்கு பதிலாக இணைந்த ஆஸி., வீரர் ஸ்பென்சர் ஜான்சன்! - சிஎஸ்கே-வுக்கு கைக்கொடுப்பாரா?

த் த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. வழக்கமாக புள்ள... மேலும் பார்க்க

SRH vs DC: "கேமராவை என் அப்பா பக்கம் திருப்பி அவர் ரியாக்ஷனைப் பாருங்க" - ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல் 21) ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.அபிஷேக் சர்மாவின் அதிரடி சதமே சன்ரைசர்ஸ் அணியின் ... மேலும் பார்க்க

SRH Vs DC: "பீல்டிங் மட்டும் கைகொடுத்திருந்தால் மேட்ச் மாறியிருக்கும்"– தோல்வி குறித்து அக்சர் படேல்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 21) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் போராடித் தோல்வியடைந்தது. அபிஷேக் சர்மா மற்றும் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் இ... மேலும் பார்க்க

IPL: கேன்வாஸ் ஷுவில் பயிற்சி; சைக்கிளில் பயணம்; மும்பை அணியில் அசத்தும் அஸ்வனி குமார் - யார் இவர்?

'எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்' என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்... மேலும் பார்க்க